தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அ‌‌ஜீத் படத்தில் ராணா?

Go down

அ‌‌ஜீத் படத்தில் ராணா? Empty அ‌‌ஜீத் படத்தில் ராணா?

Post  ishwarya Sat Mar 09, 2013 2:30 pm


விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அ‌‌ஜீத் நடிக்கும் பெய‌ரிடப்படாதப் படத்தில் தெலுங்கு நடிகர் ராணா நடிக்கக்கூடும் என்று தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன.

இந்த ஆக்சன் த்‌ரில்ல‌ரில் அ‌‌ஜீத் தவிர நயன்தாரா, ஆர்யா, தாப்ஸி, அதுல் குல்கர்னி, மகேஷ் மஞ்ரேகர், சுமன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கியமான வேடத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் ராணாவிடம் கேட்டுள்ளதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன. ராணாவின் போர்ஷன் குறித்து விஷ்ணுவர்தன் அவ‌ரிடம் விளக்கியதாகவும் கூறப்படுகிறது.

வெற்றிமாறன் படத்தில் நடிப்பதாக இருந்த ராணா சில காரணங்களால் அப்படத்திலிருந்து விலகினார். வெற்றிமாறனும் இதுவரை படத்தை தொடங்கவில்லை. வானம் படத்தை இயக்கிய க்‌ரிஷின் தமிழ், தெலுங்கு இரு மொழிப் படத்தில் நயன்தாராவுடன் ராணா நடித்து வருகிறார். ஆங்காரம் என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படமே ராணாவின் முதல் தமிழ்ப் படமாக இருக்கப் போகிறது.

அ‌‌ஜீத் படத்தில் நடிப்பது குறித்து ராணா இதுவரை இறுதியான முடிவு எதையும் தெ‌ரிவிக்கவில்லை.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum