தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பெசன்ட் நகர் ஆரோக்கிய அன்னை

Go down

 பெசன்ட் நகர் ஆரோக்கிய அன்னை  Empty பெசன்ட் நகர் ஆரோக்கிய அன்னை

Post  amma Thu Jan 17, 2013 12:19 pm




வேளாங்கண்ணி கடற்கரையில் அன்னை மரியா செய்யும் அற்புதங்களை, சென்னை மக்களும் பெற வேண்டும் என்ற சிந்தனையில் பெசன்ட் நகர் கடற்கரையில் ஆரோக்ëகிய அன்னை ஆலயம் உருவானது. அருட்தந்தை பி.டி.அருளப்பாவின் முயற்சியால் 1972ஆம் ஆண்டு இந்த ஆலயம் கட்டப்பட்டது. 2000ல் பெசன்ட் நகர் ஆலயம் விரிவாக்கம் செய்யப்பட்டது.

வேளாங்கண்ணி அன்னையின் காட்சிகளை விளக்கும் ஓவியங்கள் ஆலய மேற்கூரையில் காணப்படுகின்றன. இந்த ஆலய வளாகத்திற்குள், செபமாலை மறையுண்மைகளை எடுத்துரைக்கும் சொரூபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நற்கருணை ஆண்டவரை வழிபட உதவும் வகையில் ஆராதனைச் சிற்றாலயமும் இங்கே அமைந்துள்ளது.

பெசன்ட் நகர் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குகையில் ஆரோக்கிய அன்னையின் சொரூபம் உள்ளது வித்தியாசமான காட்சி. சமயம், இனம், மொழி கடந்து அன்னையின் உதவியை வேண்டி, இந்த திருத்தலம் வந்து மெழுகுவர்த்தி ஏற்றி வணங்கும் பக்தர்களின் கூட்டத்தை நாம் எப்பொழுதும் காண முடியும்.

நாள்தோறும் நூற்றுக்கணக்கான அன்னையின் பக்தர்கள் இந்த ஆலயத்துக்கு வந்து வேண்டுதல்களை முன் வைப்பதுடன்ë, கிடைத்த உதவிகளுக்கு நன்றியும் செலுத்துகிறார்கள். தன்னைத் தேடி வரும் பக்தர்களின் குறைகளைத் தீர்ப்பவராக அன்னை மரியா என்றும் செயலாற்றி வருகிறார்.

இங்குள்ள காணிக்கை காட்சியகத்தில் காணப்படும் பொருட்களே, ஆரோக்கிய அன்னை உரிமையுடன் தனது மகன் இயேசுவிடம் இருந்து பெற்றுத்தரும் நன்மைகளுக்கு சான்றாக உள்ளன. ஆகஸ்ட் 29ந்தேதி முதல் தேவமாதாவின் பிறந்தநாளான செப்டம்பர் 8ந்தேதி வரை இங்கு நடைபெறும் ஆரோக்கிய அன்னையின் திருவிழாவில் பங்கேற்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல இடங்களில் இருந்து வருகை தருகின்றனர்.

சென்னை - மயிலை உயர் மறைமாவட்டத்தின் திருத்தலங்களுள் ஒன்றான பெசன்ட் நகர் ஆலயம், சென்னை மாநகரின் வேளாங்கண்ணியாகவே திகழ்கிறது. தொகுப்பு: டி.ஆக்னல் ஜோஸ் கரோல், சென்னை.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum