இயக்குநர்களுக்கு நன்றி - நெகிழ்கிறார் தன்ஷிகா
Page 1 of 1

சினிமா பின்னணியில் இல்லாதவர்கள் திரைத்துறையில் சாதிப்பது எப்படி பெரிய விஷயமோ அப்படி நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஒரு பெண் நடிகையாக வலம் வருவதும் பாராட்டப்பட வேண்டிய விஷயம். காரணம், நடுத்தர வர்க்கத்துக்கு என்று ஓர் உடல்மொழி உண்டு. அந்த மொழி, நடிகைக்கு இருக்கக் கூடாது. போலவே உடைகள், அலங்காரப் பொருட்கள் என தன்னை பராமரித்துக் கொள்ளவே அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும். இது நடுத்தர வர்க்கத்தின் பட்ஜெட்டுக்கு அப்பாற்பட்ட விஷயம். இதையெல்லாம் கணக்கில் கொள்ளும்போதுதான் நடிகை தன்ஷிகாவின் வளர்ச்சி புரியும். ‘பேராண்மை’ வழியாக சினிமாவில் வலது காலை எடுத்து வைத்து நுழைந்தவர், ‘அரவான்’ மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். இப்போது பாலா இயக்கத்தில் வெளிவர இருக்கும் ‘பரதேசி’ பல படிகள் அவரை உயர்த்தும் என்கிறது கோடம்பாக்க பட்சி.
‘‘சொந்த ஊர் தஞ்சாவூர். ஆனா, பிறந்து, வளர்ந்தது, படிச்சது எல்லாம் சென்னையில். 11வது படிச்சிட்டு இருந்தப்ப குடும்ப நண்பர் மூலமா சினிமா சம்பந்தமான கண்காட்சி ஒன்றை பார்க்க வாய்ப்பு கிடைச்சது. அங்க நிறைய பேரோட அறிமுகம் கிடைச்சது. ஆனா, அப்பவே அதை மறந்துட்டேன். ஆறு மாதங்கள் கழிச்சு இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் என்னை கூப்பிட்டு நடிக்க வாய்ப்பு கொடுத்தார். நல்ல இயக்குநர், நல்ல கதை. அதனால உடனடியா ஓகே சொன்னேன். இந்தப் படத்துக்கு பிறகு ‘மாஞ்சா வேலு’, ‘அரவான்’ படங்கள்ல நடிச்சேன். ‘பேராண்மை’ல நடிச்சப்ப நான் சின்னப் பொண்ணு. அதனால அந்த வயசுக்குரிய குறும்போட இருந்தேன். இந்தப் படம் முடிய கிட்டத்தட்ட இரண்டு வருஷங்களானது. இடைப்பட்ட காலத்துல சினிமா பத்தி நிறைய கத்துகிட்டேன். இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், பல விஷயங்களை புரிய வைச்சாரு.
‘அரவானு’ம் இப்படித்தான். கிட்டத்தட்ட ஒண்ணரை வருஷங்கள் இந்தப் படத்துக்காக உழைச்சேன். இயக்குநர் வசந்தபாலன், கூடுதலா என்னை செதுக்கினார். இப்ப ‘பரதேசி’. இயக்குநர் பாலா பத்தி நான் சொல்ல வேண்டியதேயில்லை. எந்தளவுக்கு என்னை அவர் மாத்தியிருக்கார்னு படம் பாக்கறப்ப புரிஞ்சுப்பீங்க.இப்படி தமிழ்ச் சினிமாவின் முக்கியமான இளைய தலைமுறை இயக்குநர்கள் கூட எல்லாம் பணிபுரியற பாக்கியம் எனக்கு கிடைச்சதுனாலதான் பேட்டி கொடுக்கிற அளவுக்கு வளர்ந்திருக்கேன். ஒரு சாதாரண செடி வளரக் கூட காற்று, நீர், பதப்படுத்தப்பட்ட நிலம், போதுமான சூரிய வெளிச்சம்னு பல விஷயங்கள் தேவைப்படுது. அப்படியிருக்கிறப்ப மனிதர்கள் மட்டும் தனியா வளர்ந்துட முடியும்னு நினைக்கறீங்களா? நிச்சயம் இல்லை. பல பேரோட இணைந்துதான் உழைக்கவும் முடியும். முன்னேறவும் முடியும். இந்த கூட்டுத்தன்மையை புரிஞ்சுக்கிட்டா எந்தத் துறைலயும் வளர முடியும்.
அப்பா ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்ணறாரு. அம்மா இல்லத்தரசி. ஒரு தங்கை. இதுதான் என் குடும்பம். சினிமா துறை சம்பந்தமான அனுபவங்கள் கிடையாது. ஆரம்பத்துல ரொம்பவே கஷ்டமா இருந்தது. இப்ப அப்படியில்லை. என்னை செதுக்கிய, செதுக்கப் போகும் எல்லா இயக்குநர்களுக்கும் நன்றி. ஸ்கூல் டேஸ்லயே சினிமாவுக்கு வந்துட்டதால அதிகம் ஃபிரெண்ட்ஸ் கிடையாது. சினிமால மட்டும் ஒன்றிரண்டு பேர் இருக்காங்க. ஸோ, வீட்டுப் பறவையாதான் நான் இருக்கேன்...’’ என்று சிரிக்கும் தன்ஷிகாவுக்கு சைனீஸ் உணவுகள் என்றால் கொள்ளைப் பிரியமாம். ‘‘அடிக்கடி சைனீஸ் ஹோட்டலுக்கு போய் ஒரு வெட்டு வெட்டுவேன். மத்தபடி சுவையான எல்லா உணவும் பிடிக்கும்...’’ என்று சப்புக் கொட்டியவர், சட்டென்று தத்துவார்த்த விஷயத்துக்கு தாவினார். ‘‘பொதுவா நடிகைக்கு ஆயுட்காலம் கம்மி. அதனால கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்திகிட்டு வாழ்க்கைல செட்டிலாகிடணும்னு சொல்வாங்க. எனக்கு அதுல உடன்பாடில்லை. ஒண்ணு, ரெண்டு படங்கள்ல நடிச்சாலும் அது பல காலம் பேசப்படணும். இதைத்தான் தாரக மந்திரமா வைச்சிருக்கேன்...’’ என்று சொல்லும் தன்ஷிகா, இப்போது ‘விழித்திரு’, ‘யா யா’ படங்களில் நடித்து வருகிறார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஜய்யின் உழைப்பை பார்த்து வியந்து போனேன் : நெகிழ்கிறார் ஸ்ரீகாந்த்…!
» பாலா படத்தில் நடித்ததே விருது கிடைத்த மாதிரி...! நெகிழ்கிறார் அங்கம்மா வேதிகா...!!
» “பேஸ்புக்கில் மூழ்கும் தன்ஷிகா
» தனுஷ் படத்தில் தன்ஷிகா
» மலையாளப் படம் - நீக்கப்பட்டார் தன்ஷிகா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum