தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மனுக்குலத்தை நேசித்த மகா தேவன்

Go down

மனுக்குலத்தை நேசித்த மகா தேவன் Empty மனுக்குலத்தை நேசித்த மகா தேவன்

Post  meenu Sat Mar 09, 2013 2:54 pm

ஆண்டவராகிய கடவுள் மண்ணுலகையும் விண்ணுலகையும் உருவாக்கியபொழுது மண்ணுலகில் நிலவெளியில் எந்தப் புதரும் தோன்றி இருக்கவில்லை; வயல் வெளியில் எந்தச் செடியும் முளைத்திருக்கவில்லை. ஏனெனில், ஆண்டவராகிய கடவுள் ம ண்ணுலகின் மேல் இன்னும் மழை பெய்விக்கவில்லை. மண்ணைப் பண்படுத்த மானிடர் எவரும் இருக்கவில்லை. ஆனால் நிலத்திலிருந்து மூடுபனி எழும்பி நிலம் முழுவதையும் நனைத்தது. அப்பொழுது ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர்கொண்டான்.

ஆண்டவராகிய கடவுள் கிழக்கே இருந்த ஏதேனில் ஒரு தோட்டம் அமைத்துத் தாம் உருவாக்கிய மனிதனை அங்கே வைத்தார். ஆண்டவராகிய கட வுள் கண்ணுக்கு அழகானதும் உண்பதற்குச் சுவையானதுமான எல்லாவகை மரங்களையும் தோட்டத்தின் நடுவில் வாழ்வின் மரத்தையும் நன் மை-தீமை அறிவதற்கு ஏதுவான மரத்தையும் மண்ணிலிருந்து வளரச் செய்தார். தோட்டத்திற்குள் நீர் பாய்வதற்காக ஏதேனிலிருந்து ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அது அங்கிருந்து நான்கு சிறப்புமிகு ஆறுகளாகப் பிரிந்தது. முத லாவது, பீசோன். இது கவீலா நாடு முழுவதும் வளைந்து ஓடுகின்றது.

அங்கே பொன் விளையும். அந்நாட்டுப் பொன் பசும்பொன். அங்கே நறுமணப் பொருள்களும் வண்ண மணிக்கற்களும் உண்டு. இரண்டாவது ஆற்றின் பெயர் கீகோன். இது எத்தியோப்பியா நாட்டில் ஓடுகின்றது. மூன்றாவது, திக்ரீசு. இது அசீரியாவிற்குக் கிழக்கே ஓடுகின்றது. நான்காவது ஆறு யூப்ரதீசு.
ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும் பாதுகாக்கவும் ஆண்டவராகிய கடவுள் மனிதனை அங்கு கொண்டு வந்து குடியிருக்கச் செய்தார். அவர் மனித னிடம், ‘‘தோட்டத்தில் இருக்கும் எந்த மரத்திலிருந்தும் உன் விருப்பம்போல் கனிகளை உண்ணலாம். ஆனால் நன்மை-தீமை அறிவுறுத்தும் மரத்திலி ருந்து மட்டும் உண்ணாதே; ஏனெனில், அதிலிருந்து நீ உண்டால், உடனே சாவாய்’’ என்று கட்டளையிட்டார்.

பின்பு ஆண்டவராகிய கடவுள், ‘‘மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன்’’ என்றார். பிறகு, மண்ணிலிருந்து எல்லாக் காட்டு விலங்குகளையும் வானத்துப் பறவைகளையும் உருவாக்கி அவற்றிற்கு மனிதன் என்ன பெயரிடுவான் என்று பார்க்க, அவற்றை அவனிடம் கொண்டு வந்தார். உயிருள்ள ஒவ்வொன்றுக்கும் அவன் என்ன பெயரிட்டானோ அதுவே அதனதன் பெயராயிற்று. கால்நடைகள், பறவைகள், விலங்குகள் எல்லாவற்றிற்கும் மனிதன் பெயரிட்டான்; ஆனால், தனக்குத் தகுந்த துணையை மனிதன் காணவில்லை. ஆகவே ஆண்டவரா கிய கடவுள் மனிதனுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச்செய்து, அவன் உறங்கும்பொழுது அவன் விலா எலும்பு ஒன்றை எடுத்துக்கொண்டு, எடுத்த இடத்தை சதையால் அடைத்தார். அவ்வாறு எடுத்த விலா எலும்பை ஒரு பெண்ணாக உருவாக்கி மனிதனிடம் அழைத்து வந்தார்.

அப்பொழுது மனிதன், ‘இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள்; ஆணிடமிருந்து எடுக்கப்பட்டதால், இவள் பெண் எ ன்று அழைக்கப்படுவாள்’ என்றான். இதனால் கணவன் தன் தாய், தந்தையை விட்டு விட்டு தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர். மனிதன், அவன் மனைவி ஆகிய இருவரும் ஆடையின்றி இருந்தனர். ஆனால் அவர்கள் வெட்கப்படவில்லை.’’ (தொடக்க நூல் 2: 5-24) கடவுள் அவர்களுக்கு, ‘‘பல்கிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள், அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், பறவைகள், நிலத் தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்’’ என்ற கடவுள் மனித குலத்தை மிகவும் நேசித்து, அவர்களுக்குப் பெரும் ஆசீ தந்தார்.

இவ்வாறாக உலகப் படைப்பின் சிகரமாக மனுக்குலத்தை நிறுத்தி அங்கே ஒரு ஒழுங்கு முறையைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி கொண்டார் கடவுள். தமது அமைப்பின் அழகையும் ஒழுங்கையும் கண்டு மனநிறைவு அடைந்தார். ஆனால் அவரது மனநிறைவும் ஓய்வும் வெகுகாலம் நீடிக்கவில்லை. வெகு விரைவில் மனிதர் வஞ்சிக்கப்பட்டு, ‘சூழ்ச்சி மிக்க’ அலகையின் வலையில் விழுந்தனர். கடவுள் அனைத்திலும் ஒரு ஒழுங்கமைத்து சீராக்கி வைத்திருந்தார். மனிதருக்கு சுதந்திரத்தையும் ஒரு தனிப்பெரும் ஆற்றலாகக் கொடுத்து அனைத் தையும் ஆளுங்கள் என்று சொல்லி வைத்தார். ஒழுங்கும் சுதந்திரமும் மனுக்குலத்தில் இருக்கும்பொழுது அலகையின் சூழ்ச்சி மனித சுதந்திரம் என் னும் சிந்தனைக்குள் புகுந்து ‘ஆசை’யைத் தூண்டி விட்டு கடவுளின் எல்லையைக் கடந்து கடவுளின் வார்த்தையை அலட்சியப்படுத்த வைத்தது.

அதுவே மனுக்குலத்தின் இடைவிடாத தொல்லையாகவும் வீழ்ச்சியாகவும் அமைந்தது. இன்றுவரை உலகமெங்கும் அலகையின் ஆரவாரங்களைக் காண லாம். பேராசையும் பொருளாசையும் இன்றைய சமூகத்தைப் பலவிதமான சீர்கேடுகளுக்குத் தள்ளியுள்ளது. நிறைவாய் இருந்த மண்ணுலகில் சீர்கே டும் பெருக ஆரம்பித்தது. ஆசை, காமம், பொறாமை, வஞ்சகம், கொலை, நம்பிக்கைத் துரோகம், கொள்ளை, பழி தீர்த்தல் இவை போன்ற இன்னும் பலவிதமான பாவச் செயல்கள் பெருகின. மண்ணுலகில் மனிதர் செய்யும் தீமை பெருகுவதையும் அவர்களின் சிந்தனைகளெல்லாம் நாள் முழுவதும் தீமையையே உருவாக்குவதையும் ஆண்டவர் கண்டார். மண்ணுலகில் மனிதரை உருவாக்கியதற்காக ஆண்டவர் மனம் வருந்தினார். அவரது உள்ளம் துயரம் அடைந்தது.

கடவுள் வேதனை அடைந்தாலும் தாம் படைத்த மனுக்குலம் திரும்பவும் சீரமைக்கப்பட்டு தாம் விரும்பிய ஒழுங்குமுறைக்குத் திரும்ப வேண்டும் என்று ஆசைப்பட்டார். சீர்குலைந்து தன்னைவிட்டுப் பிரிந்து சென்ற மனுக்குலம் திரும்பவும் அழகு பெற்று தம்முடன் இணைக்கப்பட வேண்டும் என்று விரும்பினார். அவருடைய விருப்பமே, உலக மீட்பு என்ற செய லாக்கம் ஆனது. ‘‘கடவுள் விண்ணகம் சார்ந்த ஆவிக்குரிய ஆசி அனைத்தையும் இயேசு கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார்.’’ நாம் தூயவரா கவும் மாசற்றவராகவும் தம் திருமுன் விளங்கும்படி உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மை கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்.

தம் திரும கன் இயேசு கிறிஸ்து வழியாக மனுக்குலத்தில் வாழும் அனைவரையும் தம்முடன் இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதே அவரது திட்டம். கால நிறைவில் விண்ணில் உள்ளவை, மண்ணில் உள்ளவை அனைத்தையும் கிறிஸ்துவின் தலைமையில் ஒன்று சேர்க்க வேண்டும் என்ற திட்டமே அம் மறை பொருள். இந்தத் திட்டம் கடவுளின் வல்லமைக்கு உட்பட்டது. விஞ்ஞான அறிவுக்கு அப்பாற்பட்டது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum