தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திட்டமிடுதலே வெற்றிக்குச் சரியான வழி

Go down

திட்டமிடுதலே வெற்றிக்குச் சரியான வழி Empty திட்டமிடுதலே வெற்றிக்குச் சரியான வழி

Post  meenu Sat Mar 09, 2013 2:39 pm

எதுவுமே சுலபமாக வருவதில்லை. அதற்காகக் கடினமாக உழைக்க வேண்டும். கடின உழைப்பில்லாமல் வெற்றி என்பதே இல்லை. வெற்றி அவ்வளவு சுலபமாக வந்து விடுவதில்லை. நாம் அனுபவிக்கும் எல்லா நன்மைகளும், யாரோ ஒருவருடைய கடின உழைப்பின் பலனேயாகும். கடின உழைப்பும் பயிற்சியும் ஒருவர் செய்கின்ற எந்தக் காரியத்தையும் சிறப்படையச் செய்யும். கடினமாக ஒருவர் உழைத்தால் அவர் மகிழ்ச்சியாக இருப்பார். ஒரு வாத்து நீரின் அடியில் ஓயாது காலால் உதைத்துக்கொண்டே இருக்கும். ஆனால், நீரின் மேலே சீராகவும் அமைதியாகவும் காணப்படும். வெற்றி என்பது செயலாற்றுகிறவர்களுக்குத்தான் கிடைக்கும். இயற்கை பறவைகளுக்கு உணவு தருகிறதே தவிர, அதை அவற்றினுடைய கூடுகளில் கொண்டு போய்
போடுவதில்லை.

‘‘முன்பு யூதர்களால் தோற்கடிக்கப்பட்ட தீமோத்தேயு, எண்ணற்ற அயல் நாட்டவரைக் கொண்ட கூலிப்படையைத் திரட்டினான். ஆசியாவிலிருந்து மாபெரும் குதிரைப் படையையும் சேர்த்துக்கொண்டு யூதேயா நாட்டைப் படைவலிமையால் கைப்பற்றும் எண்ணத்தோடு வந்தான். அப்போது தங்கள் இடையில் சாக்கு உடை உடுத்தியிருந்த மக்கபேயும் அவருடைய ஆட்களையும் கண்டார்கள். இவர்கள் தங்கள் தலைமேல் புழுதியைத் தூவிக் கொண்டு கடவுளிடம் கெஞ்சி மன்றாடிக்கொண்டிருந்தார்கள். பலிபீடத்தின் முன் இருந்த படி மீது குப்புற விழுந்து தங்கள் மீது இரக்கம் காட்டவும் தி ருச்சட்டம் கூறுவதுபோலத் தங்கள் எதிரிகளுக்கு, எதிரிகளாகவும் பகைவர்களுக்கு, பகைவர்களாகவும் இருக்கும் தன்மையை அருள அவரை வேண்டினார்கள்.

வேண்டலுக்குப் பின் தங்கள் படைக்கலன்களை எடுத்துக்கொண்டு அவர்கள் நகரிலிருந்து நெடுந்தொலைவு சென்றார்கள். எதிரிகள் இருந்த இடத்திற்கு அருகில் வந்ததும் அங்கு தங்கினார்கள். பொழுது புலர்ந்ததும் இரு படையினரும் போர் தொடுத்தனர். யூதர்கள் தங்கள் வெற்றிக்கும் புகழுக்கும் தங் கள் வலிமையை மட்டும் நம்பவில்லை; ஆண்டவர்மீதும் நம்பிக்கைக் கொண்டிருந்தார்கள். மற்றவர்கள் மேல் இருந்த ஆர்களுக்குப் படைத்தலைவ னாய் அமைந்தது. போர் கடுமையானபோது ஒளி பொருந்திய ஐந்து மனிதர்கள் பொற்கடிவாளம் பூட்டிய குதிரைகள் மேல் அமர்ந்து யூதர்களை வழி நடத்துவதுபோன்று விண்ணிலிருந்து தோன்றினார்கள். அந்த ஐவரும் மக்கபேயரைச் சூழ்ந்துகொண்டு தங்கள் படைக்கலன்களால் அவருக்குப் பாதுகாப்புக் கொடுத்து, காயம்படாதவாறு அவரைக் காப்பாற்றினர்; பகைவர்கள் மீது அம்புகளையும் தீக்கணைகளையும் வீசினார்கள்.

அதனால் பகைவர்கள் பார்வை இழந்து குழப்பம் அடைந்து சிதறுண்டு ஓட, யூதர்கள் அவர்களை வெட்டி வீழ்த்தினார்கள். கைரபா என்ற படைத்தலைவனுடைய, நன்கு அரண் செய்யப்பட்ட கசாரா என்ற கோட்டைக்குத் திமோத்தேயு தப்பியோடினான். அப்போது மக்கபேயும் அவருடைய ஆட்களும் எழுச்சியுற்றுக் கோட்டையை நான்கு நாட்களாய் முற்றுகையிட்டார்கள். கோட்டைக்கு உள்ளே இருந்தவர்கள் அதன் வலிமையில் நம்பிக்கை கொண்டு இழி சொற்களால் இறைவனைப் பழித்துக் கொண்டிருந்தார்கள். ஐந்தாம் நாள் விடிந்தபோது மக்கபேயின் படையைச் சேர்ந்த இருபது இளைஞர்கள் இத்தகைய இறைப்பழியைக் கேட்டு சீற்றம் கொண்டு, துணிவுடன், மதிலைத் தாக்கி, காட்டு விலங்குபோலச் சீறிப் பாய்ந்து தாங்கள் எதிர்கொண்ட அனைவரையும் வெட்டி வீழ்த்தினார்கள். மற்றவர்கள் மேலே ஏறிச்சென்று எதிரிகளை சுற்றி வளைத்துக்கொண்டு கோட் டைக்குத் தீ வைத்தார்கள்.

அத்தீயைக் கிளறி விட்டு இறைவனைப் பழித்தவர்களை உயிருடன் எரித்தார்கள். மற்றும் சிலர் கதவுகளை உடைத்து எஞ்சி யிருந்த படைவீரர்களை உள்ளே நுழைய விட, அவர்கள் நகரைக் கைப்பற்றினார்கள். ஒரு கிணற்றில் ஒளிந்துகொண்டிருந்த திமோத்தேயுவையும் அவனுடைய சகோதரனான கைரபாவையும், அப்பெல்லோவையும் அவர்கள் கொன்றார்கள். இவற்றையெல்லாம் அவர்கள் செய்து முடித்தபின் இஸ்ரயேல் மீது பேரிரக்கம் காட்டுபவரும் அதற்கு வெற்றியை வழங்குபவருமாகிய ஆண்டவரைப் புகழ்ப்பாக்களாலும் நன்றிப் பாடல்களாலும் போற்றினார்கள்’’ (2 மக்கபேயர் 10: 24-38) அவ்வப்பொழுது நம் நடவடிக்கைகளைச் சோதித்து நன்றாகத் திட்டமிட்டுச் செய்கிறோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வோம். ஏதோ, ஏனோ தானோவென்று திசையே இல்லாமல் போய்க்கொண்டிருப்பதும் பகற்கனவு காண்பதும் திட்டமே இல்லாத செயல்பாடுகளும் நலிவான உள்ளத்தையே காண்பிக்கும்.

நம் ஆழ்மனம் கட்டுப்பாடு இல்லாமல் போய், பிறகு அதுவே நம்மைக் கட்டுப்படுத்த ஆரம்பிக்கும். முழு நினைவுள்ள நம் மனம் முழு வதுமாக வீறுகொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். என்றைக்கும் எப்பொழுதும் அது பூரணமான உணர்வுடன் செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். ஒரு தலைவன் என்ற அதன் நிலைக்கு ஊறு இல்லாமல், அதன் சேவகனை, அதாவது ஆழ்மனதைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். எந்தவித ஆக்கவினையும் இல்லாமல் பகற்
கனவில் அலைபாய்ந்து கொண்டிருந்தால் நம் ஆழ்மனம் முழு உணர்வுகொண்ட மனநிலையை ஆக்கிரமித்துக்கொண்டு விடுகிறது. ஆதலால் அவ்வப் பொழுது தேவையானதும் முக்கியமானதுமான எண்ணங்களே நம் முழு உணர்வு கொண்ட மனநிலையை ஆக்கிரமித்துக் கொள்ளட்டும். பெரும்பாலும் வீணான கற்பனைகளினாலும் தேவையற்ற எண்ணப் போக்கினாலும் கணிசமான வாழ்க்கைப்பகுதி வீணடிக்கப்படுகிறது என்று காணப்பட்டிருக்கிறது.

இந்த சக்தியை முழுவதும் உபயோகமானவற்றைச் செய்யப் பயன்படுத்தலாம் - மக்கபேயரும் அவரது வீரர்களும் திட்டமிட்டுப் போரிட்டது மாதிரி. வயதான மனிதர் ஒருவர் சிறு நகரத்தில் தனியாக வசித்து வந்தார். வருடா வருடம் தனது நிலத்தில் உருளைக்கிழங்கு பயிர் செய்து வந்தார். அதுவே அவர் வாழ்வின் மூலாதாரம். ஆனால் எப்போதும் அவரது ஒரே மகன்தான் நிலத்தை உழுது கொண்டிருப்பான். ஆனால் இந்த முறை அவனால் உ ழுது தர இயலாது. ஏனென்றால் அவன் சிறையிலிருந்தான். முதியவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. சிறையிலிருக்கும் மகனுக்குக் கடிதம் எழுதினார். ‘மகனே! இந்த முறை நீ இல்லாததால் நிலத்தை உழ முடியவில்லை. அதனால் உருளை பயிரிட முடியவில்லை. நான் எப்படி உயிரோடிருப்பேன் என்றும் எனக்குத் தெரியவில்லை’ என்று எழுதினார்.

இரண்டு நாட்களிலேயே மகனிடமிருந்து பதில் வந்தது. அதில், ‘அப்பா தயவு செய்து நிலத்தை உழாதீர்கள். அங்குதான் துப்பாக்கிகளை மறைத்து வைத்திருக்கிறேன்’ என்றிருந்தது. அதன் பொருள் விளங்குமுன்னே, ஒரு பெரிய காவல்படையும் உளவுத்துறையும் அவர் வீட்டில் வந்திறங்கின. அவரது நிலத்தைத் தோண்டி முழுதும் அலசிப் பார்த்து விட்டனர். எதுவும் கிடைக்காமல் சென்று விட்டனர். எதுவும் புரியாத முதியவர் நடந்ததை விளக்கி மகனுக்குக் கடிதம் எழுதினார். மகன் தனது பதிலில், ‘இப்போது உருளைக்கிழங்கு பயிரிடுங்கள். நிலம்தான் உழுதாகி விட்டதே. இதுதான் இங்கிருந்து என்னால் செய்ய முடிந்தது’ என்று எழுதியிருந்தான்.

நாம் எங்கிருந்தாலும் என்ன நிலையிலிருந்தாலும் நாம் கண்டிப்பாக செய்து முடிக்க வேண்டும் என்று ஆழ்மனத்தில் தீர்மானமாகத் திட்டமிட்டுக்கொண் டால் நினைக்கும் காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும். ‘‘அம்மா! எனக்குப் பசிக்கும்போது என்னை எழுப்பி விடு’’ என்று குழந்தை சொல்லிற்று. அதற்கு, ‘‘குழந்தாய், உனது பசியே உன்னை எழுப்பி விடும்’’ என்று சொன்னார். உண்மையாகவே இறைவனிடம் தீவிர அன்பு கொண்டவர் அவரைக் காண்பார். ‘‘ஆண்டவர் கூறுவது இதுவே. சாலை சந்திப்பில் நின்று நோக்குங்கள்; தொன்மையான பாதைகள் எவை? நல்ல வழி எது? என்று கேளுங்கள்; அதில் செல்லுங்கள். அப்போது உங்களுக்கு அமைதி கிடைக்கும்.’’ -(எரேமியா 6: 6)
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum