எம்.ஜி.ஆர்.,சிவாஜியுடன் நடித்த பழம்பெரும் நடிகை ராஜசுலோசனா மரணம்
Page 1 of 1

பழம் பெரும் நடிகை ராஜ சுலோசனா சென்னையில் இன்று அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 78. மடிப்பாக்கம் சதாசிவம் நகரில் குடும்பத்துடன் ராஜசுலோசனா வசித்து வந்தார். அவருக்கு நான்கு நாட்களுக்கு முன்பு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சிறுநீரகத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை 2.45 மணிக்கு உயிர் பிரிந்தது. மரணம் அடைந்த ராஜசுலோசனா 1950 மற்றும் 60களில் முன்னணி கதாநாயகியாக இருந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் 350 படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ், ராஜ்குமார், எஸ்.எஸ்.ராஜேந்திரன், நம்பியார் போன்றோருடன் ஜோடியாக நடித்துள்ளார்.
கைதி கண்ணாயிரம் படத்தில் ராஜசுலோசனா பாடிய கொஞ்சி கொஞ்சி பேசி மதிமயக்கும் வஞ்சகளின் உள்ளம் வலை விரிக்கும் பாடலும், எம்.ஜி.ஆர். ஜோடியாக நல்லவன் வாழ்வான் படத்தில் பாடிய குற்றால அருவியிலே குளித்தது போல் இருக்குதா என்ற பாடலும் அந்த காலத்தில் பட்டி தொட்டியெங்கும் கலக்கின.
ஜெய்சங்கரின் துணிவே துணை படத்தில் கொள்ளை கூட்ட தலைவியாகவும், எம்.ஜி.ஆரின் இதயக்கனியில் வில்லியாகவும் நடித்துள்ளார். படித்தால் மட்டும் போதுமா படத்தில் சிவாஜியை மணந்து படிப்பறிவு இல்லாதவர் என அவரை வெறுக்கும் கேரக்டரில் பிரமாதமாக நடித்து இருந்தார்.
அரசிளங்குமரி, மகாகவி காளிதாஸ், கவலை இல்லாத மனிதன், தாய் மகளுக்கு கட்டிய தாலி, தை பிறந்தால் வழி பிறக்கும், வணங்காமுடி, அம்பிகாபதி, அலாவுதீனும் அற்புத விளக்கும், ரங்கோன் ராதா போன்றவை ராஜசுலோசனா நடிப்பில் வந்த முக்கிய படங்கள். ராஜசுலோசனா 1935-ல் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பிறந்தார். அவரது தந்தை பக்தவச்சலம் நாயுடு ரெயில்வேயில் பணியாற்றினார்.
பக்தவச்சலம் நாயுடு பதவி உயர்வில் சென்னைக்கு மாற்றலான போது சென்னை வந்து குடியேறினார். இங்கு பரத நாட்டியம் கற்று முன்னணி பரதநாட்டிய கலைஞரானார். 1953-ல் குணசாகரி என்ற கன்னட படத்தில் அறிமுகமாகி நடிகையானார். இயக்குனரும், நடிகருமான சி.எஸ்.ராவை திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு தேவி, ஸ்ரீ என்ற மகள்கள் உள்ளனர். இவர்கள் இரட்டை குழந்தைகள் ஆவர். ஷாம்சுந்தர் என்ற மகனும் உள்ளார். இவர் அமெரிக்காவில் இருக்கிறார். ராஜசுலோசனா மரணம் அடைந்த தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டு சென்னை வந்து கொண்டு இருக்கிறார்.
நாளை பகல் 1 மணிக்கு இறுதி சடங்கு நடக்கிறது. ராஜசுலோசனா உடல் மடிப்பாக்கத்தில் உள்ள வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. ஏராளமான நடிகர், நடிகைகள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எம்ஜிஆர், சிவாஜி படங்களில் நடித்த நடிகை ராஜசுலோசனா மரணம்
» பழம்பெரும் நடிகை சரோஜா மரணம்!
» பழம்பெரும் நடிகை காந்திமதி மரணம்
» பழம்பெரும் நடிகை எம்.பானுமதி மரணம்
» பழம்பெரும் நடிகர் பெரிய கருப்பு தேவர் மரணம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum