"முதுமையில் உடற்பயிற்சி மூளையை ஆரோக்கியமாக்கும்"
Page 1 of 1

அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலம் மூளை சுருங்குவதைத் தடுத்து, டிமெண்டியா எனப்படும் நினைவிழப்பு நோய் வராமல் பார்த்துக்கொள்ள முடியும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அறுபது வயதுக்கு மேற்பட்ட 638 பேரிடம் செய்த ஆய்வின் முடிவுகளை வெளியிட்டிருக்கிறார்கள்.
அறுபது எழுபது வயதுகளில் இருப்பவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலம் மூளை சுருங்குவதை தடுக்க முடியும் என்றும், இதன் மூலம் வயோதிகத்துடன் தொடர்புடைய டிமெண்டியா எனப்படும் நினைவிழப்பு நோயை தடுக்கமுடியும் என்றும் இந்த ஆய்வின் முடிவுகள் காட்டுவதாக இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
உடற்பயிற்சி என்றதும் ஏதோ கடினமான உடற்பயிற்சி தேவை என்பதல்ல; தினந்தோரும் நல்ல நடைபயிற்சி செய்தாலே அதுவும் உரிய பலன் தரும் என்கிறார்கள் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள். அதேசமயம் மூளைக்கு வேலை தரும் சுருக்கெழுத்து, சொடோகு போன்ற விளையாட்டுக்கள் வயோதிகத்தில் மூளை சுருங்காமல் தடுக்கவில்லை என்றும் இவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
வயது ஆக ஆக, பொதுவாக மனிதர்களின் மூளை சுருங்குவது இயல்பு. இப்படி மூளை சுருங்கும்போது, மனிதர்களின் நினைவாற்றல் இழப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்படும். மூளையில் கட்டளைகள் உருவாகும் இடம் கிரே மேட்டர் என்கிற சாம்பல் பகுதி என்றும், அந்த கட்டளைகளை கடத்தும் பகுதி வைட் மேட்டர் என்கிற வெள்ளைப்பகுதி என்றும் இரண்டாக அறியப்படுகிறது. இதில் வயதாக ஆக, மூளையின் வெள்ளைப்பகுதி பாதிக்கப்படும். சாம்பல் பகுதி சுருங்கும்.
தினசரி நடைப்பயிற்சி இந்த இரண்டையும் தடுக்கிறது என்பது தான் எடின்பர்க் ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு. உடற்பயிற்சியினால் ரத்த சுழற்சி ஊக்குவிக்கப்படுவதால், அது மூளை செல்களில் ரத்த சுழற்சியை அதிகப்படுத்தி மூளையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதால் மூளை சுருங்காமல் தடுக்கப்படுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
எனவே வயதான காலத்தில் மூளைத்திறனை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள விரும்புபவர்கள், தினசரி உடற்பயிற்சி செய்வது அவசியம் என்பது அவர்களின் அறிவுரை.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முதுமையில் உடற்பயிற்சி மூளையை ஆரோக்கியமாக்கும்"
» முதுமையில் ஆரோக்கியத்துடன் வாழ உடற்பயிற்சி
» முதுமையில் ஆரோக்கியம் தரும் உடற்பயிற்சி
» மூளையை சுறுசுறுப்பாக்கும் உடற்பயிற்சி
» முதுமையில் உற்சாகம் வேண்டுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum