உங்கள் ஆண் நண்பருடனான நெருக்கத்தை அதிகரிப்பது எப்படி?
Page 1 of 1

ஒரு உறவை எற்படுத்திக் கொள்வது எளிது. ஆனால் அதை தக்க வைத்துக்கொள்வது கடினம். ஒரு ஆண் நண்பருடனான உறவும் அப்படித்தான். இயற்கையிலேயே ஆணும், பெண்ணும் பல விதத்தில் வேறுபட்டிருப்பார். பொதுவாக ஒவ்வொரு பெண்ணிற்கும் தனது ஆண் நண்பருடன் நெருக்கத்தை மேலும் பலப்படுத்த வேண்டும் என்ற ஆவலிருக்கும். இரு துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும்.
அதுபோலதான் இந்த உறவும் ஈர்க்கப்படுகிறது. ஒவ்வொரு உறவிலும் உயர்வும், வீழ்ச்சியும் சில நேரங்களில் இருக்கத்தான் செய்யும். கோபம் கொண்டால் இருவரது உறவும் முற்றிலுமாக அற்றுப்போக வாய்ப்புள்ளது. இருவரில் யார் தவறு செய்தாலும் மன்னிப்பு கேட்பதும், மன்னிப்பதும், ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காத தன்மையை ஏற்படுத்தும். இப்பொழுது இந்த உறவை மேலும் வலுப்படுத்த, என்னென்ன வழிவகைகள் உள்ளன என்று பார்ப்போம்.
வழிமுறைகள் :
1. மனம் விட்டுப் பேசவும். அன்றைய நாளின் திட்டங்கள் குறித்து சொல்லவும். மேலும் அவருடைய திட்டத்தையும் அறிந்து கொள்ளவும். ஒருவேளை அன்றைய தினம் அவருக்கு சரியில்லை எனில் அவரை மகிழ்விப்பதற்கு, அவரை அழுத்தமாக கட்டி அணைத்து அவர் மீது கொண்டுள்ள அக்கறையை தெரியப்படுத்தவும்.
2. அவரை மனதார பாராட்ட வேண்டும். அவர் ஒரு விளையாட்டுக்குழுவில் இருந்தால் அங்கே செல்லவும். உங்களால் எவ்வளவு சத்தமாக உற்சாகப்படுத்த முடியுமோ அவ்வளவு சத்தமாக உற்சாகப்படுத்தவும். அதன்மூலம் அவருக்காக மட்டுமே இருப்பதை தெரியப்படுத்தவும்.
3. அவருடன் அதிக நேரம் செலவிடவும். உங்கள் இடத்திற்கு அவரை அழைக்கவும். அவருடன் தனியாகவோ அல்லது நெருங்கிய நண்பர்களுடனோ நேரத்தை செலவிட ஒரு வழியைக் கண்டுபிடிக்கவும். அதே நேரத்தில் அவரது தனிப்பட்ட விஷயங்களுக்கு மதிப்பளிக்கவும். தனியாகவோ மற்றும் ஒருவரையொருவர் விட்டு விலகி நேரம் செலவிடுவது முற்றிலும் சரி என்பதை மறக்க வேண்டாம்.
4.தன்னைப் பற்றி தானே நல்லதாக இருப்பதாக அவரை உணர வைக்கவும். அவருக்கு ஒரு அன்பளிப்பை வாங்கி அளிக்கவும். அவரைப் பாராட்டவும். நகைச்சுவையாக பேசவும். அவருடனான தனிப்பட்ட பிணைப்பை வளர்க்க ஆரம்பிக்கும் போது, உங்களுடனான தொடர்பை சுகமானதாக அவர் உணர்வார்.
5. அவர் உங்களை நம்புவதற்கான வாய்ப்பை வழங்கவும். அவரை ஏமாற்றாமல் உறவில் நம்பிக்கை வைக்கவும். அவர் மீதும், அவரது செயல்கள் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும். ஆரோக்கியமான உறவுக்கு மிகவும் இன்றியமையாததாக விளங்குவது ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள நம்பிக்கை மற்றும் கருத்துப் பரிமாற்றம் என்பதை நினைவில் கொள்ளவும். நம்பிக்கையின்மை நிச்சயமாக ஒரு உறவை கெடுக்கும்.
6. ஒருவரையொருவர் சரியாக புரிந்து கொண்டதாக நினைத்தால், உறவின் அடுத்த நிலைக்குச் செல்ல அவர் விரும்பினால், அதை அவரிடம் நேரடியாக கேட்பதில் தவறொன்றும் இல்லை. அவர் உங்களுடனான உறவை ஏற்படுத்திக் கொள்ள விரும்புகிறார் என உறுதி செய்த பின்னர் செய்வதே நல்லது. ஆரம்பத்திலேயே செய்வது நல்லதல்ல.
7. அவர் உங்களை எப்படி நடத்துகிறார் என்பதை கவனிக்கவும். உங்களது அன்றைய நாள் மோசமாக இருப்பின் உங்களை மகிழ்ச்சிப்படுத்த முயற்சி செய்கிறாரா? உங்களை மகிழ்விக்க அல்லது சிரிக்க வைக்க முனைகிறாரா? உங்களுக்கு மதிப்பளிக்கிறாரா? அப்படியானால், நீங்கள் உங்களது ஆண் நண்பருடனான நெருக்கத்தின் அடுத்த கட்டத்தை அடைய முடியும்.
குறிப்புகள்:
- நீங்கள் அவருக்கு ஒரு பரிசளிக்க முடிவு செய்தால், அவரிடமிருந்து திரும்ப பரிசை எதிர்பார்க்க வேண்டாம்.
- பொறுமையை கடைப்பிடிக்கவும். உங்கள் ஆண் நண்பருடனான நெருக்கம் ஒரு நாளிலோ அல்லது ஒரு வாரத்திலோ ஏற்படுவதில்லை. அதற்கு சில காலம் பிடிக்கலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உங்கள் ஆண் நண்பருடனான நெருக்கத்தை அதிகரிப்பது எப்படி?

» உங்கள் விலையுயர்ந்த பட்டுப்புடைவைகளை பராமரிப்பது எப்படி?
» உங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி ?
» கம்ப்யூட்டரின் வேகத்தினை அதிகரிப்பது எப்படி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum