தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வெற்றியின் ரகசியம்

Go down

வெற்றியின் ரகசியம் Empty வெற்றியின் ரகசியம்

Post  birundha Thu Jan 17, 2013 4:02 pm

* கொக்கு சிறிய மீன்களை ஓடவிட்டு, பெரிய மீன்கள் வரும்வரை காத்திருந்து பிடிக்கும். அதுபோல, அறிவுடைய நல்லவர்கள். ஒரு செயலில் வெற்றி பெற தகுந்த நேரம் வரும்வரை அமைதியாக காத்திருப்பர்.
* நீர் வற்றிய காலத்தில் பறவைகள் குளத்தைவிட்டு ஓடிவிடும். அதுபோல, ஒருவன் செல்வத்தை இழந்த காலத்தில் உதவாமல் ஓடும் உறவினர்கள் உண்மையானவர்கள் அல்ல. நீரற்ற குளத்தில் கொட்டி, ஆம்பல் போன்ற தாவரங்கள் எப்படி காய்ந்து கிடக்குமோ அதுபோல அப்போதும் பிரியாமல் இருப்பவர்களே சிறந்தவர்கள்.
* பசி என்னும் பாவி ஒருவனைப் பிடித்துவிட்டால் தன்மானம், குடிப்பெருமை, கல்வி, வளமை, அறிவு, கொடை, தவம், உயர்வு, ஊக்கம், காதல் என்னும் பத்து குணங்களும் இருந்த இடம் தெரியாமல் ஒருவனை விட்டு விலகிவிடும்.
* வருமானத்திற்கு தகுந்தபடி செலவு செய்ய வேண்டும். அதிக செலவு செய்பவன் மானத்தை இழப்பான். திருடன் என்னும் பெயர் பெறுவான். பாவத்தைச் செய்து அழிவான். மற்றவர்களால் பழிக்கப்படுவான்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum