தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பருத்தி தானம் கொடுங்கள்

Go down

பருத்தி தானம் கொடுங்கள் Empty பருத்தி தானம் கொடுங்கள்

Post  gandhimathi Thu Jan 17, 2013 12:42 pm


தானங்கள் பலவற்றிலும் பருத்தி தானமே மிகவும் சிறந்தது. அந்த பருத்தி தானமே மகர்தானம் என்ற பெயரை பெற்றது. அறப்படி வாழ்ந்து அறங்களையே புகன்று, நான்கு வேதங்களையும் நன்றாக அறிந்தவர்கள் பூணுகின்ற பூனூலுக்கு பருத்தியே ஏதுவானது. சகல ஜீவன்களும் உலகில் வாழ்கின்ற காலத்தில் பருத்தியே பயனாவதால் அது மிகவும் சிறப்புடையதாகும்.

பருத்தி தானம் செய்தால், மாமுனிவர்களும் பிரமருத்திர இந்திராதி தேவர்களும் திருப்தியடைவார்கள். பருத்தி தானம் செய்தவன் வாழ்நாள் முடிந்த காலத்தில், சிவலோகத்தை அடைந்து, அங்கேயே வாசம் செய்து, பிறகு சகல குண சம்பன்னனாய் அழகிய மேனியை உடையவனாய், மகா பலசாலியாய், தீர்க்காயுள் உடையவனாய் மீண்டும் பூமியில் பிறந்து யாவரும் போற்றிப்புகழ நெடுஞ்காலம் வாழ்ந்து சுவர்க்கலோகத்தை அடைவான்.

தானங்கள் செய்வதற்கு சிறந்த காலம், ஜீவன் மரிக்கும் காலத்தில் செய்வதே ஆகும். பருத்தி தானத்தை செய்தல் எம தூதர்களிடத்தில் பயம் உண்டாகாது. தானியங்களை தானம் செய்தால் கூற்றவனும் அவனது தூதர்களும் மகிழ்ந்து, ஜீவனுக்கு வேண்டியவற்றை எல்லாம் வழங்குவார்கள்.

கயா சிரார்த்தம் செய்வதை விட தந்தை, தாய் இறக்கும் சமயத்தில் அவன் தன் தாய், தந்தை அருகிலேயே இருந்து கொண்டு செய்வதே உத்தமமாகும். மரிக்கும் காலத்தில் இரும்பை தானம் செய்தால் யமன் மகிழ்வான். யமதூதர்கள் அஞ்சுவார்கள், காண்டா மிருகன், ஒளதும்பரன், சம்பரன், சார்த்தூலன் முதலிய யமதூதர்கள் திருப்தி அடைவார்கள்.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum