தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முள்ளங்கி ரைஸ்

Go down

முள்ளங்கி ரைஸ்                                                    Empty முள்ளங்கி ரைஸ்

Post  ishwarya Fri Mar 15, 2013 2:46 pm



தேவையான பொருட்கள் :

சாதம் - ஒரு கப்
முள்ளங்கித் துருவல் - ஒரு கப்
பச்சை மிளகாய் - 3
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
சோம்பு - கால் டீஸ்பூன்
பட்டை - சிறிய துண்டு
பிரிஞ்சி இலை (சிறியது) - ஒன்று
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
புதினா,கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

* வெங்காயம், தக்காளியை நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.

* பச்சை மிளகாய், பட்டை, சோம்பு மூன்றையும் ஒன்றாக சேர்த்து அரைக்கவும்.

* காடாயில் எண்ணெயை விட்டு சூடாக்கி, பிரிஞ்சி இலை தாளித்து வெங்காயம், தக்காளியை வதக்கவும்.

* பின் இஞ்சி - பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

* இதனுடன் துருவிய முள்ளங்கி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து சுருள வதக்கவும்.

* கடைசியாக சாதத்தை சேர்த்து நன்கு கிளறி, நறுக்கிய புதினா, கொத்தமல்லி தூவி அலங்கரித்தால்... முள்ளங்கி ரைஸ் ரெடி!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum