சாலையோர சுவரில் கார் மோதியது : தெலுங்கு ஹீரோ யசோ சாகர் மரணம்
Page 1 of 1

பெங்களூர் அருகே கார் விபத்தில் பிரபல இளம் நடிகரும் அவரது நண்பரும் பலியாயினர். தெலுங்கு திரைப்பட உலகில் இளம் கதாநாயகனாக வலம் வந்தவர் யசோ சாகர் என்ற பரத் (25). இவர், சமீபத்தில் நடித்து வெளியான 'உல்லா சங்கா.. உற்சாக கங்கா..' என்ற திரைப்படம் தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து பல புதிய படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வந்தார். ஏராளமான கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இவரது தந்தை சோமு, கன்னட பட தயாரிப்பாளர். ஒரு படத்தின் கதை விவாதத்தில் பங்கேற்பதற்காக யசோ சாகர் புனேவில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் செல்ல இருந்தார். விமானத்தை பிடிக்க முடியாததால் நேற்று முன்தினம் இரவு காரில் தனது நண்பர்களான விஸ்வநாத ரெட்டி (26), லோகேஷ் (25) ஆகியோருடன் பெங்களூர் புறப்பட்டார். காரை விஸ்வநாத ரெட்டி ஓட்டினார்.
கர்நாடக மாநிலம் தும்கூர் அருகே சிரா என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், மேம்பால சுவர் மீது மோதியது. இதில் யசோ சாகர் அந்த இடத்திலேயே இறந்தார். படுகாயம் அடைந்த விஸ்வநாத ரெட்டி, லோகேஷ் இருவரும் சிரா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். வழியிலேயே விஸ்வநாத ரெட்டி இறந்தார். லோகேஷ் மேல்சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சிரா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நடிகர் இறந்த செய்தியை கேட்டு ஆந்திரா மற்றும் கன்னட திரைப்பட உலகத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். நடிகர் உடல் நேற்று மாலை பெங்களூர் ஆர்பிசி லே அவுட் பகுதியில் உள்ள யசோ சாகர் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திரைப்பட துறையினர் மற்றும் ஏராளமான ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» குடிபோதையில் பெண் ஓட்டிய கார் நடிகர் சந்தீப் மீது மோதியது: அதிர்ஷ்டசமாக உயிர் தப்பினார்

» ம்புன்னா வேணாம்…தெலுங்கு ஹீரோ அலட்டல்
» மோசடி புகாரில் பிந்து சாகர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum