தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இயக்குனர் மகனுடன் காதலில் விழுந்தார் ஆண்ட்ரியா!

Go down

இயக்குனர் மகனுடன் காதலில் விழுந்தார் ஆண்ட்ரியா! Empty இயக்குனர் மகனுடன் காதலில் விழுந்தார் ஆண்ட்ரியா!

Post  ishwarya Sat Mar 16, 2013 11:36 am

சமீபத்தில் நடிகை ஆண்ட்ரியாவும், கொலவெறி புகழ் இசையமைப்பாளர் அனிருத்தும் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது. இந்நிலையில், நடிகை ஆண்ட்ரியாவை தீவிரமாக காதலிப்பதாக இயக்குனர் பாசில் மகனும், பிரபல மலையாள நடிகருமான பாஹாத் பாசில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழில் விஜய் நடித்த காதலுக்கு மரியாதை படத்தை இயக்கியவர் இயக்குனர் பாசில். இவருடைய மகன் பாஹாத் பாசில். மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். இவரும் ஆண்ட்ரியாவும் இணைந்து ‘அன்னயும் ரசூலும்’ என்ற படத்தில் நடித்தனர். இப்படத்தில் இருவரும் ரொம்பவும் நெருக்கமாகவே நடித்திருந்தனர்.

இந்த படத்தில் நடித்தபோதுதான் ஆண்ட்ரியாவும் தானும் காதலிக்க ஆரம்பித்ததாக பாஹாத் பாசில் கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறும்போது, இருவரும் டேட்டிங் வைத்துக் கொள்ளும் அளவிற்கு நெருக்கமாக பழகி வருகிறோம்.

அவரை நான் தீவிரமாக காதலிக்கிறேன். ‘அன்னயும் ரசூலும்’ படத்தில் நடித்தபோதே இருவரும் காதலிக்க ஆரம்பித்து விட்டோம் என கூறியுள்ளார். ஆனால் இதுகுறித்து ஆண்ட்ரியா இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum