தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மாசிமகம் மாசிமகம் மாசிமகம்

Go down

மாசிமகம்  மாசிமகம்  மாசிமகம்  Empty மாசிமகம் மாசிமகம் மாசிமகம்

Post  meenu Sat Mar 09, 2013 1:23 pm

மாசி மாதத்தில் பௌர்ணமி திதியை ஒட்டி வரும் மக நட்சத்திர தினம் மாசி மகம் என்ற பிரசித்தி பெற்ற திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

இந்நன்நாளில் பெரும்பாலான ஆலயங்களில் தெப்பத் திருவிழா விமரிசையாக நடக்கும்.

இத்திருவிழாவை முதன்முதலில் துவக்கிவைத்தவர், பிரம்மதேவன்.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசி மகத்தன்று கும்பகோணம் மகாமகக் குளத்தில் புனித நதிகள் யாவும் வந்து கலக்கின்றன. அன்று அதில் நீராடினால் மிகுந்த புண்ணியம் கிட்டும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அத்தினமே மகாமகம் என்று போற்றப்படுகிறது.

குளக்கரையை ஒட்டிய ஆலயங்களில், மாசிமகத்தின்போது அசுவினி நட்சத்திரத்தில் கொடி ஏற்றி எட்டாம் நாளில் தேரோட்டமும் பத்தாம் நாள் பஞ்சமூர்த்தி உற்சவமும் நடைபெற்று, மகத்தன்று குளக்கரையில் தீர்த்தவாரியும் நடக்கும்.

மகாமக நாளில் குரு சிம்மராசியிலும் சூரியன் கும்ப ராசியிலும் சஞ்சரிப்பர்.

மகாமகக் குளத்தின் வடகரையில் ராமருக்கு அருளிய காசி விஸ்வநாதப் பெருமான் கோயில் கொண்டிருக்கிறார்.

மகாமகக் குளக்கரையில் உள்ள 16 படித்துறைகளிலும் சிவ சந்நதிகள் உள்ளன. இவை அனைத்தையும் நாயக்க மன்னர்களின் அமைச்சரான கோவிந்த தீட்சிதர் கட்டியதாகக் கூறப்படுகிறது. அவர் ஒரு முறை இந்த மகாமகக் குளக்கரையில் தன் எடைக்கு எடை தங்கத்தை கும்பேஸ்வரருக்கு காணிக்கையாகச் செலுத்தியவர்.

மகாமகக் குளம் கிழக்கு மேற்காக நீள் சதுரமாகவும் வடகரையும் தென்கரையும் சிறிது உள் வளைந்தும் கிழக்கில் குறுகியும் மேற்கில் அகன்றும் மேலிருந்து பார்த்தால் குடம் போலவும் தோற்றமளிக்கும்.

இக்குளத்தில் மூழ்கி எழுந்தால் அமுதக் குடத்திலேயே நீராடியதற்குச் சமம் என்பது ஐதீகம்.

புண்ணியத் தலங்களில் பிறந்தவர்கள் பாவம், கங்கையில் நீராடினால் மறைவது போல காசியில் வசிப்போர் புரியும் பாவங்கள் இந்த மகாமகக் குளத்தில் நீராடினால் மறையும் என்பது நம்பிக்கை.

வருணபகவானை பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து ஈசன் மீட்ட நாளே மாசிமகம் என்போரும் உண்டு.

அம்பிகை மாசி மாத மக நட்சத்திரத்தில் அவதரித்ததால் மாசி மகம் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

மாசிமக நட்சத்திர நந்நாளில் திருக்கோயில்களில் இறைவன் புனித நீர் நிலைகளில் நீராடல் செய்வதை அடியார்கள் தன் திருமுறைகளில் பாடியுள்ளனர். அதில் ஞானசம்பந்தர் மயிலையில் பாடிய பூம்பாவைப் பதிகத்தில் ‘மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்கடலாட்டுக் கண்டான் கபாலீச்வரம் அமர்ந்தான்’ என கபாலி ஆலய கடலாட்டு விழாவைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

‘மாமாங்கமாடி, மதுரைக் கடலாடி, ஸ்ரீரங்கமாடி, திருப்பாற்கடலாடி’ என மாசிமக நீராடலைப் பற்றி கிராமப்புறங்களில் பாடுவது வழக்கம்.

மகாமக தினத்தன்று கங்கா, யமுனா, சரஸ்வதி, காவேரி, குமரி, பாலாறு, சரயு ஆகிய நதிகள் மகாமகக் குளத்தில் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்வதாக ஐதீகம். இதை ‘பூமருவும்...’ எனத் தொடங்கும் அடிகளால் பெரிய புராணத்தில் சேக்கிழார் குறிப்பிடுகிறார்.

மாசிமக நீராடலை பிதுர் மஹாஸ்நானம் என்று மகாபுராண அம்மானை எனும் நூல் குறிப்பிடுகிறது. பித்ருக்களுக்கு ஏராளமான அன்பர்கள் எள்ளும் நீரும் இறைத்து தர்ப்பணம் செய்யும் சடங்கை மாசி மகத்தன்று மகாமகக் குளக்கரையில் காணலாம்.

சிதம்பரத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள பாசமறுத்த துறை, இரண்யவர்மன் எனும் அரசன் சிதம்பரம் நடராஜப் பெருமான் திருமஞ்சன நீராட ஏற்படுத்தியது. இங்கே மாசிமக தீர்த்தவாரி உற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது.

திருப்பராய்த்துறை ஈசனுக்கும் மாசிமக விழாவில் பெருந்திருவமுது எனும் நிவேதனத்தைச் செய்ய நிலம் அளித்த செய்தியை முதலாம் ராஜராஜசோழன் கல்வெட்டில் காணமுடிகிறது.

இரண்டாம் வரகுண பாண்டியன், திருச்செந்தூரில் மாசிமக விழா சிறப்பாக நடைபெற 1400 பொற்காசுகளை நிவந்தமாகத் தந்தது கல்வெட்டில் உள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum