தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கமல் படத்துடன் ஹன்சிகா பட டிரெய்லர் இணைக்க பிரச்னை?

Go down

கமல் படத்துடன் ஹன்சிகா பட டிரெய்லர் இணைக்க பிரச்னை?  Empty கமல் படத்துடன் ஹன்சிகா பட டிரெய்லர் இணைக்க பிரச்னை?

Post  ishwarya Wed Mar 13, 2013 2:15 pm

கமல் படத்துடன் ஹன்சிகா பட டிரெய்லர் இணைக்க முடியுமா என்பது பற்றி பிரச்னை எழுந்துள்ளது. கமல் இயக்கி நடித்திருக்கும் படம் ‘விஸ்வரூபம்’. இப்படத்துடன் ஆர்யா, அனுஷ்கா, ஹன்சிகா நடித்துள்ள ‘சேட்டை’ பட டிரெய்லர் வெளியிடப்படும் என்று கூறப்பட்டது. இதுபற்றி கியூப் தொழில்நுட்ப நிர்வாகி ஜெயேந்திரா கூறும்போது,‘ஒரு படத்துடன் டிரெய்லரை இணைத்து வெளியிட வேண்டுமானால் அந்த டிரெய்லர் தணிக்கை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் படத்துடன் இணைக்க முடியும். டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் படம் தனியாகவும், டிரெய்லர் தனியாகவும் தியேட்டர்களுக்கு அனுப்பப்படும். டிரெய்லரை திரையிடுவது என்பது தியேட்டர்காரர்கள் கையில்தான் இருக்கிறது. எனவே படத்துடன் டிரெய்லரை இணைக்க முடியாது’ என்றார்.

இதற்கு பதில் அளித்த ‘சேட்டை’ பட தயாரிப்பாளர் யுடிவி தனஞ்செயன்,‘டிரெய்லரை படத்துடன் இணைக்க முடியாது என்ற முறை இந்தி படங்களில்கூட கிடையாது. பிரதான படத்துடன் டிரெய்லரை தணிக்கை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. எங்களது சொந்த தயாரிப்பில் வெளியான படங்களில்கூட இதுபோல் டிரெய்லர் இணைத்திருக்கிறோம். பிரதான படத்துக்குதான் தணிக்கை சான்று தரப்படுகிறது. டிரெய்லரின் கூடுதல் நீளம் அப்பட நீளத்துடன் சேர்க்கப்படுவதில்லை. எனவே டிரெய்லருக்கு தணிக்கை சான்று வேண்டும் என்பது நடைமுறையல்ல. டிரெய்லர் திரையிடுவதுபற்றி எல்லா தியேட்டர்காரர்களிடம் பேசப்பட்டுவிட்டது. அவர்கள் திரையிட சம்மதித்திருக்கிறார்கள். இதற்கான அனுமதியை விஸ்வரூபம் படத்தின் ராஜ்கமல் நிறுவனமும் கடிதம் மூலம் எங்களுக்கு அளித்திருக்கிறது’ என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum