தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வியட்நாமில் உள்ளூர் நஞ்சு மூலம் மரண தண்டனை

Go down

வியட்நாமில் உள்ளூர் நஞ்சு மூலம் மரண தண்டனை Empty வியட்நாமில் உள்ளூர் நஞ்சு மூலம் மரண தண்டனை

Post  meenu Mon Mar 11, 2013 6:24 pm

வியட்நாம் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனையை நிறைவேற்ற தேவைப்படும் நஞ்சை உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டுத் தயாரிப்பாளர்கள், மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு விஷ ஊசி மூலம் நஞ்சை செலுத்த தேவைப்படும் மருந்தை வியட்நாமுக்கு ஏற்றுமதி செய்ய மறுத்துள்ள சூழலில் உள்நாட்டிலேயே இந்த மருந்தை தயாரிப்பது எனும் முடிவு வந்துள்ளது.

அந்நாட்டில் 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு யாரையும் சுட்டு மரண தண்டனையை நிறைவேற்றும் வழக்கத்தை அரசு நிறுத்திய பிறகு, அங்கு இன்னும் சுமார் 500 பேர் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர்.

அங்கு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நஞ்சின் மூலம் மரண தண்டனை நிறைவேற்றும் புதிய சட்டத்தை அடுத்து, ஐரோப்பிய ஒன்றியும் வியட்நாமுக்கு இவ்வகையான நஞ்சை ஏற்றுமதி செய்ய மறுத்து விட்டது.

இதையடுத்து உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நஞ்சைக் கொண்டு மரண தண்டனையை நிறைவேற்றும் வகையில் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படும் என வியட்நாமின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் புதிய மருந்து எவ்வகையானது என்பது குறித்து அவர் எந்தவிதமன தகவலையும் வெளியிடவில்லை.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum