"துரித உணவு அதிகம் உண்டால் ஆஸ்துமா, எக்ஸிமா ஆபத்து அதிகரிக்கிறது"
Page 1 of 1

வாரத்துக்கு மூன்று முறை துரித உணவு வகைகளை உண்ணும் பழக்கம் கொண்ட பிள்ளைகளுக்கு ஆஸ்துமா என்ற நுரையீரல் கோளாறு, எக்ஸிமா எனப்படும் தோல் நோய் போன்றவை வருவதற்கான ஆபத்துகள் அதிகரிக்கின்றன என்று உலக அளவில் உணவுப் பழக்கங்கள் மற்றும் நோய்கள் இடையிலான சம்பந்தம் தொடர்பில் ஆராய்ந்தவர்கள் கூறுகின்றனர்.
ஐம்பது நாடுகளில் இருந்து ஐந்து லட்சம் பிள்ளைகளின் உணவு மற்றும் உடல் நலம் தொடர்பான தரவுகளை ஆராய்ந்தபோது, ஒவ்வாமையால் ஏற்படும் ஆஸ்துமா, எக்ஸிமா போன்ற உடல்நலப் பிரச்சினைகள் அதிகமாக வருவதற்குக்மோசமான உணவுப் பழக்கங்களும் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
தொடர்புடைய விடயங்கள்
உடல்நலம்
துரித உணவுகளை கடையில் வாங்கிச் சாப்பிடும் வழக்கம் உடையவர்கள் இடையே ஆஸ்துமா, எக்ஸிமாவைத் தாண்டி கண் அரிப்பு, கண்ணில் இருந்து நீர் வழிதல் ஆகிய பிரச்சினைகளும் அதிகரிக்கின்றன.
நிறைய பழங்களை சாப்பிடுவதால் இந்த நோய்களில் இருந்து பிள்ளைகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றும் தொராக்ஸ் என்ற மருத்துவ சஞ்சிகையில் வெளியான ஆய்வின் முடிவுகள் காட்டுகின்றன.
துரித உணவுகளில் அதிகம் காணப்படுகின்ற கெட்ட கொழுப்பு பிள்ளைகளுடைய நோய் எதிர்ப்பு சக்தியைப் பாதிக்கின்றன என்றும், பழங்களில் காணப்படும் அண்டிஆக்ஸிடெண்ட்ஸ் போன்ற நல்ல சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை விருத்தி செய்கின்றன என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உலக அளவில் துரித உணவு மோகம் பெரிதாக அதிகரித்துவருகின்ற சூழ்நிலையில் அதில் இருக்கக்கூடிய ஆபத்துகள் பற்றி மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம் என்று ஆய்வறிக்கையைத் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» துரித உணவு அதிகம் உண்டால் ஆஸ்துமா, எக்ஸிமா ஆபத்து அதிகரிக்கிறது"
» ஆஸ்துமா நோயாளிகளுக்கு புதிய கருவி பணம்தான் கொஞ்சம் அதிகம்!
» கர்ப்பிணிகளே, கிரீன் டீ அதிகம் குடிக்காதீங்க: கருவிற்கு ஆபத்து!
» கர்ப்பிணிகளே, கிரீன் டீ அதிகம் குடிக்காதீங்க: கருவிற்கு ஆபத்து
» கர்ப்ப காலத்தில் கிரீன் டீ அதிகம் குடிப்பது கருவிற்கு ஆபத்து!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum