தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆபாசமாக நடித்ததாக என் மீது வழக்கா?: அனுஷ்கா ஆவேசம்

Go down

ஆபாசமாக நடித்ததாக என் மீது வழக்கா?: அனுஷ்கா ஆவேசம் Empty ஆபாசமாக நடித்ததாக என் மீது வழக்கா?: அனுஷ்கா ஆவேசம்

Post  ishwarya Sat Mar 16, 2013 11:43 am

தெலுங்கு படங்களில் ஆபாசமாக நடிப்பதாக அனுஷ்கா, பிரியாமணி மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது. சமூக சேவகர் சுப்புடு என்பவர் ஐதராபாத் கோர்ட்டில் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.

அனுஷ்காவும் பிரியாமணியும் அரை குறை ஆடையில் கவர்ச்சியாக நடிக்கின்றனர் என்றும் அவர்கள் படங்களை பார்க்கும் இளைஞர்கள் கெட்டுப்போக வாய்ப்பு உள்ளது என்றும் மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும்படி போலீசுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் பிரியாமணியும், அனுஷ்காவும் அதிர்ச்சியாகியுள்ளனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதற்காக இருவரும் ஆபாசமாக நடித்த படங்களை போலீசார் பார்த்து வருகின்றனர். எந்தெந்த படங்களில் ஆபாசமாக வருகிறார்கள் என்ற விவரங்களையும் காட்சிகளையும் சேகரிக்கிறார்கள். ஓரிரு நாட்களில் வழக்குப்பதிவு செய்யப்படும் என தெரிகிறது.

இதுகுறித்து அனுஷ்காவிடம் கேட்டபோது, ஆவேசமானார். நான் ஆபாசமாக நடிப்பதாக வழக்கு போடுவது என்பது விளம்பர யுக்தி. இதற்கெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன். எனது முழு கவனமும் நடிப்பில்தான் இருக்கிறது. ‘ருத்ரம்மா’ என்ற புராண படத்தில் தற்போது நடிக்கிறேன் என்றார்.

பிரியாமணி கூறும்போது, நான் ஆபாசமாக நடிக்கவில்லை. விளம்பரத்துக்காகவே புகார் கூறப்பட்டு உள்ளது. வழக்கு போட்டவர் குறிப்பிட்டுள்ள படத்தில் நான் சேலை உடுத்தி வருகிறேன். அரைகுறை ஆடை எதுவும் அணியவில்லை. உண்மை தெரியாமல் என் மேல் குற்றம் சாட்டப்படுகிறது என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆபாசமாக நடித்ததாக வழக்கு: அனுஷ்கா ஆவேசம்
» ஆபாசமாக நடித்ததாக புகார் அனுஷ்கா, பிரியாமணி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்: கோர்ட் உத்தரவு
» காஜல் மீது தமன்னாவுக்கும் அனுஷ்கா மீது த்ரிஷாவுக்கும் கோபம்!!
»  கர்ப்பமானதால் படத்தில் இருந்து நீக்குவதா? ஐஸ்வர்யாராய் ஆவேசம்; இந்தி டைரக்டர் மீது வழக்கு
» ஆசின் மீது நடவடிக்கை உறுதி – ராதாரவி ஆவேசம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum