மாற்றுத் திறனாளிகளை விளையாட்டில் ஊக்குவிக்க இலங்கை அரசு திட்டம்
Page 1 of 1

இலங்கையின் வடக்கே யுத்த மோதல்கள் தீவிரமாக இடம்பெற்ற கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் போரினாலும், வேறு காரணங்களினாலும் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளை விளையாட்டுத் துறையில் ஊக்குவிக்கம் நோக்கத்துடன் அவர்களை ஓர் அமைப்பின் கீழ் ஒன்றிணைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.
இதற்கென மன்னார், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் கிளிநொச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
"விளையாட்டுத் துறையில் ஊக்குவிப்பதன் மூலம் சமூகத்தில் இருந்து ஒதுங்கியிருக்கின்ற மாற்றுத் திறனாளிகளை சமூகச் செயற்பாடுகளில் பங்கெடுக்கச் செய்ய முடியும். அவர்களது வாழ்க்கையை அதன் ஊடாக முன்னேற்ற முடியும்" என்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்து மாற்றுத்திறனாளிகளுடன் கலந்துரையாடிய விளையாட்டுத் துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே பிபிசியிடம் தெரிவித்தார்.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் இருப்பதாக அதிகாரிகள் கணிப்பிட்டிருக்கின்றார்கள்.
மாற்றுத்திறனாளிகளிலும் விளையாட்டுத் திறமை கொண்டவர்கள் பலர் இருக்கின்றார்கள் எனக் கூறும் அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே, அவர்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்கி, தேசிய மட்டத்தில் உயர்த்தி, பராலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கு பெறச் செய்ய தாங்கள் எண்ணியிருப்பதாகக் குறிப்பிடுகிறார்.
"யுத்தத்தினால் பல வழிகளிலும் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு வாழ்வாதார உதவிகள் போதிய அளவில் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கியிருக்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு சிறிய அளவிலாவது வாழ்வாதார உதவிகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கத்தில் அரசாங்க அதிகாரிகளின் அனுசரணையோடு, சிலாவத்தை பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கென வலுவிழந்தோர் சங்கம் என்ற ஓர் அமைப்பை தாங்கள் உருவாக்கியிருக்கிறோம்" என அதன் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள முருகுபிள்ளை குகனேசன் கூறுகின்றார்.
தமது கிராமப் பிரதேசத்தில் மாத்திரம் 74 மாற்றுத் திறனாளிகள் இருப்பதாகக் கூறும் அந்த அமைப்பின் செயலாளர் சதாசிவம் சகிலா, தமது அமைப்பில் உள்ளவர்களுக்கு அமைச்சரிடமிருந்து வாழ்வாதார உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதே தமது நோக்கம் என கூறினார்.
வாழ்வாதார உதவிகள் வேண்டும் என்ற மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை குறித்து கருத்து வெளியிட்ட அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே, விளையாட்டுத் துறையில் இணைந்து செயற்படுவதன் மூலம் அவர்கள் தமக்குரிய வாழ்வாதாரத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என கூறினார்.
விளையாட்டைப் போலவே வாழ்வாதார உதவியும் முக்கியம் என்றும் இந்த இரண்டில் முதன்மை பெறுவது வாழ்வாதாரம் என்றும் மன்னாரைச் சேர்ந்த இராயப்பு ஜீவதயாளன் சுட்டிக்காட்டினார்.
"முதலில் அவர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட வேண்டும். அதன் பின்னர் அவர்கள் விளையாட்டுத் துறையில் ஈடுபட்டு முன்னேற முடியும்" என அவர் தெரிவித்தார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» புற்றுநோய் முன் கண்டறியும் சோதனை திட்டம்: மத்திய அரசு அறிவிப்பு
» இலங்கை 20-20 யில் அழகிகளை விருந்துபடைத்து சூதாட்டம் நடத்த திட்டம்

» முக்கோண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு: இலங்கை அணியில் மஹ்ரூப், சானக்க
» ராஜபக்சாவுக்கு அசின் நெருக்கமானவர்! சொல்கிறது இலங்கை அரசு!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum