தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கடவுளைக் காட்டிய ஸ்ரீராமகிருஷ்ணர்

Go down

கடவுளைக் காட்டிய ஸ்ரீராமகிருஷ்ணர் Empty கடவுளைக் காட்டிய ஸ்ரீராமகிருஷ்ணர்

Post  meenu Sat Mar 09, 2013 2:23 pm

நான் இந்தியாவில் தோன்றிய மிகப்பெரிய ரிஷியாகிய ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடன்.

என்னைப் பொறுத்தவரையில் ஸ்ரீராமகிருஷ்ணரின் ஒரு வார்த்தை எனக்கு வேதங்கள், உபநிடதங்கள் ஆகிய எல்லாவற்றை யும் விட மேலானது.
ஸ்ரீராமகிருஷ்ணரின் பெயரை மக்கள் மதிக்கிறார்களா, இல்லையா என்பதைப் பற்றி நான் ஒரு சிறிதும் பொருட்படுத்தவில்லை. என்னுடைய ஒரே நோக்கம் அவருடைய வாழ்வும், வாக்கும் உலகம் முழுவதும் பரப்பப்பட வேண்டும் என்பதுதான். நான் அந்தப் பணிக்கு என் வாழ்க்கையையே அர்ப்பணிக்கத் தயாராக இருக்கிறேன். அவர் ஜகன் மாதாவிடம், ‘‘அம்மா, தீண்டத்தகாதவர்கள் என்று சொல்லப்படுபவர்களின் தொண்டனாக என்னை இருக்கச் செய்’’ என்று பிரார்த்தனை செய்தார்.

அந்த என் தலைவரின் வாழ்க்கையையே நான் பின்பற்ற விரும்புகிறேன்.

இந்த யுகத்தின் அவதார புருஷர் ஸ்ரீராமகிருஷ்ணர் இந்த உலகில் தோன்றிய நாளிலிருந்தே சத்திய யுகம் (பொற்காலம்) ஆரம்பித்துவிட்டது.

புதிய யுகத்திற்கு ஏற்ற யோகம், ஞானம், பக்தி, கர்மம் ஆகியவை இணைந்த ஒரு புதிய மதத்தை அவர் தோற்றுவித்திருக்கிறார்.

‘‘நான் எவ்வளவு காலம் வாழ்கிறேனோ, அவ்வளவு காலம் வரையிலும் கற்க வேண்டியவற்றைக் கற்றுக் கொண்டே இருப்பேன்’’ என்று கூறிய கல்வி கற்காத ஓர் இளைஞர் (ஸ்ரீராமகிருஷ்ணர்), தன்னுடைய தியாகத்தின் வலிமையால் (ஆன்மிக பலத்தால்) பழம் பெரும் பண்டிதர்களை எல்லாம் தன் முன் பணியும்படி செய்தார்.

ஸ்ரீராமகிருஷ்ணர் என்ன செய்தார்?

‘‘நான் கடவுளைப் பார்த்திருக்கிறேன்’’ என்று உறுதியாகச் சொன்ன ஒரே மனிதர் ஸ்ரீராமகிருஷ்ணர்தான். அதுமட்டுமல்ல, ‘‘உன்னையும் இறைவனைக் காணும்படி செய்வேன்’’ என்ற பதிலும் அவரிடமிருந்து கிடைத்தது.

‘‘தாமரை மலர்ந்ததும் அதிலுள்ள தேனைப் பருகுவதற்கு வண்டுகள் தாமாகவே அதை நாடி வருகின்றன. அதுபோலவே உன் ஆன்மா பக்குவப்பட்டதும் அதனால் விளையும் பலன்கள் உன்னைத் தானாகவே வந்தடையும்’’ என்பது, இவர் ஆன்மா பக்குவம் அடைவதைக் குறித்துக் கூறிய அழகான எடுத்துக்காட்டாகும்.

ஸ்ரீராமகிருஷ்ணர் தன் சொந்த ஆன்மிக அனுபவத்தின் மூலம் ஒரு பேருண்மையை உணர்ந்தார்.

அது என்னவென்றால், ‘‘எல்லா மதங்களின் முடிவும் ஒன்றுதான். ஒவ்வொரு மதமும் இறைவனை அடைவதையே போதிக்கின்றன’’ என்பதாகும்.

மதம் என்பது வெறும் வார்த்தை அல்ல; வெறும் பெயர் அல்ல; பிரிவு அல்ல. மாறாக, மதம் என்பது ஆத்ம ஞானம் பெறுவதுதான். ‘‘ஆத்ம ஞானம் பெறுங்கள், பரம்பொருளை அனுபூதியில் நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்’’ என்பதுதான் என் குருநாதர் உலகிற்கு வழங்கிய செய்தியாகும்.

சமயத்தின் பெயரால் சண்டைச் சச்சரவுகளில் ஈடுபடுபவர்களுக்கிடையில் ஒரு சமய சமரசத்தை (சமய நல்லிணக்கத்தை) இந்தப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்படுத்தியவர் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் ஆவார்.

அவர் இருளில் புதைந்து கிடந்த நமது சாஸ்திரங்களின் மீது ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சினார்.

அவர் இந்தியாவின் சநாதன தர்மத்தின் (இந்து மதத்தின்) சிந்தனைகள் எல்லாம் ஒன்று திரண்ட வடிவமாக இருந்தார்.

எல்லாச் சமயங்களின் அரிய அம்சங்கள், லட்சியங்கள், சிந்தனைகள், வழிபாடுகள் ஆகிய மணிகளுக்கிடையில் செல்லும் சரடு போன்ற தார்மீக ஒருமைப்பாட்டுணர்வை அவர் உலகம் அறிந்து கொள்ளும் பொருட்டு எடுத்துக் கூறியிருக்கிறார்.

சமய மறுமலர்ச்சியைப் பண்டைய நாளில் காலந்தோறும் தோற்றுவித்த பெரியோர்களில் மிகவும் உணர்ந்த கருத்துக்களை, கொள்கை களை இக்காலத்திற்கு ஏற்ற வகையில் திருத்தியும், புதிய வடிவம் கொடுத்தும் மக்கள் மனதில் புத்துணர்ச்சியைத் தோற்றுவித்திருப்பவர் மகாபுருஷர் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரே ஆவார். எல்லா மதங்களிலும் அடிப்படையாக இருக்கும் ஒற்றுமையை வெளிப்படுத்தவும், அதைத் தெளிவுபடுத்துவதற்காகவும்தான் என் குருநாதர் இந்த உலகில் தோன்றினார்.

வாழ்க்கையே விளக்கம் வேதங்களுக்கும் அவற்றின் லட்சியங்களுக்கும் உயிருடன் கூடிய விளக்கத்தை - ஒரு யுகம் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டிய இந்திய சமய வாழ்க்கையை - தன்னுடைய ஒரு வாழ்க்கையில் ஸ்ரீராமகிருஷ்ணர் வாழ்ந்து காட்டியுள்ளார்.

வேதங்கள், உபநிடதங்கள், பாகவதம், புராணங்கள் ஆகியவற்றின் அடிப்படை உண்மைகளை நீங்கள் அறிய விரும்பினால் முதலில் ஸ்ரீராமகிருஷ்ணரின் வரலாற்றையும், அவரது உபதேசங்களையும் படியுங்கள்.

அவர் என்ன உபதேசித்தாரோ, அந்தக் கருத்துகளுக்கேற்ற ஒரு சிறந்த முன்னுதாரண மாக வாழ்ந்தார்.

எந்த மகானின் உபதேசங்களை விடவும் அவரது வாழ்க்கை முழுவதுமே எல்லா உபநிடதங்களுக்கும் விளக்கமாக அமைந்திருந்ததோ - இல்லை, உபநிடதங்களின் சாரமே ஒன்று திரண்டு மனித உருவம் பெற்றிருந்ததோ - அந்த மகானின் திருவடிகளின் கீழ் அமரும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது.

இன்னும் தெளிவாகவே சொல்கிறேன், நீங்கள் இதுபோன்ற பரிசுத்தமான வாழ்க்கையைப் பார்த்தோ, படித்தோ இருக்கவே மாட்டீர்கள்.

கருணைக் கடல் எங்கெல்லாம் ஸ்ரீராமகிருஷ்ணரின் திருநாமம் பரவுமோ, அங்குள்ள புழுக்களும் கூட தெய்வீகத் தன்மையைப் பெற்றுவிடும். இல்லை, உண்மையில் பெற்றுக் கொண்டிருக்கின்றன.

‘ஸ்ரீராமகிருஷ்ணருடைய ஆன்மிகம்’ என்ற பெருங் கடலிலிருந்து ஒரு திவலையைப் பெற்றுப் பருகி, இதன் சிறப்பை ஒருவர் உணர்ந்து கொண்டால், அவர் மனித நிலையிலிருந்து தெய்வ நிலைக்கு உயர்த்தப்பட்டு விடுவார்.

தெய்வீக அருளை வழங்குவதில் அவரை மிஞ்சியவர் வேறு யார் இருக்க முடியும்?

இந்தியாவில் இரண்டு பெரிய தீமைகள் இருக்கின்றன. ஒன்று, பெண் குலத்தைக் காலடியில் போட்டு மிதிப்பது. இரண்டாவது, ஜாதிக் கட்டுப்பாடுகளின் மூலம் ஏழை மக்களைக் கசக்கிப் பிழிவது.

ஸ்ரீராமகிருஷ்ணர் தாய்க்குலத்தின் ரட்சகர், பாமர மக்களின் பாதுகாவலர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum