தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ராணா படம் மீண்டும் தொடங்கும் : ராவணன், துரியோதனன், சகுனி கலவையில் ரஜினி கதாபாத்திரம்

Go down

ராணா படம் மீண்டும் தொடங்கும் : ராவணன், துரியோதனன், சகுனி கலவையில் ரஜினி கதாபாத்திரம்  Empty ராணா படம் மீண்டும் தொடங்கும் : ராவணன், துரியோதனன், சகுனி கலவையில் ரஜினி கதாபாத்திரம்

Post  ishwarya Thu Mar 14, 2013 3:14 pm

கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் ‘ராணா படத்தில் ராவணன், துரியோதனன், சகுனி மூன்று கேரக்டர்களும் கலந்த வில்லத்தனமான வேடத்தில் ரஜினி நடிக்கிறார். இது பற்றி விவரம் வருமாறு: இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ராணா என்ற படத்தில் நடிக்கவிருந்தார் ரஜினி. இதன் தொடக்க விழா கடந்த ஒரு ஆண்டுக்கு முன் நடந்தபோது உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து இப்படத்தின் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் மகள் சவுந்தர்யா இயக்கத்தில் ‘கோச்சடையான்‘ என்ற படத்தில் நடித்தார். இப்படத்தின் இயக்குனர் மேற்பார்வை பொறுப்பை ஏற்றிருந்தார் கே.எஸ்.ரவிகுமார்.

இந்நிலையில் ரஜினி கடந்த 12ம் தேதி தனது 63வது பிறந்த நாளை கொண்டாடினார். ரசிகர்களை சந்தித்ததுடன் விழாவில் கலந்துகொண்டு பேசினார். இதையடுத்து ‘ராணா படம் மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் வில்லத்தனமான வேடத்தில் அவரது வேடம் அமைக்கப்பட்டுள்ளது. தங்கையின் சாவுக்கு காரணமானவர்களை பழிவாங்கும் வேடத்தை இதில் ரஜினி ஏற்கிறாராம். ராவணன், துரியோதனன், சகுனி ஆகிய 3 கதாபாத்திரங்களின் கலவையாக இந்த வேடம் அமைக்கப்பட்டிருப்பதாக பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் தற் போதைய அரசியல் நிலவரத்தையும் இதில் தொட உள்ளதாக தெரிகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜனவரியில் ராணா படப்பிடிப்பு தொடங்கும்! – ரஜினி பேட்டி
» 3 வேடங்களில் ரஜினி நடிக்கும் “ராணா” படப்பிடிப்பு தொடக்கம்; ரஜினி-தீபிகா படுகோனே நடித்த காட்சிகள் படமானது
» மும்பையில் தொடங்கும் அ‌‌ஜீத் படம்
» திருச்செந்தூரில் தொடங்கும் விஜய் முருகதாஸ் படம்!
» ‘ராமன் ராவணன்’ மலையாளப் படம் – தமிழகத்தில் ரத்து!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum