பிரபல நடிகரும், மல்யுத்த வீரருமான தாரா சிங் காலமானார்
Page 1 of 1

இந்தியாவின் மல்யுத்த வீரரும் நடிகருமான தாரா சிங் காலமானார்.
கடந்த வாரம் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து 83 வயதான அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
எனினும் அவர் உயிர் பிழைப்பதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து புதன்கிழமை இரவு அவர் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அவரது மூளையில் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்ததாக மருத்துவர்கள் குடும்பத்தாரிடம் தெரிவித்த பின்னர் அவர் தமது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.
காலமான தாரா சிங் 1960 ஆம் ஆண்டு உலக மல்யுத்தப் பட்டத்தை வென்றவர். பின்னர் பல ஹிந்தி திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தார்.
இந்தியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராமாயணம் தொடரில் அவர் ஹனுமானாக நடித்தார். அதன் மூலம் அவர் மேலும் மக்களிடம் பிரபலமானார்.
அவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையில் 2003 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டுவரை உறுப்பினராகவும் இருந்தார்.
அஞ்சலிகள்
மறைந்த தாரா சிங்
கிங் காங், ஃபௌலத், கல் ஹோ நா உட்பட பல ஹிந்தி திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். 2007 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ஜம் வி மெட் எனும் திரைப்படமே அவரது இறுதி திரைப்படம்.
மறைந்த தாரா சிங் குறிப்பிடத்தகுந்த ஒரு திரைப்பட நடிகர் மற்றும் சர்வதேச அளவில் பிரபலமான மல்யுத்த வீரர் என்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தமது அஞ்சலியில் தெரிவித்துள்ளார்.
அவர் மிகச்சிறந்த ஒரு மனிதர் என்றும், மதிப்பு மிக்க பிரபலமான ஒரு இந்தியர் என்று நடிகர் அமிதாப் பச்சன் டிவிட்டரில் கூறியுள்ளார்.
பிரபல நடிகர் மகேஷ் பட் டிவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கலில், நமது சிறு வயது கதாநாயகர்கள் காலமாகும் போது, உலகமே வெறுமையானது போன்ற உணர்வு ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பிரபல ஹாக்கி வீரர் லெஸ்லி கிளாடியஸ் காலமானார்
» 60களின் பிரபல பாடகர் ஸ்காட் மெக்கென்ஸி காலமானார்
» பிரபல நடிகர் தேவ் ஆனந்த் காலமானார்
» பிரபல ஓவியர் மரியோ மிராண்டா காலமானார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum