சாதனை படங்கள் சாதிக்குமா?
Page 1 of 1
சாதனை படங்கள் சாதிக்குமா?
சென்னை : தமிழ் சினிமாவில் அவ்வப்போது சாதனை முயற்சியில் படங்கள் வரும். சில சாதனை புத்தகத்தில் இடம்பெறும். சில சோதனையாக முடியும்.
‘சுயம்வரம்’ என்ற படம் சாதனைக்காக உருவாக்கப்பட்டது. படப்பிடிப்பை 23 மணி, 58 நிமிடங்களுக்குள் நடத்தி முடித்தனர். 14 இயக்குனர்கள், 19 கேமராமேன், சுமார் 25 முன்னணி நடிகர், நடிகைகள் இணைந்து இச்சாதனையைச் செய்தார்கள். பிறகும் சில சாதனை முயற்சிகள் நடந்தது.
அபய், சுனிதா வர்மா என்ற இரண்டு பேர் மட்டுமே நடித்த ‘இருவர்’ படம் வெற்றிபெறவில்லை. வெளிநாடு தமிழரான சுரேஷ் ஜோசிம் என்பவர் கின்னஸ் சாதனை படைப்பதையே தொழிலாக கொண்டவர். அவர் தமிழில் ‘சிவப்பு மழை’ படத்தை சாதனைப் படமாக தயாரித்து நடித்தார். 11 நாள், 23 மணிநேரம் 45 நிமிடங்களுக்குள் தயாரிக்கப்பட்டது. ‘சுயம்வர’த்துக்கும் இதற்குமுள்ள வித்தியாசம், அதை பலர் இணைந்து உருவாக்கினார்கள். இது ஒரு குழு மட்டும் பணியாற்றி முடித்தது. இந்தப் படத்துக்கு கின்னஸ் சாதனை சான்றிதழ் கிடைத்தது.
அடுத்து ‘அகடம்’ என்ற படத்தை ஒரே ஷாட்டில் எடுக்கப்போகிறார்கள். ‘சோக்காலினி’ என்ற படத்தை கேண்டிட் கேமரா முறையில் எடுக்கிறார்கள். கேமராவை மறைத்து வைத்து மக்களின் நடவடிக்கையை படமெடுத்து அதை சினிமாவாக மாற்றுகிறார்கள்.’ஹோம்மினிஸ்டர்’ என்ற படம் ஒருவர் மட்டுமே நடிக்கும் படமாக உருவாகிறது. வேணு அரவிந்த் நடிக்கிறார். ‘வெங்காயம்’ சங்ககிரி ராச்குமார் ‘ஒன்’ என்ற ஆங்கில படத்தை உருவாக்குகிறார். ஏ டூ இசட் எல்லாமே அவர்தான்.
தன்னந்தனியாக எப்படி படம் பிடித்தார் என்பதை நிரூபிக்க, ‘மேக்கிங் ஆப் ஒன்’ என்ற படத்தையும் பதிவு செய்துள்ளார். ‘காட்டுப்புறா’ படத்தை உருவாக்கும் பாபுகணேஷ், ரசிகர்கள் மீது சாரல் மழை பொழிய வைக்க முயற்சிக்கிறாராம். தமிழ் சினிமாவில் தற்போது ஒரே நேரத்தில் ஐந்து சாதனை முயற்சி படங்கள் தயாராகிறது. இதில் எவை சாதிக்கும். சாதிக்காது என்பது அந்தந்த படங்கள் ரிலீஸின்போது தெரியவரும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சிறு பட்ஜெட் படங்கள் ரிலீசால் தனுஷ், கார்த்தி படங்கள் தள்ளிவைப்பு!!
» ஒரே நேரத்தில் 4 படங்கள் தயாரிப்பு… 3 படங்கள் விநியோகம்.. ஸ்டுடியோ க்ரீன் ஏக பிஸி!!
» 15 வயது வீராங்கனை ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் தங்கம் வென்று சாதனை! (படங்கள்)
» எந்திரன் – சாதனை மேல் சாதனை
» சூர்யா, தனுஷ், ஆர்யா, அர்ஜுன் படங்கள் போட்டி: தீபாவளிக்கு 6 படங்கள் ரிலீஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum