மாதுளம் பழத்தின் மருத்துவ குணங்கள்!
Page 1 of 1
மாதுளம் பழத்தின் மருத்துவ குணங்கள்!
45
mathulaiமாதுளை பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன. மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது.
அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது. மாதுளம் பழத்தில் பாஸ்பரஸ் 70 மி.கி. உள்ளது. கால்சியம்,இரும்பு ஆகிய தாது பொருட்கள், வைட்டமின்கள் பி,சி ஆகியவை சிறிதளவு உள்ளன.
கால்சியம் உடலில் சேருவதற்கு பாஸ்பரஸ் உதவி புரிகிறது. மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய ரத்தம் உற்பத்தியாகி விடும். மாதுளம் பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.
இது ரத்த உற்பத்திக்கும், ரத்தத்தை தூய்மைப்படுத்தவும் உகந்தது. அடிக்கடி மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் பித்த நோய்கள், வறட்டு இருமல், வயிறு, குடல் புண்கள் (அல்சர்) குணமாகும். மேலும், ஈரல், இதயம் வலுவாகும். ஞாபக சக்தி அதிகரிக்கும். ஜீரண சக்தியையும் அதிகரிக்கும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பேரிச்சம் பழத்தின் மருத்துவ குணங்கள்
» மாதுளம் பழத்தின் மருத்துவ குணங்கள்..!
» பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள்
» இதுவரை தெரிந்து கொள்ளாத மாதுளம் பழத்தின் மருத்துவ குணங்கள்..!
» சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள்
» மாதுளம் பழத்தின் மருத்துவ குணங்கள்..!
» பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள்
» இதுவரை தெரிந்து கொள்ளாத மாதுளம் பழத்தின் மருத்துவ குணங்கள்..!
» சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum