தமிழ் ரசிகர்களை குறி வைக்கும் இந்தி சினிமா
Page 1 of 1

சென்னை : தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய படங்கள் இந்தியில் ரீமேக் செய்வது இப்போது அதிகரித்திருக்கிறது. இதுமட்டுமின்றி இந்தி படங்கள் தமிழ் ரசிகர்களை குறி வைத்து எடுக்கப்படும் போக்கும் சமீபத்தில் அதிகரித்திருக்கிறது. தமிழில் ஹிட்டான ‘தில்லாலங்கடி’, ‘கிக்’ என்ற பெயரில் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் சல்மான் கான், தீபிகா படுகோன் நடிக்கின்றனர். ‘கோ’ படம் ‘சத்யாகிரஹா’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் அமிதாப் பச்சன், அஜய்தேவ்கன், கரீனா கபூர் நடிக்கின்றனர்.
‘துப்பாக்கி’ அதே பெயரில் அக்ஷய் குமார் நடிப்பில் ரீமேக் ஆகி வருகிறது. இதே போல ‘வேட்டை’, ‘7ஆம் அறிவு’, ‘பீட்சா’ ஆகிய படங்களும் ரீமேக் ஆக உள்ளன. கடந்த காலங்களில் தமிழில் இருந்து ரீமேக் செய்யப்பட்ட ‘சிங்ஹம்’(சிங்கம்), ரவுடி ரத்தோர் (சிறுத்தை), காவலன் (பாடிகார்ட்), உத்தமபுத்திரன் (ரெடி) உள்ளிட்ட படங்கள் வசூலை வாரி வழங்கியதால் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய படங்கள் இந்தியில் ரீமேக் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது.
இதற்கிடையில் தமிழ் ரசிகர்களை குறி வைத்தும் இந்தி படங்கள் எடுக்கப்படுகின்றன. சமீபத்தில் இந்தியில் வெளியான ‘அய்யா’ படத்தில் பிருத்விராஜ் தமிழராக நடித்திருந்தார். தமிழ் நடிகையான சில்க் ஸ்மிதாவின் கதை ‘தி டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் வந்தது. மும்பையில் இருந்து ராமேஸ்வரம் வரும் ரயிலில் நடக்கும் கதையாக ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படம் உருவாகிறது.
ஷாரூக் கான், தீபிகா படுகோன் நடிக்கும் இந்தப் படத்தில் சத்யராஜ், மனோரமா, பெசன்ட் ரவி உட்பட பல தமிழ் நடிகர்களும் நடிக்கின்றனர். இந்தி ஹீரோ ஜான் ஆபிரகாம், ‘மெட்ராஸ் கபே’ என்ற படத்தை தயாரித்து நடிக்கிறார். சென்னை உட்பட தென்னிந்தியாவில் இதன் ஷூட்டிங் நடக்க இருக்கிறது. இது விடுதலைப் புலிகள் தொடர்பாக கதை என்றும் கூறப்படுகிறது. நர்கீஸ் பாக்ரீ ஜர்னலிஸ்டாக நடிக்கிறார்.
இதே போல சேதன் பகத் எழுதிய ‘டூ ஸ்டேட்ஸ்’ என்ற நாவல் படமாக்கப்படுகிறது. இது வட இந்தியவர் ஒருவர் தமிழ் பெண்ணை காதலித்து திருமணம் செய்யும் கதை. இதனால் ஏற்படும் கலாசார பிரச்னைகளை இந்த கதை பேசுகிறது. இதில் ஷாரூக் கானும் அசினும் நடிக்க இருக்கிறார்கள். கர்நாடக இசைப் பாடகியான எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு இந்தி, தமிழில் சினிமாவாக உருவாக்கப்படுகிறது. இதில் வித்யாபாலன் நடிக்கிறார். ஷாரூக் கான் ஏற்கனவே தயாரித்து நடித்த ‘ரா.ஒன்’ படத்தில் தமிழராக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘இது ஒருவகையான மார்க்கெட்டிங். தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் இப்போது இந்தி படங்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இதற்கு குறிப்பாக, சமூக வலைத்தளங்கள் மூலமான விளம்பரங்களும் வட இந்தியர்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் பணியாற்றுவதும் காரணம். இருந்தாலும் உலகம் முழுவதும் தமிழர்கள் பரந்து விரிந்திருக்கிறார்கள். தமிழ் அடையாளத்தோடு படம் வெளியானால் சினிமா வியாபாரம் அதிகரிக்கும் என்று இம்முயற்சியில் அவர்கள் இறங்கி இருக்கலாம்’ என்று வினியோகஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தெலுங்கைக் குறி வைக்கும் திரிஷா
» தமன்னாவை குறி வைக்கும் சூப்பர் ஸ்டார்
» தெலுங்கு பட விழாவில் தமிழ் ரசிகர்களை இழிவாக பேசவில்லை – நடிகர் கார்த்தி மறுப்பு
» மொழி தெரியாமல் தமிழ் படத்தில் நடிப்பதா? இந்தி நடிகைகள் தமிழ் கற்க வேண்டும் – டைரக்டர் சேரன்
» தம்பி வழியில் தமிழ் ரசிகர்களை அலட்சியப்படுத்திய சூர்யா!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum