கேடு நினைத்துக் கெடுவானேன்?
Page 1 of 1
கேடு நினைத்துக் கெடுவானேன்?
ஒரு மனிதர் ஒரு முள்செடியை நட்டு அதற்கு நீர் பாய்ச்சி வளர்க்கிறார். முள்செடி செழிப்பாக வளர்கிறது. வேகமாக வீசும் காற்றில் அதன் முள்கள் பாதையெங்கும் பரவுகின்றன. பயணிகள் வேதனைக்கு ஆளாகிறார்கள். கால்நடைகள் துன்பப்படுகின்றன. வேதனையால் ஒவ்வோர் உயிர் துடிக்கும் போதும் அந்த மரத்தை வளர்ப்பவரின் கணக்கில் ஒவ்வொரு பாவம் பதிவாகிறது. அவர் வளர்த்த முள் மரம் இருக்கும்வரை அவருடைய செயலேட்டில் பாவங்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகும்.
கடுமையான வெயிலில் பயணிகள் சிரமப்படுவதை ஒருவர் பார்க்கிறார். நிழல் தரும் மரம் சாலையில் இருந்தால் பயனுள்ளதாக இருக்குமே என யோசிக்கிறார். உடனே ஒரு மரத்தின் விதையை சாலையோரம் நட்டு வைத்து நீர் பாய்ச்சி வளர்க்கிறார். வளர்ந்த மரம் நிழல் பரப்புகிறது. அதோடு கண்கவர் பூக்களையும் சுவை நிறைந்த கனிகளையும் தருகிறது. அம்மர நிழலில் வழிப்போக்கர்கள் தங்குகின்றனர். இளைப்பாறுகின்றனர். பசிப்பிணியையும் உடற்பிணியையும் ஒருசேரப் போக்கி புதுத் தெம்புடன் பயணத்தைத் தொடர்கின்றனர். நலந்தரும் மரத்தைக் கொண்டு நற்பயன் பெறுபவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக அந்த மரத்தை வளர்த்தவரின் கணக்கில் நன்மைகளும் அதிகரிக்கும். அந்த மரம் நிலைத்து நிற்கும்வரை அவருடைய செயலேட்டில் புண்ணியத்தின் நற்கூலிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
இந்த இரண்டும் தனிப்பட்ட முறையில், ஆனால் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தும் செயல்கள். அதற்கேற்ப அவரவர்களுக்கு நன்மையோ தண்டனையோ கிடைக்கும். கூட்டாகச் செயல்பட்டாலும் இப்படித்தான். எடுத்துக்காட்டாக, பத்து பேர் சேர்ந்து ஒரு சூதாட்ட விடுதியை ஆரம்பிக்கிறார்கள். வேறு ஒரு பத்துபேர் சேர்ந்து ஒரு கல்வி நிலையத்தைத் தொடங்குகிறார்கள். சூதாட்ட விடுதி மூலம் தீமை எத்தனை காலம் வரை பரவியிருக்குமோ அத்தனை காலத்துக்குரிய பாவங்களும் அந்த முதல் பத்து பேரையே சேரும். கல்வி நிலையத்தின் மூலம் எத்தனை காலத்துக்கு நன்மைகள் பரவுமோ அத்தனை காலத்துக்குரிய புண்ணியம் அனைத்தும் முதலில் அந்தக் கல்வி நிலையத்தை உருவாக்கிய பத்து பேரையே சேரும். அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: ‘‘நல்வழியின் (ஹிதாயத்) பக்கம் அழைப்பு விடுக்கும் ஒருவருக்கு அவர் அழைப்பை ஏற்கும் மக்களுக்குக் கிடைக்கும் நற்கூலிக்குச் சமமான நற்கூலி கிடைக்கிறது. இதனால் அம்மக்களுடைய நற்கூலி சிறிதளவும் குறைந்து விடாது. தீய வழியின் பக்கம் அழைப்பு விடுக்கும் ஒருவருக்கு அவர் அழைப்பை ஏற்கத் தயாரான அனைத்து மக்களின் பாவங்களுக்குச் சமமான பாவம் உண்டாகிறது. இதனால் அம்மக்களின் பாவங்களில் சிறிதளவும் குறைந்துவிடாது.’’

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தவறாக நினைத்துக் கொண்டிருக்கும் 8 வகையான உறவுமுறைகள்!!!
» பழச்சாறு உடல் நலத்துக்கு கேடு!
» கண்கள் துடித்தால் யாருக்கு கேடு?
» கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு
» இடதுகண் துடித்தால் ஆண்களுக்கு கேடு என்பது ஏன்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum