ஆண்மை குறைப்பாடு குறைய
Page 1 of 1
ஆண்மை குறைப்பாடு குறைய
தேவையான பொருட்கள்:
பாதாம் பருப்பு – 100 கிராம்
பிஸ்தா பருப்பு – 100 கிராம்
பாதாம் பிசின் – 100 கிராம்
கசகசா – 100 கிராம்
பூனைக்காலி விதை – 100 கிராம்
அமுக்கிரான் கிழங்கு – 100 கிராம்
சாதிக்காய் - 100 கிராம்
சாதிப்பத்திரி – 100 கிராம்
சுக்கு – 25 கிராம்
மிளகு – 25 கிராம்
வால் மிளகு – 25 கிராம்
அரிசி திப்பிலி – 25 கிராம்
ஏல அரிசி – 25 கிராம்
கோரைக் கிழங்கு – 25 கிராம்
கடுக்காய்த் தோல் – 25 கிராம்
நெல்லிக்காய் தோல் – 25 கிராம்
தேன் – 500 கிராம்
குங்குமப்பூ – 5 மி.கிராம்
சர்க்கரை – 1 கிலோ
நெய் – 1 கிலோ
பசும்பால்
இளநீர்
செய்முறை:
அமுக்கிரான் கிழங்கை உடைத்து மண் சட்டியில் 500 மி.லிட்டர் பசும்பாலில் அவித்து நிழலில் உலர்த்தி இடித்துக் கொள்ளவேண்டும். சாதிக்காயை உடைத்து ஒரு மண் சட்டியில் போட்டு 500 மி.லிட்டர் இளநீரும் 500 மி.லிட்டர் பசும்பாலையும் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைத்து உலர்த்தி இடித்துக் கொள்ளவேண்டும். சாதிப்பத்திரி, சுக்கு, மிளகு, வால் மிளகு, அரிசி திப்பிலி, ஏல அரிசி, கோரைக் கிழங்கு, கடுக்காய் தோல், நெல்லிக்காய் தோல் ஆகியவைகளை கல் உரலில் இடித்து வடிகட்டவேண்டும்.
அரைத்து பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, பாதாம் பிசின், கசகசா, பூனைக்காலி விதை இவைகளை ஒன்றாக ஆட்டுக் கல்லில் நன்றாக ஆட்டிக் கொள்ளவேண்டும். சர்க்கரையை ஒரு இரும்புக் கடாயில் இடித்துப் போட்டு பாதாம் பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு வெந்நீர் விட்டு மூடி வைத்து 30 நிமிடங்கள் கழித்து தோலை நீக்கி கழுவித் துடைத்து அம்மியில் வெண்ணெய்ப் பதமாக அரைத்துக் கொள்ளவேண்டும்.
பிஸ்தாப் பருப்பை ஒரு மண் சட்டியில் போட்டு 500 மி.லிட்டர் பசும்பாலை ஊற்றி 30 நிமிடங்கள் மூடி வைத்திருந்து பருப்பை முன்போல் அரைத்துக் கொள்ளவேண்டும்.
பாதாம் பிசினை ஓர் கண்ணாடி பாத்திரத்தில் போட்டு 500 மி.லிட்டர் இளநீர் விட்டு 9 மணி நேரம் அரைத்துக் கொள்ளவேண்டும்.
கசகசாவை 500 மி.லிட்டர் பசும்பாலில் ஊறவைத்து பாதாம் பிசினையும் கசகசாவையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும்.
பூனைக்காலி விதை 500 கிராம் வாங்கி ஓட்டைப் போக்கி எடை அளவு பருப்பை எடுத்து ஒரு மண் சட்டியில் போட்டு 500 மி. லிட்டர் இளநீர் விட்டு மூடி விறகடுப்பில் வைத்து சிறு தீயாக எரித்து இளநீர் சுண்டியதும் பருப்பை எடுத்து அரைத்துக் கொள்ளவேண்டும். 500 மி.லிட்டர் தூய நீர் விட்டு விறகடுப்பில் வைத்து சிறு தீயாக எரித்து கொதி வந்ததும் அரைத்துள்ள பருப்பு வகைகளைப் போட்டு மர அகப்பையால் கிண்டவேண்டும்.
ஒரு நிமிடங்கழித்து மற்ற மருந்துச் சரக்குகளையும் கொட்டி 5 நிமிடங்கள் கிண்டி தேன் ஊற்றி 3 நிமிடங்கள் கிண்டவேண்டும். இளகல் பதம் வந்ததும் இறக்கி நெய்யை உருக்கி ஊற்றி 10 நிமிடங்கள் கிண்டவேண்டும். கிண்டி முடித்த பின்பு குங்குமப்பூ 5 கிராம் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
உபயோகிக்கும் முறை:
10 வயது முதல் 16 வயது வரை சிறுவர்களுக்கு இரவு உணவு சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் கழித்து 5 கிராம் இளகலுடன் பசும்பாலும் சேர்த்து கொடுக்க வேண்டும்.
15 வயது முதல் 20 வயது வரை உள்ளவர்களுக்கு 10 கிராம். 21 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்களுக்கு 15 கிராம். இந்த வயதுக்குள் திருமணமானவராக இருந்தால் காலை உணவுக்குப் பின்னும், இரவு உணவுக்குப் பின்னும் இரண்டு வேளை வீதம் எண்பது நாட்கள் சாப்பிடலாம்.
26 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களுக்கு முன் போல் 80 நாட்கள். 31 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களுக்கு 15 +15 + 15 கிராம் இளகல் 80 நாட்கள். காலை, பகல், இரவு உணவுக்குப் பின் 80 நாட்கள் 36 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் இதே கணக்கில் மருந்தை சாப்பிட்டு வந்தால் நோய்கள் குறையும்.
தீரும் நோய்கள்:
ஆண்மைக் குறைப்பாடு, சிறுவர்களுக்கு உடல் இளைப்பு, குழந்தையின்மை ஆகிய நோய்கள் குறையும். உடல் நல்ல பலம் பெறும்.
பத்தியம்:
பழஞ்சோறு, மொச்சை, பூசணிக்காய், கோழிக் கறி, கருவாடு ஆகிய உணவு வகைகளை சாப்பிடக் கூடாது.
குறிப்பு:
30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மருந்துண்ணும் நாட்களில் பசிக் குறைவு ஏற்பட்டால் மருந்தின் அளவைக் குறைத்துக் கொள்ளவும். ஒரு வேளைக்கு ஐந்து கிராம் வீதம் குறைத்துக் கொள்ளவேண்டும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» ஆண்மை குறைப்பாடு குறைய
» விந்து குறைப்பாடு குறைய
» விந்து குறைப்பாடு குறைய
» ஆண்மை குறைபாடு குறைய
» ஆண்மை குறைவு குறைய
» விந்து குறைப்பாடு குறைய
» விந்து குறைப்பாடு குறைய
» ஆண்மை குறைபாடு குறைய
» ஆண்மை குறைவு குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum