தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வெந்தயக்கீரை ரசம்

Go down

வெந்தயக்கீரை ரசம்                                       Empty வெந்தயக்கீரை ரசம்

Post  ishwarya Fri Mar 15, 2013 11:35 am

தேவையானவை:

வெந்தயக்கீரை - ஒரு சிறு கட்டு
தக்காளி - ஒன்று
புளி - நெல்லிக்காய் அளவு
மிளகு, சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
பூண்டு - 4 பல்
காய்ந்த மிளகாய் - 3
மஞ்சள்தூள், பெருங்காயம், மல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு


செய்முறை:

• ஒரு பாத்திரத்தில் தக்காளி, உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயம், கறிவேப்பிலை, மல்லித்தழை, காய்ந்த மிளகாய், நசுக்கிய பூண்டு, புளிக்கரைசல் சேர்த்துக் கரைத்து கொதிக்க விடவும்.

• வேறொரு பாத்திரத்தில் சுத்தம் செய்த வெந்தயக்கீரை போட்டு கீரை மூழ்கும் வரை நீர் விட்டு நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொதிக்கும் ரசத்துடன் சேர்த்துக் கலக்கவும்.

• மிளகு - சீரகத்தூள் சேர்த்து மீண்டும் ஒரு கொதி விட்டு இறக்கிப் பரிமாறலாம்.

வெந்தயக் கீரை ரசம் பசியை தூண்டும், தொண்டை புண்ணை நீக்கும் மருத்துவ குணம் கொண்டது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum