தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இயக்குனர் கன்னத்தில் அறைந்தேனா? : சார்மி பதில்

Go down

இயக்குனர் கன்னத்தில் அறைந்தேனா? : சார்மி பதில்  Empty இயக்குனர் கன்னத்தில் அறைந்தேனா? : சார்மி பதில்

Post  ishwarya Thu Mar 14, 2013 2:41 pm

வாய்ப்பு கேட்க சென்ற இடத்தில் இயக்குனரை கன்னத்தில் அறைந்ததாக வந்த தகவல் குறித்து சார்மி பதில் அளித்தார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்திருப்பவர் சார்மி. சமீபத்தில் பட வாய்ப்பு கேட்பதற்காக இயக்குனர் ஹரிஸ் சங்கர் என்பவரின் அலுவலகத்துக்கு சென்றதாகவும், அப்போது இயக்குனர் அவரிடம் தவறாக நடக்க முயன்றதால் கோபம் அடைந்த சார்மி அவரது கன்னத்தில் பளார் என்று அறைவிட்டதாகவும் திரையுலகில் கிசு கிசு பரவியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி இயக்குனரிடமும், சார்மியிடமும் பலர் விசாரிக்க தொடங்கினர். இயக்குனர் ஹரிஸ் கூறும்போது, ‘யாரோ இப்படி வதந்தி கிளப்பிவிட்டிருக்கிறார்கள்.

இதுபோல் ஒரு சம்பவமே நடக்கவில்லை. யாரும் என்னை தாக்கவும் இல்லை என்றார். இந்த தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த சார்மி தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்திருக்கிறார். ‘திரையுலகில் பரவியுள்ள வதந்திபோல் எந்த சம்பவமும் நடக்கவில்லை. யாரையும் நான் கன்னத்தில் அறையவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். சினிமா உலகில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது சகஜம். பெரும்பாலும் அது வெளியே தெரிவதில்லை. வெளியே தகவல் கசிந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் அதை மறைக்கவே முயல்கிறார்கள். சார்மியும் அதைத்தான் செய்கிறார் என கோடம்பாக்க வட்டாரங்கள் தெரிவித்தன.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum