தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சவுதி அரேபியாவில் சி ஐ ஏ வின் ரகசிய தளம்

Go down

சவுதி அரேபியாவில் சி ஐ ஏ வின் ரகசிய தளம் Empty சவுதி அரேபியாவில் சி ஐ ஏ வின் ரகசிய தளம்

Post  meenu Mon Mar 11, 2013 6:08 pm

சவுதி அரேபியால் அமெரிக்க உளவு அமைப்பான சி ஐ ஏ ஒரு ரகசிய தளத்தை இயக்கி வருவது இப்போது தெரிய வந்துள்ளது.

அமெரிக்கா, ட்ரோன் எனப்படும் தனது ஆளில்லா வேவு விமானங்களை இயக்கவென்றே சவுதி அரேபியாவில் கடந்த இரு ஆண்டுகளுக்காக ஒரு ரகசிய தளத்தை சி ஐ ஏ இயக்கி வருகிறது.

இந்த வசதி குறித்து அமெரிக்க ஊடகங்களுக்குத் தெரியும் என்றாலும், இது குறித்து அவை இதுவரை செய்தி வெளியிடவில்லை.

ஏமனில் இருக்கும் அல் கையீதா உறுப்பினர்களை தாக்கிக் கொல்வதற்காக இந்த தளம் அமைக்கப்பட்டது.

இங்கிருந்து இயக்கப்பட்ட ஒரு ஆளில்லா வேவு விமானம் ஏமனில் இருந்த மதகுரு அன்வர் அல் அவ்லகியை 2011 இல் கொன்றது.

அமெரிக்காவில் பிறந்த இவர், அரவு வளைகுடாவில் அல் கையீதாவின் ஏமன் கிளையின் வெளித் தாக்குதல்களுக்கான பொறுப்பாக இருந்தார்.

அமெரிக்காவால் சவுதி அரேபியாவிலிருந்து இயக்கப்பட்டு வரும் இந்தத் தளம் எங்கேயிருக்கிறது என்பது குறித்த தகவல்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை.

சவுதி அரசாங்கத்துடன் அமெரிக்கா மிகவும் நெருங்கி உறவாடுவதாக இஸ்லாமிய தீவிரவாதிகள் நீண்ட காலமாக புகார் கூறி வருகின்றனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum