தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காதலியை சிறையெடுக்கும் காதலனின் கதை

Go down

காதலியை சிறையெடுக்கும் காதலனின் கதை  Empty காதலியை சிறையெடுக்கும் காதலனின் கதை

Post  ishwarya Tue Mar 12, 2013 4:52 pm

சென்னை : ராயல் பிரெண்ட்ஸ் மூவிஸ் சார்பில் மாடசாமி, தமீம் அன்சாரி தயாரிக்கும் படம், ‘துணிந்து செல்’. சுரேந்தர், ஹென்னா, பாலசுந்தரம் சந்தானம், அல்வா வாசு, கிருஷ்ணமூர்த்தி, சுப்புராஜ் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ஜான் ஆனந்த். இசை: அழகர் பொன்ராஜ். பாடல்கள்: கிருதயா, பாலா, பிரசன்னா, அழகர் பொன்ராஜ். வசனம், ரவி பிரசன்னா. கதை, திரைக்கதை எழுதி லேனா மூவேந்தர் இயக்குகிறார். இப்படத்தின் தொடக்க விழாவில் மகேந்திரன், கே.பாக்யராஜ், பூர்ணிமா கலந்துகொண்டனர். பிறகு நிருபர்களிடம் லேனா மூவேந்தர் கூறியதாவது:

‘கண்ணுக்குள்ளே’ படத்துக்குப் பிறகு நான் இயக்கும் படம். எந்த தடையாக இருந்தாலும் சரி, அதை தகர்த்து தூளாக்கும் மந்திரச்சொல், ‘துணிந்து செல்’ என்பதுதான். கதைக்கு பொருத்தமாக இருந்ததால், அதையே தலைப்பாக்கி விட்டேன். மக்களின் அத்தியாவசிய குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வாட்டர் கேன் கம்பெனியை அடிப்படையாக வைத்து படம் உருவாகிறது. காதலுக்காக தன் காதலியையே சிறையெடுக்கும் காதலனின் கோணத்தில் கதை நகர்கிறது. நான் முக்கிய வேடத்தில் நடிக்கிறேன். நாகர்கோவில், தூத்துக்குடி துறைமுகம் பகுதிகளில் ஷூட்டிங் நடக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum