தானம் செய்வது எப்படி?
Page 1 of 1
தானம் செய்வது எப்படி?
மகாபாரதத்தில் உள்ள விதுர நீதியில் பல விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. விதுர நீதி திருதராஷ்டிரனுக்காக விதுரர் சொன்னது ஆகும். விதுரர் மகா ஞானி. அவர் தர்மத்தின் அம்சம் ஆவார். உபதேசங்கள் தர பலர் இருந்தாலும் உபதேசங்களை உபதேசிப்பவர்கள் முதலில் பின்பற்ற மாட்டார்கள். ஆனால் விதுரர் அப்படி இல்லை.
அவர் பின்பற்றியதையே உபதேசித்துள்ளார். அந்த வகையில் தானம் செய்வது பற்றி விதுரர் கூறி இருப்பதாவது:- தானம் செய்ய நாம் நேர்மையாக சம்பாதித்த பொருளையே கொடுக்க வேண்டும். நேர்மையற்ற வழியில் வந்ததை கொடுத்தால் அது தானம் ஆகாது.
அந்த காலத்தில் ராஜாக்கள் தானம் கொடுக்கும் போது தானமாக கொடுக்கப்படும் பொருள் நேர்மையாக சம்பாதித்தது என்று பிரதிக்ஞை செய்தால் தான் ஞானிகள் பெற்றுக்கொள்வார்களாம். எனவே தானம் கொடுக்கும் பொருள் நேர்மையாக சம்பாதித்ததாக இருக்க வேண்டும். அடுத்து தானம் கொடுத்தபின் அந்த பொருள் நமது இல்லை என்ற எண்ணம் வந்து விட வேண்டும்.
அந்த பொருள் மீது நாம் நமது பெருமைக்காக தானம் கொடுத்தால் பெருமை நிச்சயம் கிட்டும். ஆனால் தானம் செய்ததற்கான புண்ணியம் கிடைக்காது. (தான் ஒருவனுக்கு ஒரு பொருளை கொடுத்து விட்டு அதை நான் தான் கொடுத்தேன் என்று சொல்லிக் கொள்பவனுக்கு நரகம் தான் கிட்டும் என்று ஏற்கனவே விதுரர் கூறி உள்ளார். இவ்வாறு தானம் கொடுப்பது பற்றி விதுரர் தெரிவித்து உள்ளார்.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» தானம் செய்வது எப்படி?
» உடல் உறுப்பு தானம்: ஏன்? எதற்கு? எப்படி?
» F.I.R பதிவு செய்வது எப்படி?
» மேஜிக் செய்வது எப்படி?
» வழிபாடு செய்வது எப்படி?
» உடல் உறுப்பு தானம்: ஏன்? எதற்கு? எப்படி?
» F.I.R பதிவு செய்வது எப்படி?
» மேஜிக் செய்வது எப்படி?
» வழிபாடு செய்வது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum