தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஹீரோவை சிபாரிசு செய்த ஹீரோயின் : இயக்குனர் தகவல்

Go down

செய்த -  ஹீரோவை சிபாரிசு செய்த ஹீரோயின் : இயக்குனர் தகவல்  Empty ஹீரோவை சிபாரிசு செய்த ஹீரோயின் : இயக்குனர் தகவல்

Post  ishwarya Thu Mar 14, 2013 2:56 pm

ஜோடியாக நடித்த ஹீரோவை தன் படத்தில் நடிக்க ஹீரோயின் சிபாரிசு செய்தார்’ என்றார் இயக்குனர் பாலசேகரன். ‘லவ் டுடே’ பட இயக்குனர் பாலசேகரன் அடுத்து ‘ஒருவர் மீது இருவர் சாய்ந்து’ என்ற படம் இயக்குகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: விஜய் நடித்த ‘லவ் டுடே’ போலவே, இந்த படமும் வித்தியாசமாக இருக்கும். லகுபரன், சுவாதி, சானியா, கே.பாக்யராஜ், விசு நடிக்கின்றனர். ‘15 வருடத்துக்கு முன்பு லவ் டுடே இயக்கியபோது இருந்த டிரெண்டு இப்போது மாறிவிட்டதா?’ என்கிறார்கள். டிரெண்டு என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. எந்த காலத்திலும் கதைதான் ஜெயிக்கும்.

இதில் ஜோடியாக நடிக்கும் லகுபரன், சுவாதி ஏற்கனவே ‘ராட்டினம்’ என்ற படத்தில் நடித்துள்ளனர். ‘சுவாதிக்கு லகுபரன் சிபாரிசு செய்தாரா?’ என்கிறார்கள். அப்படி இல்லை. லகுபரனுக்குதான் சுவாதி சிபாரிசு செய்தார். இப்படத்துக்கு முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் சுவாதிதான். படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் கே.பாக்யராஜ், விசு நடிக்கின்றனர். கிளைமாக்ஸில் சில கருத்துக்களை சொல்ல வேண்டி இருக்கிறது. அதை சொல்ல தகுதியானவர்கள் இவர்கள்தான். அதற்காகத்தான் இவர்களை நடிக்க வைத்தேன். விசு அமைதியானவர். கதை விஷயத்தில் தலையிட மாட்டார். படம் நன்றாக வரவேண்டும் என்ற எண்ணத்தில் பாக்யராஜ் கதை, காட்சி விஷயத்தில் தலையிடுவார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum