விட்டமின் ஈ அதிகம் உள்ள 10 உணவுகள்!
Page 1 of 1
விட்டமின் ஈ அதிகம் உள்ள 10 உணவுகள்!
17
விட்டமின் ஈவைட்டமின்கள் குறைபாட்டினால் நிறைய பிரச்சனைகள் உடலும் வரும். அதிலும் சரியான உடல் வளர்ச்சிக்கு, வைட்டமின்கள் போதுமான அளவில் இருக்க வேண்டும். வைட்டமின்களில் நிறைய உள்ளன. அவை வைட்டமின் ஏ, சி, ஈ, டி, பி12, பி11. இத்தகைய வைட்டமின்கள் நிறைய நன்மைகளை உள்ளடக்கியுள்ளன. இருப்பினும் அதில் வைட்டமின் ஈ மிகவும் முக்கியமான ஒன்று. வைட்டமின் ஈ சத்துக்கள் உடலில் அதிகம் இருந்தால், உடலில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கலாம்.
ஏனெனில் இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால், கிருமிகள் உடலில் தங்காமல் இருக்கும். அதுமட்டுமில்லாமல், வைட்டமின் ஈ சத்து சருமத்திற்கும் சிறந்தது. இந்த வைட்டமின் ஈ- நிறைந்த உணவுகளை சாப்பிட்டால், முதுமை தோற்றத்தை தள்ளிப் போடலாம். மேலும் உடலில் இரத்தம் உறைதல், நுரையீரலில் மாசுக்கள் படிவது போன்றவை தடுக்கப்படும். குறிப்பாக புற்றுநோய், நீரிழிவு, இதய நோய் உள்ளவர்கள், இந்த வைட்டமின் ஈ நிறைய உணவுகளை அதிகம் சாப்பிட்டால், இந்த நோய்களைக் கட்டுப்படுத்தி தடுக்க முடியும். இப்போது அத்தகைய நன்மைகளை உள்ளடக்கிய வைட்டமின் ஈ நிறைந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!
1. பசலைக் கீரை
பச்சை இலைக் காய்கறிகளுள் ஒன்றான பசலைக் கீரையில் வைட்டமின் ஈ மற்றும் இன்னும் பல ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. எனவே டயட்டில் இதனை சேர்த்துக் கொண்டால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
2. ஆலிவ் ஊறுகாய்
ஆலிவ் ஊறுகாயில் 100 கிராம் வைட்டமின் ஈ உள்ளது. எனவே ஊறுகாய் மிகவும் பிடிக்கும் என்பவர்கள், இந்த ஆலிவ் ஊறுகாயை சாப்பிடலாம்.
3. உலர் மூலிகைகள்
மூலிகைகளில் நிறைய வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. எனவே சாலட், சூப் போன்றவை சாப்பிடும் போது அதில் சுவையை அதிகரிக்கவும், உடலை ஆரோக்கிமாக வைத்துக் கொள்ளவும், உலர் மூலிகைகளை சேர்த்து சாப்பிடுவது நல்லது.
4. வேர்க்கடலை
ஸ்நாக்ஸில் சிறந்ததாக இருக்கும் வேர்க்கடலையில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. குறிப்பாக இதில் கரையக்கூடிய வைட்டமின் ஈ ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், அவை சளி சுரப்பியில் இருக்கும் செல் சவ்வுகளை ஒழுங்குபடுத்தும். அதுமட்டுமின்றி இவை சருமத்துளைகள் ஈஸியாக சுவாசிக்கவும் உதவும்.
5. பாதாம்
நட்ஸில் ஒன்றான பாதாமும் சிறந்த ஸ்நாக்ஸ் ஐட்டங்களில் ஒன்று. இதனை தினமும் சாப்பிட்டால், அதில் உடலுக்குத் தேவையான வைட்டமின் ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கிடைக்கும்.
6. கடுகுக் கீரை
கடுகுக் கீரையில் வைட்டமின் ஈ சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் இதனை பச்சையாகவோ அல்லது பாதியாக வேக வைத்து சாப்பிட்டால், இதில் உள்ள முழு நன்மைகளையும் பெறலாம்.
7. ப்ராக்கோலி
சூப்பர் உணவுகளில் ஒன்றான ப்ராக்கோலியில் வைட்டமின்களான ஏ, சி, டி, ஈ மற்றும் கே போன்றவை அதிக அளவில் நிறைந்துள்ளது. இதனையும் பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிட்டால் நல்லது.
8. சிவப்பு குடைமிளகாய்
குடைமிளகாயில் சிவப்பு குடைமிளகாயில் வைட்டமின் ஈ, சி மற்றும் மற்ற சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் அடங்கியுள்ளன.
9. பிஸ்தா
நட்ஸ் சாப்பிட ரொம் பிடிக்குமா? அப்படியெனில் மறக்காமல் பிஸ்தாவை வாங்கி சாப்பிடுங்கள். அதிலும் உப்பில்லாத வறுத்த பிஸ்தாவை சாப்பிடுவது சிறந்தது.
10. மிளகாய் தூள்
மசாலா பொருட்களில் ஒன்றான மிளகாய் தூளை உணவில் சேர்த்தால், காரம் மட்டுமின்றி உணவுக்கு ஒரு நல்ல சுவையும் கிடைக்கும். மேலும் இதனை உணவில் சேர்த்தால், வைட்டமின் ஈ மற்றும் இதர ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் உடலுக்கு கிடைக்கும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நோயெதிர்ப்புச் சக்தி அதிகம் உள்ள சில சத்து உணவுகள்
» கால்சியம் அதிகம் இருக்கும் 19 உணவுகள்!!!
» நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள அன்னாசி
» விட்டமின் சி நிறைந்த பப்பாளி!
» வயிற்றில் உள்ள கொழுப்பைக் கரைக்கும் உணவுகள்!
» கால்சியம் அதிகம் இருக்கும் 19 உணவுகள்!!!
» நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள அன்னாசி
» விட்டமின் சி நிறைந்த பப்பாளி!
» வயிற்றில் உள்ள கொழுப்பைக் கரைக்கும் உணவுகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum