தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

யாழ் மழழைகளின் எதிர்காலம் பணத்துக்காய் ஏலம் விடப்படும் கொடுமை: அதிர்ச்சி ரிப்போர்ட்

Go down

யாழ் மழழைகளின் எதிர்காலம் பணத்துக்காய் ஏலம் விடப்படும் கொடுமை: அதிர்ச்சி ரிப்போர்ட் Empty யாழ் மழழைகளின் எதிர்காலம் பணத்துக்காய் ஏலம் விடப்படும் கொடுமை: அதிர்ச்சி ரிப்போர்ட்

Post  meenu Sat Mar 16, 2013 1:51 pm







  • 0


யாழ் மழழைகளின் எதிர்காலம் பணத்துக்காய் ஏலம் விடப்படும் கொடுமை: அதிர்ச்சி ரிப்போர்ட் Untitled-11

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல ஆரம்ப பாடசாலை ஒன்றினால் பிஞ்சு மாணவர்களின்
எதிர்காலம் பேரம்பேசப்படும் கொடுமை, பெற்றோர் ஒருவரினால் TCNN
செய்திப்பிரிவின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இவ் வன்செயல், பாதிப்புக்கு உள்ளான அரசஊழியர் ஒருவரினால் TCNN இன் யாழ் நிருபருக்கு நேரிடையாக தெரிவிக்கப்பட்டது.

தம் பிள்ளைகளை எப்படியாவது கற்றோர் சபையில் தலைநிமிர்ந்திடச் செய்ய
வேண்டும் என்பதே ஒவ்வொரு பொறுப்புள்ள பெற்றோரின் இன்றைய கனவாக உள்ளது.

செல்லவத்தில் பல நிலைகளில் பாரிய அழிவுகளை எதிர்கொண்ட நம் சமூகத்தின் நிலையான சொத்தாக என்றும் விளங்குவது இந்த கல்வி செல்வமேயாகும்.

தரம் 1 இல் இருந்து தரம் 5 வரை பள்ளி வாழ்வில் முக்கிய காலகட்டமாக
கருதப்படுகிறது. காரணம் 5ஆம் தர புலைமைப்பரிசில். அப் பரீட்சையில்
சித்திபெற்றாலே, தேசிய பாடசாலைகளில் அனுமதி பெற்று கல்வியை தொடர முடியும்
என்ற நிலை காணப்படுகிறது.

அவ்வகையில், யாழில் ஆரம்பபாடசாலைகளில் முன்னனியாக திகழும் ஓர் இந்து ஆரம்ப பாடசாலையிலேயே இவ் மிலேச்சத்தனம் அரங்கேறியுள்ளது.

அங்கு அனுமதிக்காக பதிவுசெய்யும் மாணவர்களுக்கு முதல்கட்டமாக பரீட்சை
நடாத்தப்படுகிறது. அப் பரீட்சையில் தேர்வாகும் மாணவர்களுக்கு
நேர்முகப்பரீட்சைக்கான அழைப்பு விடுக்கப்படுகிறது.

அங்கு தான் பணம் பறிக்கும் கபட நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

நேர்முகப்பரீட்சையின் பின்னர் தேர்வாகும் மாணவர்களின் பெற்றோருக்கு ஓர் பிரத்தியோக கூட்டம் ஒழுங்குசெய்யப்படுகிறது.

அதை நடாதுவோர், அப் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினர்.

தனித்தனியாக ஒவ்வொரு பெற்றோரிடமும் கலந்துரையாடும் அவர்கள், பெற்றோரின் தொழில் அடிப்படையில் சுமார் 20,000 தொடக்கம் 50,000 வரை நன்கொடை கேட்கிறார்களாம். அதற்கு சம்மதிப்பவர்களுக்கே அனுமதி.

அவ்வாறு கேட்கும் பணத்துக்கு சாமர்த்தியமாக ஓர் விளக்கமும் அளிக்கப்படுகிறதாம்.

“உங்கள் பிள்ளை இங்கு 5 வருடங்கள் கற்கப்போகிறது. அதாவது 60
மாதங்கள். 50000 ஐ மாத ரீதியாக பிரித்தால் 833 ரூபாய்கள். உங்கள்
குழந்தையின் எதிர்காலத்துக்காய் மாதம் 800 ரூபாய் செலவுசெய்ய உங்களால்
முடியாதா…..????”


என கேட்டு சாமர்த்தியமாக மடக்கிவிடுகிறார்களாம்.

பணம் கொடுக்க முடியாத ஏழை மாணவர்களின் நிலை என்ன??

இது போன்ற சமுதாய சீர்கேடுகள் நிச்சயமாக தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்பதே TCNN செய்திப் பிரிவின் வேண்டுகோள்….
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  யாழ் மழழைகளின் எதிர்காலம் பணத்துக்காய் ஏலம் விடப்படும் கொடுமை: அதிர்ச்சி ரிப்போர்ட்
» இணையத்தில் பாலியல் தள பார்வையாளர்களில் 43% சிறுவர்கள்: அதிர்ச்சி ரிப்போர்ட்!
» குப்பைக்கு போகும் 50% உணவு பொருட்கள்! – அதிர்ச்சி ரிப்போர்ட்!
» அதிகமாக டிவி பார்க்கும் ஆண்கள் அப்பா ஆக முடியாதாம்... அதிர்ச்சி ரிப்போர்ட்
» ஏலத்தில் விடப்படும் நெப்போலியனின் கடிதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum