உதயத்தையே எதிர்நோக்கி இருக்கிறது
Page 1 of 1
உதயத்தையே எதிர்நோக்கி இருக்கிறது
உண்மையான கிறிஸ்து பிறப்பு விழா என்பது எல்லா மக்களுக்கும் பறை சாற்ற வேண்டிய ஒரு நம்பிக்கையூட்டும் நற்செய்தியாகும். போர்களாலும் தீவிரவாதங்களாலும் வன்முறைகளாலும் பொருளாதார நெருக்கடிகளாலும் போராட்டங்களாலும் அமைதியையும் மகிழ்ச்சியையும் வளர்ச்சியையும் இழந்து தவிக்கும் மானிடருக்கு இன்று நம்பிக்கை தேவை. இந்தச் சூழலில் கடவுளின் தூதர்களாக, அமைதியின கருவிகளாக நாம் பணியாற்ற அழைக்கப்படு
கிறோம். ‘‘உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!’’ (லூக்கா 2:14) என்று கடவு¬ ளப் புகழ்ந்து பாடும் விண்ணகத் தூதர் பேரணியுடன் நாமும் சேர்ந்து பாடுவதும் செயல்படுவதும்தான் உண்மையான கிறிஸ்துமஸ் ஆகும்.
‘‘நீதிமான்களே ஆண்டவரில் களிகூறுங்கள்; நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே. யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்; புத்தம் புது பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்; திறம்பட இசைத்து மகிழ்ச்சிக் குரல் எழுப்புங்கள். ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக் கைக்கு உரியவை. அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார். அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது’’ (திருப்பாடல்கள் 33: 1-5). இறைவன் அருளும் அமைதியின் தன்மை என்ன? இறைவன் நம்மோடும், நாம் இறைவனோடும் இணைந்திருக்கும் நிலைதான் இயேசு அருளும் அமைதி.
இறையரசு அனுபவம் என்றும் சொல்லலாம். இது தூய ஆவியின் அருட்கொடையாகும். ‘‘இறையாட்சி என்பது நான் உண்பதையும் குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டதல்ல! மாறாக, தூய ஆவி அருளும் அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டது’’ என்கிறார், திருத்தூதர் பவுல் (உரோமையர் 14:17) அவரே நமக்கு அமைதி அருள்பவர் என்றும் அறிக்கையிடுகின்றார். இறை வாக்கினர் ஏசாயா, கிறிஸ்துவை ‘அமைதியின் அரசர்’ என்றும்
அழைக்கிறார். இறைமகன் இயேசு மனுவுருவான நிகழ்வின் கொண்டாட்டம் கிறிஸ்துமஸ் பெருவிழா. இது அனைவருக்கும் மகிழ்ச்சியூட்டும் மாபெரும் விழா. இறைம கனே நமக்காகக் கடவுள் என்ற உயர் நிலையிலிருந்து இறங்கி வந்து, தம்மையே நமக்குக் கொடையாக வழங்கியதன் நினைவாக நாம் கொண்டாடும் விழா.
நமக்கு இது உண்மையான மாபெரும் கொடை. சுயநலமில்லாத அன்பு, கைமாறு கருதாத உழைப்பு, எதிர்பார்ப்பு இல்லாத தியாகம் இவை பிறந்துவிட்டால் அதுவே இயேசுவின் பிறப்பு. அன்பும் நட் பும் எங்கே இருக்கின்றதோ அங்கே இறைவன் பிறக்கின்றார். கடவுள் என்றால் கடந்து நிற்பவர் மட்டும் அல்ல, கலந்து இருப்பவரும் ஆவார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். வாக்கு மனிதரானார், நம்மிடையே குடிகொண்டார். இதுவே இயேசு பிறப்பின் தத்துவம். கடவுள் எப்போதெல் லாம் நம்மில் கலந்து நம்மோடு வாழ்கின்றாரோ அப்போதெல்லாம் நமக்கு மகிழ்ச்சியான வாழ்வு பிறக்கின்றது.
நம்மிடையே வல்லமையுள்ள இறைவன் பிறந்திருக்கின்றார். நம்மைத் தூயவராக்கி, நம்மை நற்செயலில் ஆர்வமுள்ள ஓரினமாக்கி, நம்மை அவருக்குச் சொந்தமாக்கிக் கொள்வார். நமது இறைவன் கருணையே உருவானவர். மனித வாழ்வு மேன்மை அடைவதற்காக, உலகம் சிறப்படைவதற்காக, மனி தன் இன்னொரு மனிதனை அன்பு செய்வதற்காக எல்லாம் வல்ல இறைவன் மண்ணில் பிறந்தார். நாமும் புது மனிதனாய் பிறப்பெடுப்போம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» விநாயகரிடம் என்ன இருக்கிறது?
» பூமி மூழ்கிக்கொண்டு இருக்கிறது
» இன்னமும் வாழ்க்கை இருக்கிறது
» காலடியில் இருக்கிறது புதையல் !
» தெய்வம் எங்கும் இருக்கிறது
» பூமி மூழ்கிக்கொண்டு இருக்கிறது
» இன்னமும் வாழ்க்கை இருக்கிறது
» காலடியில் இருக்கிறது புதையல் !
» தெய்வம் எங்கும் இருக்கிறது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum