தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஹீரோயின்களுடன் மோத தயாராகிறேன் : லட்சுமிராய் பேட்டி

Go down

ஹீரோயின்களுடன் மோத தயாராகிறேன் : லட்சுமிராய் பேட்டி   Empty ஹீரோயின்களுடன் மோத தயாராகிறேன் : லட்சுமிராய் பேட்டி

Post  ishwarya Thu Mar 14, 2013 1:59 pm

சென்னை: பாலிவுட் ஹீரோயின்களுடன் மோத தயாராகிறேன் என்றார் லட்சுமி ராய். இதுபற்றி அவர் கூறியதாவது: தமிழ், தெலுங்கில் நல்லதொரு இடத்தை தக்க வைத்திருக்கிறேன். அடுத்து என் கவனம் இந்தி படங்களில் உள்ளது. ‘அங்குள்ள ஹீரோயின்களை எப்படி சமாளிப்பீர்கள், அவர்களுடன் போட்டி போட முடியுமா?’ என்கிறார்கள். ஏன் முடியாது. பாலிவுட் நடிகைகள் தங்கள் உடல் எடையை குறைத்து ஒல்லியாக இருப்பதுதான் இப்போது டிரெண்டாக இருக்கிறது. அவர்களுடன் போட்டியிடுவது சவால்தான். அதற்கு நான் தயார். ருசியாக சாப்பிட்டு பழக்கப்பட்ட நான், உடல் மெலிவதற்காக டயட் மேற்கொண்டிருக்கிறேன். அசைவம் விரும்பி சாப்பிடுவேன். அதற்கும் கட்டுப்பாடு வைத்துக்கொண்டேன். சூப்-காய்கறிகள் மட்டுமே உண்கிறேன். இப்போதே எனது உடல் எடையில் சில கிலோ குறைத்துவிட்டேன். கடந்த 2 மாதமாக ஜிம்மிற்கு சென்று கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டிருக்கிறேன். இந்தி தயாரிப்பாளர், இயக்குனர் ஒரு சிலருடன் இப்போது பேசிக்கொண்டிருக்கிறேன். அடுத்த வருடம் இந்தியில் நடிப்பேன். சமீபத்தில் ஷூட்டிங்கின்போது ரசிகர்கள் மத்தியில் சிக்கிக்கொண்டேன். என்னை பாதுகாவலர்கள் மீட்டார்கள். இதற்காக ரசிகர்கள் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என் மீது அவர்கள் வைத்திருந்த அன்புதான் அதில் வெளிப்பட்டது. இந்த சம்பவத்தின்போது கேரவேனுக்குள் நான் 40 நிமிட நேரம் அமர்ந்திருந்தேன். பிறகுதான் ஷூட்டிங்கில் பங்கேற்றேன். இவ்வாறு லட்சுமிராய் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum