தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அதிர வைத்த நிகழ்வுகள்

Go down

       அதிர வைத்த நிகழ்வுகள்  Empty அதிர வைத்த நிகழ்வுகள்

Post  ishwarya Thu Mar 14, 2013 1:50 pm

5 விக்ரம் நடிக்கும் ‘கரிகாலன்’ படத் தலைப்புக்கு தடை கேட்டு ராஜசேகர் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
6 விபச்சார வழக்கில் ‘பேசாதே’ பட இயக்குநர் செல்வநாயகம், உதவி இயக்குநர் ஞானபிரகாசம், ஓவியர் நாகேந்திரன், மேக்அப் மேன் கண்ணதாசன் கைது செய்யப்பட்டனர்.
7 வினியோகஸ்தர்களுக்கு மத்திய அரசு விதித்த சேவை வரிக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
13 ‘நண்பன்’ படத்தில் இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பச்சைமுத்துவை இழிவுபடுத்தியிருப்பதாக கூறி அக்கட்சியினர் சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
13 ‘டேம் 999’ படத்துக்கு தடைவிதித்தது ஏன் என விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
20 தன்னிச்சையாக சம்பள உயர்வை நிர்ணயித்து பெப்சி அறிக்கை வெளியிட்டது.
23 தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழு கூடியது. பெப்சியுடன் இனி எந்த ஒப்பந்தமும் கிடையாது என்று தீர்மானம் நிறைவேற்றியது.
29 இயக்குநர் சங்கத்தின் செயற்குழு, தாங்கள் தீர்மானித்த சம்பள உயர்வை அறிவித்தது. அதன்படி இயக்குநருக்கு ஒரு படத்துக்கு பத்து லட்சம் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டது.
31 போலி ஆவணங்கள் கொடுத்து வங்கியில்
25 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக தயாரிப்பாளர் (சுயேட்சை எம்.எல்.ஏ) வரதராஜன் கைது செய்யப்பட்டார்.

பிப்ரவரி

5 ஊதிய உயர்வு கோரி பெப்சி தொழிலாளர்கள் உண்ணாவிரதம் இருந்தார்கள்.
8 நடன இயக்குநர் சுந்தரம் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாகவும் அதற்காக 5 கோடி ரூபாய் நஷ்டஈடு தரவேண்டும் என்றும் நடன இயக்குநர் தாரா வழக்கு தொடர்ந்தார்.
14 தன் மகளை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்ய முயற்சிப்பதாக, ஆஞ்சநேயன் மீது அனன்யா தந்தை போலீசில் புகார் செய்தார்.
23 மத்திய அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள சேவை வரியை கண்டித்து இந்தி திரை
யுலகம் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்தது. தமிழ்நாட்டில் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.

மார்ச்

4 கவர்ச்சி நடிகை அல்போன்சாவின் காதலன் வினோத்குமார் தற்கொலை செய்து கொண்டார். அல்போன்சா தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
9 நடிகர் தமிழ்குமரன் கொடுத்த புகாரின் பேரில் 67 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக இயக்குநர்கள் கிச்சா, பி.வி.பிரசாத் கைது செய்யப்பட்டனர்.
19 தயாரிப்பாளர் சங்க அவரசக் கூட்டம் நடந்தது. இதில் இருதரப்பினர் காரசாரமாக மோதிக் கொண்டார்கள். மார்ச் 23 அன்று சங்க கூட்டத்தில் தன்னை தாக்க முயற்சித்தவர்கள் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார் கூறினார் எஸ்.ஏ.சந்திரசேகரன்.
24 தங்கள் படத்தில் திஷா பாண்டே ஆட மறுத்ததால், 20 லட்சம் நஷ்ட ஈடு தரவேண்டும் என்று ‘மயங்கினேன் தயங்கினேன்’ படத் தயாரிப்பாளர் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தார்.

ஏப்ரல்

7 பெப்சியின் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கியது.
9 பொழுதுபோக்கு பூங்கா திறப்பு விழாவில் நடிகை சாயாலி பகத் ஜீப்பிலிருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.
10 பெப்சி மற்றும் தயாரிப்பாளர்கள், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
13 பெப்சி தொழிலாளர் அமைப்புடன் ஊதிய உயர்வு பேச்சு நடத்த கேஆர்ஜி தலைமையிலான உயர்மட்ட குழுவை எஸ்.ஏ.சி அறிவித்தார்.
17 எஸ்.ஏ.சி ஆட்கள் எங்களை கொலை செய்ய முயற்சிக்கலாம் என்று பாதுகாப்பு கேட்டு
அ.செ.இப்ராஹிம் ராவுத்தர் தலைமையிலான தயாரிப்பாளர்கள் போலீசில் புகார் செய்தனர்.
18 தன் மனைவி ஹேமாவதியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு குடும்ப நல கோர்ட்டில் சண்டை இயக்குநர் கனல் கண்ணன் வழக்கு தொடர்ந்தார்.
21 அ.செ.இப்ராஹிம் ராவுத்தர் தலைமையிலான அட்ஹாட் கமிட்டியுடன் பெப்சி ஊதிய உயர்வு பேச்சு நடத்த தமிழக அரசு அனுமதி அளித்தது.
21 வீட்டை வாங்கிக் கொண்டு பத்து லட்சம் பணம் தராமல் ஏமாற்றியதாக சந்தானம் மீது ரவிகிஷன் என்பவர் போலீசில் புகார் கூறினார்.
25 சொத்து விற்பனை தொடர்பான பிரச்னையில், தான் தாக்கப்பட்டதாக நடிகை புவனா போலீசில் புகார் செய்தார்.
27 பண மோசடி செய்ததாக இயக்குநர் பாண்டிராஜ் மீது பாலமுருகன் என்பவர் புகார் அளித்தார்.

மே

11 தன்னை பற்றி அவதூறாகப் பேட்டி அளித்ததாக சங்கராச்சாரியார் மீது ரஞ்சிதா வழக்கு தொடர்ந்தார்.
20 திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் வினியோகஸ்தர் ஒருவரை மிரட்டிய நிகழ்ச்சி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
30 நடிகர் சங்கத் தலைவராக சரத்குமார், செயலாளராக ராதாரவி உள்ளிட்ட நிர்வாகிகள் மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஜூன்
16 கலைப்புலி தாணு தொடுத்த வழக்கில் இப்ராஹிம் ராவுத்தர், தயாரிப்பாளர் சங்க பணத்தை கையாள நீதிமன்றம் தடை விதித்தது.
16 கொலை மிரட்டல் விடுப்பதாக அமீர் மீது வழக்கறிஞர் சிவா என்பவர் போலீசில் புகார் கொடுத்தார்.
19 2012-14ம் ஆண்டுக்கான பெப்சி தேர்தல் நடந்தது. இதில் அமீர் தலைவராகவும், சிவா செயலாளராகவும். அங்கமுத்து சண்முகம்
பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
20 இப்ராஹிம் ராவுத்தர் தலைமையில் அமைக்கப்பட்ட அட்ஹாக் கமிட்டி செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஜூலை

4 நடிகர் சங்க இடத்தை லீசுக்கு விட்டது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சரத்குமாருக்கும், ராதாரவிக்கும் கோர்ட் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
5 திருவனந்தபுரம் நீதிமன்றத்திற்கு நடிகை ஊர்வசி குடிபோதையில் வந்ததாக, அவர் முன்னாள் கணவர் மனோஜ் கே.ஜெயன் குற்றம் சாட்டினார்.
9 சென்னையில் நடந்த இரவு மது விருந்தில் தெலுங்கு நடிகர்கள் மனோஜும், மஹத்தும் மோதிக் கொண்டனர். மஹத் கொடுத்த புகாரின் பேரில் மனோஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
17 நடிகை கல்பனா தன் கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார்.

ஆகஸ்ட்

16 இயக்குநர் மனோகரின் மகன் ரஞ்சன் (Cool, தான் படிக்கும் பள்ளியின் நீச்சல் குளத்தில் மூழ்கி பலியானார்.
24 80 லட்சம் ரூபாய் மோசடி வழக்கில் புவனேஸ்வரி கைதானார்.
26 தூக்க மாத்திரை தின்று சுஜிபாலா தற்கொலை
செய்துகொள்ள முயற்சித்தார்.

செப்டம்பர்

15 நடிகர், தயாரிப்பாளர் பவர் ஸ்டார் சீனிவாசன், 65 லட்சம் ரூபாய் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.
15 நடிகை புவனேஸ்வரி, அவரது தாயார் சம்பூர்ணம் 75 லட்சம் ரூபாய் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்கள்.

அக்டோபர்
13 நடிகை அனன்யா கேரளாவில் நடந்த வில்வித்தை போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றார்.
16 இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் சார்பில் பொழுதுபோக்கு வர்த்தக மாநாடு கமல்ஹாசன் தலைமையில் இரண்டு நாட்கள் நடந்தது.
18 பைனான்சியர் போத்ரா என்பவர் இயக்குநர் கஸ்தூரி ராஜா 65 லட்சம் ரூபாய் மோசடி செய்து
விட்டதாக புகார் கூறினார்.
20 நடிகர் சங்கத்துக்கு எதிராக எஸ்.முருகன், காஜா மைதீன் தொடர்ந்த வழக்கில் நடிகர் சங்க நிலம் தொடர்பாக சிவில் வழக்கு தொடரலாம் என்று உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
31 ‘சத்திரம் பேருந்து நிலையம்’ தயாரிப்பாளர் ரோஷன், பண மோசடி செய்து விட்டதாக மற்றொரு தயாரிப்பாளர் போலீசில் புகார் கூறினார்.

நவம்பர்
1 மன அழுத்த நோய் காரணமாக நடிகை ‘ஃபிரண்ட்ஸ்’ விஜயலட்சுமி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
14 சிறுபான்மையினரின் மனதை புண்படுத்தும்படியான காட்சிகள் இருப்பதாக கூறி சில அமைப்புகள் ‘துப்பாக்கி’ பட ஹீரோ விஜய் வீட்டு முன் முற்றுகை போராட்டம் நடத்த முயன்றனர்.
15 இஸ்லாமிய அமைப்பு பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க ‘துப்பாக்கி’ இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்புக் கொண்டார்.
16 ஆண்களைப் பற்றி இழிவாக பேட்டி அளித்ததற்காக சோனா வீட்டு முன் ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
22 நடிகை ரம்யா கிருஷ்ணன் வீட்டில் 50 பவுன் நகை திருடிய வேலைக்காரி கைது செய்யப்பட்டார்.
23 நடிகை ஸ்வேதா மேனனின் பிரசவ காட்சியை படம்பிடித்ததற்காக இயக்குநர் ப்ளஸ்சி, ஒளிப்
பதிவாளர் மீது திருவனந்தபுரம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
27 சினிமா தியேட்டரில் கலாட்டா செய்ததற்காக புவனேஸ்வரி கைது செய்யப்பட்டார்.

டிசம்பர்
5 மூன்று மோசடி வழக்குகளில் புவனேஸ்வரி கைது செய்யப்பட்டார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum