மகளை வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்த சவூதி அரேபியாவின் மதகுரு விடுதலை! Pics
Page 1 of 1
மகளை வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்த சவூதி அரேபியாவின் மதகுரு விடுதலை! Pics
82
சவூதி அரேபியாவின் பிரபலமான இஸ்லாமியப் போதகரும் மத குருவுமான சேய்க் பைஹான் அல் கம்தி தனது ஐந்து வயது மகளைக் வல்லுறவுக்குட்படுத்தி, துன்புறுத்தி கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த சனிக்கிழமை அவர் தான் செய்த கொலைக்கு ஈடாக குருதிப் பணத்தை தனது மனைவிக்கு செலுத்தி விட்டு அவர் செய்த கொலைக் குற்றத்திலிருந்து விடுதலை செய்யப்பட்டதாக சவூதியிலிருந்து கிடைத்த செய்திகள் கூறுகின்றன. அவரது விடுதலையைக் கண்டித்து மனித உரிமைகள் அமைப்புகள் கண்டன அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றன.
ஐந்து வயதுக் குழந்தை லாமியா அல் கம்தி, கடந்த டிசெம்பர் 25, 2011ஆம் வருடம் கடுமையான காயங்களுடன் குற்றுயிராக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சென்ற வருடம் (2012) ஒக்டோபர் 22ஆம் திகதி காலமானார். லாமியா அல் கம்தியின் தந்தையும் சவூதி அரேபியாவின் பிரபலமான தொலைக்காட்சி இஸ்லாமியப் போதகரும் மத குருவுமான செய்க் பைஹான் அல் கம்தி லாமியா அல் கம்தியின் துன்புறுத்தல்களுக்கு காரணமானவர் என்று விசாரணைகளின் மூலம் அறிந்தவுடன் சவூதி அராபிய அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட லாமியா அல் கம்தி � வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதை பரிசோதனையின் பொழுது கண்டறியப்பட்டது. அதற்குக் காரணமானவர் அவரது தந்தை என்ற விடயமும் பரிசோதனையின் பொழுது தெரியவந்தது. அது மட்டுமன்றி அவரது இடது கையில் எலும்பு முறிவும், கை விரல்களில் ஒன்றிலிருந்து ஒரு நகம் கழட்டப் பட்டும், தலையில் மண்டையோடு உடைந்தும் இருந்திருக்கிறது.
அதிகாரிகளின் விசாரணையின்போது பைஹான் அல் கம்தி தான் தனது மகளைத் துன்புறுத்தியதை ஒப்புக் கொண்டிருக்கிறார். என்றாலும், சவூதி அரேபியாவில் அமுலில் இருக்கின்ற நீதிமன்றம் அவரது கொலைக்கு பகரமாக குருதிப் பணத்தை தாய்க்கு வழங்குமாறு பணித்து அவரை விடுதலை செய்துவிட்டது.
சவூதியில் அமுலில் இருக்கும் நீதியின் பிரகாரம் தனது பாதுகாப்பில் இருக்கும் குழந்தையை அல்லது மனைவியைக் கொலை செய்யும் குற்றத்துக்கு தண்டனையாக மரண தண்டனையை தந்தைக்கு அல்லது கணவனுக்கு தீர்ப்பாக தீர்ப்பளிப்பதில்லை. இந்தத் தீர்ப்புக்கும் செய்கைக்கும் எதிராக “நான் லாமியா அல் கம்தி பேசுகிறேன்” என்ற தலைப்பில் உலகில் இருக்கின்ற பல சமூக சேவைகள் அமைப்புகள் பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாக்கின்ற நீதி கேட்டு களமிறங்கியிருக்கின்றன.
இக்கொலைக்கு நட்டஈடாக சுமார் 50,000 அமெரிக்க டொலர்களை பைஹான் அல் கம்தி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சொந்த மகளை துஸ்பிரயோகம் செய்த காமுக தந்தை!
» திருமணமான மகளை நிர்வாணப்படுத்தி கொடுமை செய்த தந்தை மீது வழக்கு பதிவு!
» மனநலம் பாதிக்கப்பட்ட மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறிய தந்தை!
» வீராங்கனைகளிடம் சில்மிஷம் செய்த பயிற்சியாளர் கைது! Pics
» மருமகளின் வாயில் ஆசிட் ஊற்றி கொலை செய்த கொடூர மாமியார்!
» திருமணமான மகளை நிர்வாணப்படுத்தி கொடுமை செய்த தந்தை மீது வழக்கு பதிவு!
» மனநலம் பாதிக்கப்பட்ட மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறிய தந்தை!
» வீராங்கனைகளிடம் சில்மிஷம் செய்த பயிற்சியாளர் கைது! Pics
» மருமகளின் வாயில் ஆசிட் ஊற்றி கொலை செய்த கொடூர மாமியார்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum