டில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை
Page 1 of 1

புதுடில்லி : டில்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட பஸ் டிரைவர் ராம் சிங், திகார் சிறையில் இன்று காலை 5 மணிக்கு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான்.
டிசம்பர் 16ம் தேதி ஓடும் பஸ்சில் தனது நண்பருடன் சென்ற போது 23 வயது மருத்துவ மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின் மாணவியும், அவரது நண்பரும் இரும்பு கம்பியால் பலமாக தாக்கப்பட்டு ஓடும் பஸ்சில் இருந்து வீசி எறியப்பட்டனர். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மருத்துவ மாணவி சுமார் 15 நாட்கள் போராட்டத்திற்கு பின் டிசம்பர் 29ம் தேதி சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்தார். நாட்டையே உலுக்கிய இந்த கொடூர சம்பவ தொடர்பாக பஸ் டிரைவர் ராம் சிங் மற்றும் அவரது நண்பர்கள் முகேஷ், பவன் குப்தா,வினய் சர்மா,அக்ஷை தாகூர் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்து டில்லி திகார் சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கில் குற்றவாளிகள் அனைவருக்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட டிரைவர் ராம்சிங் இன்று காலை 5 மணிக்கு சிறை எண் 3ல் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அவனது உடல் பிரேத பரிசோதனைக்காக டில்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ராம்சிங், ஜனவரி 4ம் தேதி இதே போன்று தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இருப்பினும் சக கைதிகள் அவரை காப்பாற்றி உள்ளதாக சிறைத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தற்கொலை வழக்கு: நடிகை நிலா பரபரப்பு வாக்குமூலம்.!
» மாணவி கற்பழிப்பு வழக்கு குற்றவாளிக்கு ‘திடீர்’ நெஞ்சுவலி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதால் விசாரணை தாமதம்
» நடிகை வைஷ்ணவி தற்கொலை வழக்கு – டிவி நடிகர் தேவானந்த்துக்கு 5 ஆண்டு சிறை
» பாடகி நித்யஸ்ரீ கணவர் தற்கொலை: நித்யஸ்ரீயும் தற்கொலை முயற்சி
» வாடகைக் குற்றவாளி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum