தடை செய்யப்பட்ட தீவிரவாதி ஆதரவு படம்
Page 1 of 1
தடை செய்யப்பட்ட தீவிரவாதி ஆதரவு படம்
தீவிரவாதி பற்றிய படமொன்று 2 முறை தடை செய்யப்பட்டது. ‘கரும்புலி’ என்ற படத்தை இரண்டு முறை சென்சார் தடை செய்தது. இதுபற்றி இயக்குனர் பரமேஷ்வர் கூறியதாவது: மும்பை நட்சத்திர ஓட்டல் தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட சம்பவம் சென்னையில் நடந்தால் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை கற்பனை கலந்து உருவாக்கிய கதை இது. இப்படம் சென்சாருக்கு திரையிடப்பட்டது. டைட்டிலுக்கும், சில காட்சிகளுக்கும் தடை சொல்வார்கள் என்று நினைத்தோம். ஆனால் படம் முழுவதுமே தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இருப்பதாக கூறி தடை விதித்தனர். பிறகு மறுதணிக்கைக்கு திரையிட்டோம்.
அவர்களும் தடை செய்து, ‘படத்தை அனுமதிக்க வேண்டுமென்றால் குறிப்பிட்ட காட்சிகளையும், சில வசனங்களையும் நீக்க வேண்டும்’ என்றனர். அதற்கு ஒப்புக் கொண்டோம். பிறகு அந்த காட்சிகளை நீக்கிவிட்டு ரீஷூட்டிங் நடத்தி அதை படத்தில் இணைத்தோம். வசனங்களும் மாற்றப்பட்டன. மீண்டும் படத்தை ரீ-ரிவைசிங் கமிட்டிக்கு காட்டினோம். அதை ஏற்று சென்சார் சர்டிபிகேட் வழங்கினர். ஹீரோ மகேஷ், சதக் ரத்தன் மவுலி, அருள், வர்ஷா பாண்டே, பிராட்சி அதிகாரி, சூர்யகிரண் ஆகியோர் நடித்துள்ளனர். பாங்காக், இத்தாலி, புதுச்சேரி மற்றும் கேரளா, சென்னையில் ஷூட்டிங் நடந்துள்ளது. தயாரிப்பு சையத், சி.மணி. இம்மாதம் ரிலீஸ். இவ்வாறு பரமேஷ்வர் கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தீவிரவாதி பதுங்கியிருந்த ஆதாரம்: கமலஹாசனை, விசாரிக்க உத்தரவிட வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் மனு
» மனைவி-மகளுடன் சரண் அடைய வந்தவரை தீவிரவாதி என்பதா?: உமர் அப்துல்லா
» தடை செய்யப்பட்ட பகுதி
» பிரதர்ஸ் - ரீஃபண்ட் செய்யப்பட்ட பேமெண்ட்
» ட்ரிம் செய்யப்பட்ட மாற்றான்
» மனைவி-மகளுடன் சரண் அடைய வந்தவரை தீவிரவாதி என்பதா?: உமர் அப்துல்லா
» தடை செய்யப்பட்ட பகுதி
» பிரதர்ஸ் - ரீஃபண்ட் செய்யப்பட்ட பேமெண்ட்
» ட்ரிம் செய்யப்பட்ட மாற்றான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum