தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஓட்ஸ் கோதுமை ரவை இட்லி

Go down

ஓட்ஸ் கோதுமை ரவை இட்லி Empty ஓட்ஸ் கோதுமை ரவை இட்லி

Post  ishwarya Fri Mar 15, 2013 12:53 pm

தேவையான பொருட்கள்:-

ஓட்ஸ்- 1 கப்.
கோதுமை ரவை- 1/2 கப்.
தயிர்- 1/2 கப்.
உப்பு- தேவையான அளவு.
பேக்கிங் சோடா- 1/2 ஸ்பூன்.
பீன்ஸ்- 6.
கேரட்- 1(சிறியது).
பச்சை மிளகாய்- 3.
கறிவேப்பிலை,கொத்தமல்லி- சிறிதளவு
தாளிக்க- கடுகு. சீரகம், உளுத்தம் பருப்பு, எண்ணெய்.

செய்முறை.

வெறும் கடாயில் ஓட்ஸை போட்டு 3 நிமிடம் வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

பீன்ஸ், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

கேரட்டை துருவிக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து அதில் பீன்ஸ், கேரட், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு 5 நிமிடம் வதக்கவும். பின்னர் கோதுமை ரவையை போட்டு வறுக்கவும்.

வதக்கிய பொருட்களை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் பொடித்த ஓட்ஸ், தேவையான அளவு உப்பு, தயிர், 1/2 கப் தண்ணீர், கொத்தமல்லி, பேக்கிங் சோடா சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.

மாவினை 10 நிமிடம் ஊற வைத்து இட்லி தட்டில் ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.

குறிப்பு....

மாவை கரைக்கும் போது நிறைய தண்ணீர் சேர்க்க கூடாது. அப்படி சேர்த்தால் இட்லி நன்றாக இருக்காது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum