குபேர மூலை
Page 1 of 1
குபேர மூலை
எதற்கு வம்பு? சைக்கிள் கேப்பில் புதியவர்கள் அசால்டாக லாரியை ஓட்டிவிடுவார்கள். எனவே அடக்கி வசிப்பதே சாலச் சிறந்தது.
மொத்தத்தில் மண்ணின் நிறம், மணம், குணம் இத்யாதி இத்யாதி பெருமையெல்லாம் 80களுடன் போயே போச்சு. மலையாள திரையுலகம் இப்போது தமிழ் தெலுங்கு சினிமாவின் ஜூனியராகவே திகழ்கிறது. ஸோ, வேலைமெனக்கெட்டு பழம் பெருமை பேசி பெருமூச்சு விடுவதை விட்டுவிட்டு நடையை கட்டலாம்.சும்மா சொல்லக் கூடாது. சாரி சாரியாக புதியவர்களின் அலை கேரள திரையுலகக் கரையை தொட்டவண்ணமே இருக்கின்றன.
என்ன, ஹாலிவுட், கொரியன் படங்களை சப்பாத்தி சுடுவதுபோல் சுடுகிறார்கள். அது மட்டும்தான் சுவையான சோற்றில் சிக்கிய கல்லாக இடறுகிறது.
ரைட். விஷயத்துக்கு வருவோம். வழக்கம் போல் ஜனப்ரிய நாயகனான திலீப், ரவுண்டு கட்டி விளையாட தயாராகி விட்டார். ‘நாடோடி மன்னன்’, ‘பாபா சத்ய சாய்’, ‘சவுண்ட் தோமா’, ‘வாளையார் பரமசிவம்’, ‘காமெடி கிங்’, ‘கம்மாத் அண்ட் கம்மாத்’ என கிலோ மீட்டர் கணக்கில் படங்களை வைத்திருக்கிறார். இதில், ‘கம்மாத் அண்ட் கம்மாத்’ மம்மூட்டியுடன் இணைந்து இவர் நடிக்கும் படம். ஆண்டின் தொடக்கத்தில் ரிலீசாகும் இப்படம் தவிர்த்து மற்றவை அனைத்தும் அக்மார்க் திலீப் பிராண்ட். சரசரவென ஏணியில் ஏறிக் கொண்டிருக்கும் திலீப், இந்த வருடமும் பல படிகள் மேலே செல்வார் என்கிறார்கள்.
தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கும் மம்மூட்டிக்கு 2013வது ஆசுவாசம் தருமா என்று தெரியவில்லை. திலீப்புடன் நடிக்கும் ‘கம்மாத் அண்ட் கம்மாத்’ தவிர, ‘அறிவால் சூட்டிக நட்சத்திரம்’, ‘த கேங்ஸ்டர்’, ‘குஞ்சானன்தன்டே கதா’, ‘இம்மானுவேல்’ என கை வசம் படங்களை வைத்திருக்கிறார். என்றாலும் நாற்காலி ஆடிக்கொண்டுதான் இருக்கிறது.
கிட்டத்தட்ட இதே வாக்கியங்களை பயன்படுத்த வேண்டிய நிலையில் இருந்த மோகன்லால் சென்ற ஆண்டு அடுத்தடுத்து ஹிட் கொடுத்து தப்பித்துவிட்டார். ‘லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்’, ‘ரெட் ஓயின்’, ‘லோக்பால்’ என இவ்வருடம் வெளியாகும் படங்கள் லால் ஏட்டனை ஸ்திரப்படுத்தும் என்கிறார்கள்.
இந்த நிலை பிருத்விராஜுக்கும் ஏற்பட வேண்டும் என்றுதான் அவர் ரசிகர்கள் பிரார்த்தனை செய்துக் கொண்டிருக்கிறார்கள். சென்ற ஆண்டு இவர் நடித்த எந்தப் படமும் கல்லாவை நிரப்பவில்லை. அடி என்றால் அப்படியொரு அடி. எனவே வெளிவர இருக்கும் ‘செல்லூலாயிட்’, ‘அவுரங்கசீப்’, ‘மும்பை போலீஸ்’, ‘அறிவால் சூட்டிக நட்சத்திரம்’ ஆகியவையே இவரை கரை சேர்க்க வேண்டும்.
படபடவென லைம் லைட்டுக்கு வந்திருக்கும் ஆசிப் அலி, ‘ரெட் ஓயின்’, ‘கவ்பாய்’, ‘டி கம்பெனி’, ‘கிள்ளி போயி’ என தெம்பாகவே இருக்கிறார்.
கோபன் குஞ்சாக்கா மட்டும் என்னவாம்? தன் தவறை உணர்ந்து திருந்தியவர் 2012ல் இரண்டு பம்பர் ஹிட்ஸை கொடுத்து ஜம்மென்று ரேஸில் குதித்து விட்டாரே..? அதனால்தான் ‘ரோமன்ஸ்’, ‘3 டாட்ஸ்’, ‘இம்மானுவேல்’, ‘மோட்டார் சைக்கிள் டைரீஸ்’, ‘கதவீடு’, ‘காட் ஃபார் சேல்: பக்தி பிரஸ்தானம்’ என நீளும் பட்டியலை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
என்றாலும் தெரிந்த இந்த முகங்களை விட அறியாத நபர்கள்தான் சொல்லி சொல்லி அடிக்கப் போகிறார்கள். மலையாள திரையுலக வரலாறு நம் மண்டையில் குட்டி உணர்த்தியுள்ள உண்மை இதுதான். அதனால் முதல் பத்தியை இப்போது படியுங்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum