ஆடிக் கிருத்திகை
Page 1 of 1
ஆடிக் கிருத்திகை
ஆடி கிருத்திகை முருகனுக்கு மிகவும் உகந்த நாள். அவரது ஜென்ம நட்சத்திரமும் ஆயிற்றே!!! அன்றைய தினம் காவடி எடுத்து, பாலாபிஷேகம் செய்து தண்டபாணியை வணங்குவர். ஆறு கார்த்திகைப் பெண்கள், முருகனை சரவணப் பொய்கையிலிருந்து எடுத்து வளர்த்தனர்.
ஈசன் அருளால் ஆறு நட்சத்திரங்களின் தொகுப்பாக, கிருத்திகை நட்சத்திரமாக வானில் இடம் பெற்றனர். அவர்களை சிறப்பிக்கும் வண்ணம் ஆடிக் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது. ஆடிக் கிருத்திகை தினம் முருகனுக்கு உரியதாகச் சொல்லப்படுகிறது. ஏன்? முருகனின் கரத்தில் இருக்கும் வேல், சக்தி ஆயுதம் எனப்படும்.
அம்பிகையின் அம்சமே வேல் எனவும் சொல்வர். அதனால் சக்திதரனாகிய முருகனுக்கும் ஆடியில் ஒருநாள் சிறப்பானதாகிவிட்டது. பல கோயில்களில் முழுக்க முழுக்க மலர்களாலேயே அலங்கரிப்பதும் உண்டு.
அம்மன் ஆலயங்களில் இது பூச்சொரிதல் என்றும், முருகன் கோயில்களில் மலர் முழுக்கு என்றும் அழைக்கப்படுகிறது. ஆடிக் கிருத்திகை வழிபாட்டால், தீயன யாவும் ஓடிப்போகும்; நல்லன எல்லாம் தேடி வரும் என்பது ஐதிகம்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!!! வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா!!!
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» கிருத்திகை விரதம்
» முருகன் கோவில்களில் நாளை ஆடிக் கிருத்திகை விழா
» முருகன் கோவில்களில் நாளை ஆடிக் கிருத்திகை விழா
» இந்த தனுஷுக்காக ஆடிக் குடுத்தா இப்படி ஆயிடுச்சே: கடுப்பில் நயன்
» கிருத்திகை விரதம்
» முருகன் கோவில்களில் நாளை ஆடிக் கிருத்திகை விழா
» முருகன் கோவில்களில் நாளை ஆடிக் கிருத்திகை விழா
» இந்த தனுஷுக்காக ஆடிக் குடுத்தா இப்படி ஆயிடுச்சே: கடுப்பில் நயன்
» கிருத்திகை விரதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum