தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தேடி மீட்கவே மானிட மகன் வந்திருக்கிறார்

Go down

தேடி மீட்கவே மானிட மகன் வந்திருக்கிறார் Empty தேடி மீட்கவே மானிட மகன் வந்திருக்கிறார்

Post  meenu Sat Mar 09, 2013 2:41 pm

நன்றாகக் கற்றுத் தேர்ந்த அறிவாளி ஒருவர், கடவுளைச் சென்றடைவதற்கான வழியைக் காண எட்டு ஆண்டுகளாகக் காத்திருந்தார். அவர் ஒவ்வொரு நாளும் மனித நடமாட்டம் இல்லாத இடத்தில் தனியே அமர்ந்து இறைவனிடம் ஜெபித்தார். ஒரு ஞானி, ஒரு தீர்க்கதரிசி, உண்மைத் தத்துவத்தை அறிந்த ஒருவரிடம் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதுதான் அவருடைய ஜெபத்தின் எதிர்பார்ப்பு. அப்படி ஜெபத்தில் அவர் அமர்ந்திருந்தபோது, ஒருநாள் அவர் ஒரு குரலைக் கேட்டார்: ‘‘நீ இந்த இடத்துக்குப் போ, அங்கே நீ ஒரு மனிதரைச் சந் திப்பாய். அவர் உனக்கு ஆசீர்வாதத்துக்கும் ஆனந்தத்துக்கும் வழிகாட்டுவார்.’’ அதைக் கேட்டு மகிழ்ந்த அறிவாளி, குரல் சொன்ன இடத்துக்குச் சென்றார்.

அங்கே இருந்த மனிதரைப் பார்த்ததும் திகைத்து நின்றார். ஏனெனில், அவர் கிழிந்த ஆடையுடன் அழுக்காக நின்றிருந்தார். அவர் அந்த மனிதரை உற்றுப் பார்த்தார். அங்கே வேறு யாராவது இருக்கிறார்களா என்றும் பார்த்தார். யாரும் இல்லை. அதனால் அந்த மனிதரைப் பார்த்து, ‘‘உங்களுக்கு இந்தக் காலைப் பொழுது நன்றாக இருக்கட்டும்’’ என்றார். உடனே அந்த ஏழை, ‘‘நான் இதுவரை தீய காலைப் பொழுதையே பார்த்ததில்லை’’ என்றார். ‘‘கடவுள் உமக்கு நல்ல வாய்ப்பைக் கொடுப்பாராக’’ என்றார் படித்த ஆசாமி. ‘‘நான் இதுவரை கெட்ட வாய்ப்பை அனுபவித்ததே இல்லையே!’’ என் றார் அந்த ஏழை. அறிவாளியின் ஆச்சரியம் மேலும் அதிகமானது. ‘‘நீர் மகிழ்ச்சியுடன் இருப்பீராக’’ என்றார். ஏழையோ, ‘‘நான் இதுவரை கவலையு டன் இருந்ததில்லை’’ என்றார்.

உடனே அறிவாளி, ‘‘நீர் சொல்வது எனக்குப் புரியவில்லை; எனக்கு அனைத்தையும் விளக்கமாகச் சொல்ல வேண்டுகி றேன்’’ என்று கேட்டுக்கொண்டார்.
‘‘தாராளமாகச் சொல்கிறேன். எனக்கு உணவு கிடைக்காவிட்டால் நான் கடவுளைப் போற்றுவேன். மழை பெய்தாலும் பனி பொழிந்தாலும் காலநிலை நன்றாக இருந்தாலும் இல்லையென்றாலும் நான் கடவுளைப் போற்றுகிறேன். நான் நிந்தனைக்கு ஆளானாலும் மனிதர் உறவு இல்லாவிட்டாலும் கடவு ளைப் போற்றுகிறேன். எனவே நான் கெட்ட காலையையோ, தீய நாளையோ சந்தித்ததே இல்லை. ‘‘நான் எப்போதும் இறைவனின் காலடியில் வசித்துக் கொண்டிருப்பதால் கடவுள் எனக்கென்று கொடுக்கிற எதுவுமே, அதாவது என் வாழ்வில் எல் லாமே மிகவும் சிறந்ததாகவே இருக்கிறது.

என்னை வந்தடைந்த ஆரோக்கியமோ, நோயோ, சாதகமோ, பாதகமோ, மகிழ்ச்சியோ, துக்கமோ எதுவாக இருந்தாலும் அது கடவுளின் பரிசு என்பதால் நான் அனைத்தையும் மகிழ்ச்சியுடனே ஏற்றுக்கொள்கிறேன். நான் ஒருபோதும் வருத்தப்பட்டதில்லை. என் உள்ளம் என்றென்றும் எதிர்பார்ப்பது கடவுளுடன் இணைந்து வாழ்வதைத்தான். என்னுடைய முழு எண்ணமும் கடவுளைச் சார்ந்தது.’’ ஆச்சரியப்பட்ட புத்திமான், ‘‘கடவுள் உம்மை நரகத்தில் கொண்டுபோய்ச் சேர்த்தால் என்ன செய்வீர்?’’ என்று கேட்டார். ‘‘நரகத்திலா? என்னை அப்படிச் செய்ய முடியாத அளவுக்குக் கடவுள் என்னை நேசிக்கிறவர். அப்படியே அவர் என்னை நரகத்துக்கு அனுப்பினாலும் கூட இரு கரங்களால் அவரைத் தழுவிப் பரவசப்படுவேன்.

ஒன்று பணிவுக் கரம், இன்னொன்று அன்புக் கரம். அவற்றுடன் கடவுளைத் தழுவும்போது, கடவுளும் என்னுடன் நரகத்துக்கு வரவேண்டியிருக்கும். கடவுள் இல்லாத சொர்க்கத்தில் இருப்பதைவிட, கடவுளுடன் நரகத்தில் இருப்பதை விரும்புகி றேன்.’’ அந்த ஏழை மனிதர், முழுமையான அடக்கமும் தன்னையே அர்ப்பணித்தலும்தான் கடவுளிடம் சென்றடைவதற்கான எளிய, உறுதியான, சுலபமான வழிகள் என்று எடுத்துரைத்தார். ‘‘நீர் யார்?’’ என்று கேட்டபோது, ‘‘நான் ஒரு ராஜா’’ என்று பதிலளித்தார். அவர் கைவிடப்பட்டவர், ஆதரவற்றவர் என்பதற்கு உதாரணமாகவே தெரிந் தாலும், அவர் தன்னை ராஜாவாக நினைத்துக் கொண்டார். அவர் இயல்பாக ஒத்துப்போகக்கூடிய வழியில் பயணம் செய்வதற்கு அறிந்திருந்தார்.

தன் பாதையில் வந்த அனைத்தையும் ஏற்றுக்கொண்டார். நடந்த எல்லாவற்றிலும் மகிழ்ச்சியையே கண்டார். அவர் எதையும் எதிர்பார்க்கவில்லை; அவர் எதையும் நம்பியிருக்கவில்லை; அவர் எதையும் விரும்பவில்லை; அவருக்கு எந்தக் குறையும் இல்லை. அப்படியானால் இந்த உலகில் அவர் பெரும் பணக்காரர்தனே! ‘‘பேதுருவும் யோவானும் மக்களிடம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது குருக்களும் சதுசேயர்களும், கோயில் காவல் தலைவரும் அங்கு வந்தார் கள். அவர்கள் மக்களுக்குக் கற்பிப்பதையும் இறந்தோர் இயேசுவின் மூலம் உயிர்த்தெழுவர் என்று அறிவித்ததையும் கண்டு எரிச்சலடைந்து, அவர்க ளைக் கைது செய்தார்கள். ஏற்கனவே மாலையாகி விட்டதால் மறுநாள் வரை காவலில் வைத்தார்கள். அவர்களுடைய வார்த்தையைக் கேட்ட பலரும் நம்பிக்கை கொண்டனர்.

மறுநாள் தலைவர்களும் மூப்பர்களும் மறைநூல் அறிஞர்களும் எருசலேமில் ஒன்று கூடினார்கள். அவர்களுடன் தலைமைக் குருவான அன்னாவும் கயபா, யோவான், அலெக்சாந்தர் ஆகியோரும் தலைமைக் குருவின் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் கூடியிருந்தார்கள். அவர்கள் திருத்தூதர்களை நடுவில் நிறுத்தி, ‘‘நீங்கள் எந்த வல்லமையால் அல்லது எந்தப் பெயரால் இதனைச் செய்தீர்கள்?’’ என்று வினவினார்கள். அப்பொழுது பேதுரு, தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு அவர்களுக்கு மறுமொழி கூறினார்: ‘‘மக்கள் தலைவர்களே, மூப்பர்களே, உடல்நலமற்றிருந்த இவருக்கு நாங்கள் செய்த நற்செயல் எப்படி நிகழ்ந்தது என்பதைக் குறித்து நாங்கள் இன்று விசாரணை செய்யப்படுகிறோம்.

நாசரேத்து இயேசுவின் பெயரால் இவர் நலமடைந்து நம்முடன் நிற்கிறார். இது உங்கள் எல்லாருக்கும் தெரிந்திருக்கட் டும். நீங்கள் இயேசுவை சிலுவையில் அறைந்தீர்கள். ஆனால் இறந்த அவரை கடவுள் உயிருடன் எழுப்பினார். இந்த இயேசுவே, கட்டுகிறவர்களாகிய உங்களால் இகழ்ந்து தள்ளப்பட்ட கல். ஆனால் முதன்மையான மூலைக்கல்லாக விளங்குகிறார். இவராலன்றி, வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால் நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின் கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை. பேதுருவும் யோவானும் கல்வியறிவற்றவர்கள் என்பதைத் தலைமைச் சங்கத்தார் அறிந்திருந்ததால் அவர்களது துணிவைக் கண்டு வியப்படைந்தனர்.

அவர்கள் இயேசுவோடு இருந்தவர்கள் என்பதையும் உணர்ந்து கொண்டனர். நலம் பெற்ற மனிதர் அவர்களோடு நிற்பதால் அவர்களால் ஒன்றும் மறுத் துப்பேச முடியவில்லை. எனவே அவர்கள் பேதுருவையும் யோவானையும் சங்கத்தை விட்டு வெளியேறும்படி ஆணையிட்டு, பின்பு தங்களுக்குள் இது குறித்துக் கலந்து பேசினார்கள். ‘‘நாம் இந்த மனிதர்களை என்ன செய்யலாம்? ஏனென்றால் குறிப்பிடத்தக்க ஓர் அரும் அடையாளத்தை இவர்கள் செய்துள்ளார்கள்; இது எருசலேமில் வாழும் அனைவருக்கும் தெரியும். இதை நாம் மறுக்க முடியாது. ஆகவே இச்செய்தி மேலும் மக்களிடையே பரவா மலிருக்குமாறு இந்த இயேசுவைக் குறித்து யாரிடமும் பேசக் கூடாதென நாம் இவர்களை அச்சுறுத்தி வைப்போம்’’ என்று கூறினார்கள்.

அதன் பின்பு தலைமைச் சங்கத்தார் அவர்களை அழைத்து, ‘‘இயேசுவைப் பற்றி எதுவும் பேசவோ கற்பிக்கவோ கூடாது’’ என்று கண்டிப்பாகக் கட்ட ளையிட்டனர். அதற்குப் பேதுருவும் யோவானும் மறுமொழியாக, ‘‘உங்களுக்குச் செவி சாய்ப்பதா? கடவுளுக்குச் செவி சாய்ப்பதா? இதில் கடவுள் பார் வையில் எது முறையானது என நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்; என்ன ஆனாலும் நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலி ருக்க எங்களால் முடியாது’’ என்றனர். அவர்களைத் தண்டிப்பதற்கு வேறு வழி கண்டுபிடிக்க முடியாததாலும் மக்களுக்கு அஞ்சியதாலும் தலைமைச் சங்கத்தார் அவர்களை மீண்டும் அச்சுறுத்தி விடுதலை செய்தனர். (திருத்தூதர் பணிகள் 4: 1-21)
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தென்னிந்திய மானிட இன இயல்
» எட்கர் தர்ஸ்டனின் தென்னிந்திய மானிட இன இயல்
»  எனது மகன் சதீஷ் பி.இ, படித்து 13 வருடங்களாக தனியார் கம்பெனியில் பணி செய்தான். வயது 36. திருமணமும் அமையவில்லை. பணி உயர்வு, திருமணம் போன்ற விஷயங்களுக்கு பரிகாரம் சொல்லி உதவ பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் மகன் பிறந்திருக்கும் ரிஷப லக்னம் மிகவும் ச
» கடவுளைத் தேடி....
» உண்மையைத் தேடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum