தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஹன்சிகாவின் மறுப்பு

Go down

ஹன்சிகாவின் மறுப்பு  Empty ஹன்சிகாவின் மறுப்பு

Post  ishwarya Sat Mar 09, 2013 5:14 pm

புதுமுக நடிகர்கள் என்றால் முன்னணி நடிகைகள் கரப்பான்பூச்சியை கண்ட மாதி‌‌ரி உதறி ஓடுவதன் ரகசியம் தெ‌ரியவில்லை. ஹன்சிகாவும் இந்த அலர்‌ஜிக்கு ஆள்பட்டிருக்கிறார்.

முன்னாள் நடிகை ஜெயப்ரதா தனது உறவுக்கார பையனை நாயகனாக்கி தமிழில் ஒரு படம் தயா‌ரிக்கிறார். இதில் ஹன்சிகா ஹீரோயின் என்று தகவல்கள் வந்தன. இதனை அடித்துப் பிடித்து மறுத்திருக்கிறார் ஹன்சிகா.

ஜெய்ரதா ஹன்சிகாவிடம் படத்தின் கதையை சொல்லியிருக்கிறார். ஹன்சிகா எப்போது கதை கேட்டு படத்தை ஒப்புக் கொண்டார். கரன்சியு‌ம், கூட நடிக்கும் ஹீரோவும்தானே முக்கியம். ஜெய்ரதா விஷயத்தில் கரன்சி ஓகே. ஆனால் ஹீரோ புதுமுகம். உதயநிதி ஸ்டாலினைப் போல் பப்ளிக் பிகருமல்ல. ஹன்சிகாவின் தயவில் பிரபலமானால்தான் உண்டு.

வாலு, வேட்டை மன்ன‌ன், சே‌ட்டை, சிங்கம் 2, தெலுங்கில் விஷ்ணு மஞ்சு ஜோடிடியாக ஒரு படம் என்று இந்த வருஷம் முழுக்க பிஸி. கால்ஷீட் நஹி என்று ஜெய்பரதாவை கழற்றிவிட்டிருக்கிறார். ஆக, நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால் எந்த புதுமுக நடிகருடனும் நான் நடிக்கவில்லை என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார் ஹன்சிகா.

இவ்ளோ சீக்கிரம் இன்டஸ்ட்‌ரியை படிச்சிட்டாங்களே.
ஹன்சிகா தமிழ் படம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum