தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாலியல் பிசாசுகளான ஆசிரியர்கள்! – செய்தி தொகுப்பு!

Go down

பாலியல் பிசாசுகளான ஆசிரியர்கள்! – செய்தி தொகுப்பு! Empty பாலியல் பிசாசுகளான ஆசிரியர்கள்! – செய்தி தொகுப்பு!

Post  meenu Wed Mar 13, 2013 5:00 pm

Filed

குரு ஆனவர் தாய்… தந்தயருக்கு அடுத்தாற்போல் மதிக்கப்படுகிறார். ஆனால் தற்போது அத்தகைய ஆசிரியத்தொழிலின் புனிதத்தை கெடுக்கும் வகையில் சில பாலியல் பிசாசுகள் கிழம்பியுள்ளனர்.

அந்தவகையில்…

மாணவியைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து அசிங்கமாகப் பேசிய ஆசிரியர்

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவிகளிடம் அடாத செயலில் ஈடுபட்டு சிக்கியுள்ளார்.

வேங்கடத்தனூர் என்ற ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக இருப்பவர் சுந்தரம்.

சுந்தரம் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியைகளிடமும், மாணவிகளிடமும் ஆபாச வார்தைகளை அவர் பேசி வந்துள்ளார்.

மாணவர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து, மாணவி ஒருவரை பார்த்து, நீ மிகவும் செக்சியாக இருக்கிறாய் என்று கூறி வகுப்பறையிலேயே முத்தம் கொடுத்த சம்பவமும் நடந்துள்ளது.

பள்ளியின் தலைமை ஆசிரியரும், வேறு ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியையும் நிர்வாணமாக இருக்கும் ஆபாச வீடியோ

கோவை மாவட்டம் வால்பாறையில் சோலையாறு எஸ்டேட் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 150 மாணவ, மாணவியர் படிக்கும் இப்பள்ளியின் தலைமை ஆசிரியரும், வேறு ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியையும் நிர்வாணமாக இருக்கும் ஆபாச வீடியோ இணையதளம் ஒன்றில் வெளியாகியுள்ளன. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த திங்கட்கிழமை அன்று வால்பாறை-பொள்ளாச்சி மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பள்ளியில் படிக்கும் 14 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புனே பள்ளி துணை முதல்வர்

தனது பள்ளியில் படிக்கும் 14 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புனே டான் பாஸ்கோ பள்ளி துணை முதல்வர் கைது செய்யப்பட்டார். புனேவில் உள்ள டான் பாஸ்கோ பள்ளியில் துணை முதல்வராக இருப்பவர் இஜு பிரான்சிஸ் பால்காவ்(54). அவர் கடந்த 2ம் தேதி மதியம் 1 மணி அளவில் தான் பணிபுரியும் பள்ளியில் படிக்கும் 14 வயது மாணவிக்கு தனது அலுவலகத்தில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum