பேட்டரி கோளாறுகள் சரிசெய்யப்பட்டு அமெரிக்காவின் ‘போயிங் 787’ விமானங்கள் விற்பனைக்கு தயார்
Page 1 of 1
பேட்டரி கோளாறுகள் சரிசெய்யப்பட்டு அமெரிக்காவின் ‘போயிங் 787’ விமானங்கள் விற்பனைக்கு தயார்
அமெரிக்காவின் போயிங் விமான நிறுவன தயாரிப்பான ‘போயிங் 787’ விமானங்களில் உள்ள பாட்டரியில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து பறப்பதற்கு தடை செய்யப்பட்டன. குறைபாடுகள் நீக்கப்பட்ட நிலையில், தற்போது அவை மீண்டும் விற்பனைய எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன.
பாட்டரி குறைகள் சரிசெய்யப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்புடன், நம்பகத்தன்மை கொண்ட பயணத்தை இந்த விமானங்கள் அளிக்கும் என்று இந்நிறுவனத்தின் வர்த்தக துணைத்தலைவர் டின்செத் தெரிவித்துள்ளார்.
இதுதவிர, இக்கம்பெனியின் மற்றொரு பிரபல மாதிரியான ‘போயிங் 777’ ஜெட் வகைகளும், சீரமைக்கப்பட்ட வடிவத்தில் விற்பனைக்குத் தயாராவதாக அவர் கூறினார்.
வளரும் நாடுகளான சீனா, தென்கிழக்கு ஆசிய நாடுகள், லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து விற்பனை குறித்த விசாரணைகள் வந்துள்ளதாகக் குறிப்பிட்டார். அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் புதுப்பிக்கப்பட்ட விமானங்கள் பயன்படுத்தப்படலாம் எனவும், குறைந்த கட்டண விமான சேவைகளின் எண்ணிக்கை விமானத்துறை வளர்ச்சிக்கு நம்பிக்கை தருவதாக உள்ளது எனவும் போயிங் வர்த்தகத் துணைத்தலைவர் ராண்டி டின்செத் கூறினார்.
தொழில்துறை வல்லுனர்களின் கருத்து மாறுபடுகின்றபோதிலும், நிச்சயமற்ற பொருளாதார நிலையிலும், போயிங் கம்பெனி விற்பனை அதிகரிக்கும் வாய்ப்பை நம்பிக்கையுடன் எதிர்நோக்குகிறது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» விற்பனைக்கு எளிய வழிமுகைள்
» விற்பனைக்கு எளிய வழிமுறைகள்
» இந்தப் பூக்கள் விற்பனைக்கு
» திருச்சி பேட்டரி கடை அதிபர் வீட்டில் ரூ.17 லட்சம் நகை-பணம் கொள்ளை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum