தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நான்கடியில் நாற்பது மாடி

Go down

நான்கடியில் நாற்பது மாடி  Empty நான்கடியில் நாற்பது மாடி

Post  ishwarya Wed Mar 13, 2013 5:32 pm

தலைப்பு நம்ப முடியாததாக இருந்தால் ஒரு நடை கர்நாடக மாநிலத்துக்கு சென்று வாருங்கள்.சட்டமன்ற தேர்தல் வேறு நெருங்கிக் கொண்டிருக்கிறது. போதும் போதாததற்கு சென்ற ஆண்டு 16ம் பெற்று பெருவாழ்வு வாழ்ந்த கதையாக ஜானருக்கு ஒன்று வீதம் படங்களை வெளியிட்டு பணத்தை அள்ளியிருக்கிறார்கள். ஸோ, புஷ்டியான உடலுடனும் தேர்தலுக்கு உதவும் தெம்புடனும் தொடையை தட்டியபடி இந்த ஆண்டுக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறார்கள்.

என்ன... படங்களை பட்டியலிடுவதற்குள்தான் தாவு தீர்ந்து விட்டது. இரு மாத இடைவெளியில் முழு படத்தையும் முடித்து ரிலீஸ் செய்யும் பூமியில் ஆண்டறிக்கையை வருட தொடக்கத்திலேயே ஆராய புகுந்தால் ‘பல்பு’தான் கிடைக்கும். கிடைக்கவும் செய்தது. என்றாலும் தேடிப் பிடித்து சலித்ததில் சில முத்துக்களும் சிக்கியிருக்கின்றன.

அதில் முக்கியமானது ‘பச்சன்’. ஷஷாங்க் இயக்கத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப் நடித்திருக்கும் படம். சென்ற ஆண்டு கன்னடத்தில் இவர் நடிக்க ஒரு படமும் வெளியாகவில்லை. என்னதான் ‘ஈகா’ என்கிற ‘நான் ஈ’ ஈரேழு உலகிலும் பட்டையை கிளப்பினாலும், மிகப்பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் மனதார புகழ்ந்தாலும் சொந்த மண்ணில் சுண்டு விரலைக் கூட அசைக்கவில்லையே என்ற ஆற்றாமை இவருக்கும் இருந்தது. இவரது ரசிகர்களுக்கும் அது பரவியிருந்தது. அதை வட்டியும் முதலுமாக தீர்க்கத்தான் ‘பச்சன்’ தயாராகி இருக்கிறது.

பக்கா கமர்ஷியல் படம். பொறி பறக்கும் வசனங்களும் அனல் தெறிக்கும் ஆக்ஷனும் படத்தின் ப்ளஸ் என்கிறார்கள். இது போக தமிழ் ‘பாட்ஷா’வின் இரண்டாம் பாகம், ‘ஆப்தமித்ரா’வின் (தமிழ் ‘சந்திரமுகி’) மூன்றாம் பாகம் ஆகியவற்றில் இவர் நடிக்கப் போகிறார் என மீடியாக்கள் அலறிக் கொண்டிருக்கின்றன.

கொஞ்சம் இறங்கு முகத்தில் இருக்கும் ஷிவ்ராஜ்குமார் ‘அந்தார் பஹார்’, ‘கடிபுடி’, ‘லஷ்மி’, ‘மதுவே இம்பாசிபிள்’ என நான்கு படங்களை வைத்திருக்கிறார். கேப்டனாக நீடிக்க ஒன்று பவுண்ட்ரியை தொட்டாலும் போதும். அதற்குத்தான் நான்கு மைதானங்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்.

இப்படி பாதுகாப்பாக விளையாட புனித் ராஜ்குமார் தயாராக இல்லை. ஒரே பிட்ச். ஒரே மேட்ச். ஆனால், சென்சுரி என்ற முடிவுடன் தீவிரமாக கதை கேட்டு வருகிறார். அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. வந்த நொடியிலேயே ரிலீஸ் தேதி தெரிந்து விடும். எப்படியும் ஆண்டு முடிவதற்குள் இரு படங்களை கொடுத்து விடுவார்.சென்ற ஆண்டு மூன்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த உபேந்திரா, இப்போது ‘தொப்பிவாலா’வில் கவனம் செலுத்தி வருகிறார். போலவே ‘புல்புல்’ தன் பெருமையை தக்கவைக்கும் என்ற தர்ஷனின் நம்பிக்கை வீண்போகாது என்கிறார்கள். இதேதான் துனியா விஜய் நடிக்கும் ‘புட்டா’வுக்கும்.

இது போக சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்படும் ‘டர்ட்டி பிக்சர்: சில்க் ஸாகத் மகா’ மற்றும் ஸ்ரேயா மலை போல் நம்பிக் கொண்டிருக்கும் ‘சந்திரா’ ஆகியவை ப்ளசன்ட் சர்ப்ரைஸாக அமையும் என்கிறார்கள்.

ஆமை போல் முன்னேறி வரும் ஸ்ரீநகர் கிட்டிக்கு ‘அப்பாயா’, அபயம் தரும் என அடித்துச் சொல்கிறார்கள். மொத்தத்தில் இவ்வளவுதானா என்று தோன்ற வைக்கும் இந்தப் பட்டியலை வைத்து இந்த ஆண்டு கன்னட திரையுலகை எடை போட முடியாது என்பது மட்டும் உண்மை. ஆண்டின் இறுதியில் திரும்பிப் பார்க்கும்போதுதான் நிஜம் புரியும். நான்கடியில் நாற்பது மாடி கட்டிடம் எழுப்பப்பட்டிருக்கும் ரகசியமும் புரிபடும்.

லாஸ்ட், பட் நாட் லீஸ்ட். கிரேஸி ஸ்டார் ரவிச்சந்திரன் நடிக்க ஐந்தாண்டுகளாக படப்பிடிப்பில் இருக்கும் ‘மஞ்சினா ஹனி’ இந்தாண்டாவது திரையரங்கை எட்டிப் பார்க்கும் என்ற நம்பிக்கையில் சாண்டல் வுட்டுக்கு ஆல் தி பெஸ்ட் சொல்வோம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum