பேச்சை கேள்! ராமனை போல் நட!
Page 1 of 1
பேச்சை கேள்! ராமனை போல் நட!
திருமாலின் அவதாரங்களில் முழுமையானது கண்ணன் அவதாரமே. வாஞ்சை, தலைமை, செம்மை, எளிய இயல்பு ஆகிய திருமாலுக்குரிய நான்கு குணங்களும் கண்ணனிடம் முற்றிலும் பொருந்தி உள்ளன. பேச்சைக் கேள், ராமனை போல் நட என்ற பழமொழியும் உண்டு. கோகுலத்திலும், மதுராவிலும் நிகழ்ந்த பாலகிருஷ்ண லீலைகள் நம்மை எப்போதும் ரசிக்க வைக்கும்! சிந்திக்க வைக்கும்!
பல்வேறு பாடங்களை நமக்கு புகட்டும். ஒரு சமயம் கோகுலத்தில் கோபர்கள் எல்லோரும் இந்திரனை பூஜிக்க வேண்டி அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்கள். ஸ்ரீகிருஷ்ணர் அந்த விஷயத்தை அறிந்தவரானாலும், அறியாதவர்போல் நடித்தார். நந்தர் முதலிய பெரியோர்களை நோக்கி, இந்த பூஜை ஏன் செய்யப்படுகிறது? இதன் பலன் என்ன? என்று கேட்டார்.
மழையை வரவழைக்கும் மேகங்களுக்கு அதிபதியான இந்திரனை திருப்திப்படுத்தவே அந்த பூஜையைச் செய்வதாக அவர்கள் பதில் அளித்தனர். இடது கையின் சுண்டு விரலின் நுனியில் பெரிய மலையை ஒருவாரம் காலம் நிறுத்தியிருந்து லீலையைப் புரிந்த கோவர்த்தன கிரிதாரியின் அசாதரணமான யோக சக்தியைக் கண்டு நிலைகுலைந்தான் இந்திரன்.
தன் தவறுக்கு மன்னிப்பு கோரி, பகவானை பலவாறு துதித்தான். அவன் ஆணைப்படி மேகம் கலைந்து, ஆகாயம் தெளிவு பெற்றது. மழை நின்று கோபர்களும் தங்கள் இல்லம் திரும்பினர். இந்த லீலையின் மூலம், அதிகாரத்தில் இருப்பவர்கள் ஆணவம் கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தினான் கண்ணன்.
பசுக்கள், வேதம் ஓதும் அந்தணர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற பண்பையும் போதித்தான். அவரவர் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்கள் கிடைப்பதால் நாம் நமது கடமைகளைச் சரிவரச் செய்து இறைபக்தியுடன் செயலாற்றினால் அனைத்து நலன்களையும் பெறலாம் என்ற கருத்தை உணர்த்தினான்.
பிற்காலத்தில் தோன்றிய கிருஷ்ண பக்தர்கள் அனைவருமே, கோவர்த்தன கிரிதாரியைப் பலவாறு புகழ்ந்து பாடியுள்ளார்கள். கண்ணன் தனது விரலால் தூக்கிய அந்த கோவர்த்தன் பர்வதம், மதுரா (உத்தரப்பிரதேசம்) பிருந்தாவனத்தில் இன்றும் தரிசனம் தந்து கொண்டிருக்கிறது.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» பேச்சை கேள்! ராமனை போல் நட!
» தாயகமே கேள்!
» தந்தை சொல் கேள்
» மன்னிப்புக் கேள்… இல்லையேல் மலையாளத்துக்கு ஓடு!! – ஆர்யாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது
» பேச்சை பாதியாகக் குறையுங்களேன்!
» தாயகமே கேள்!
» தந்தை சொல் கேள்
» மன்னிப்புக் கேள்… இல்லையேல் மலையாளத்துக்கு ஓடு!! – ஆர்யாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது
» பேச்சை பாதியாகக் குறையுங்களேன்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum